அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'குற்றவாளிக்காக வாதாடுவது தவறா'

சென்னை: 'குற்றம் சாட்டப்படுபவர்களுக்காக வாதாடுவது, வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக, அந்த குற்றவாளிக்கும், வழக்கறிஞருக்கும் தொடர்பு என, சொல்ல முடியுமா' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவாளிக்காக,வாதாடுவது,தவறா


அவரது அறிக்கை: கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில், சயான், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு, நேரடியாக பதில் சொல்லாத முதல்வர், அவர்களுக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்த, வழக்கறிஞர்கள் குறித்து, வேண்டுமென்றே அவதுாறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என, ஏதோ பெரிய கண்டுபிடிப்பை செய்தவர் போல காட்டி வருகிறார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்காக வாதாடுவது, வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக, அந்தக்

குற்றவாளிக்கும், வழக்கறிஞருக்கும் தொடர்பு என, சொல்ல முடியுமா? கோடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் தொடர்புடைய, கனகராஜுக்கு ஏற்பட்ட கதி, சயானுக்கோ, மனோஜுக்கோ வராமல், அவர்களை பாதுகாப்பது என்பது, சட்டப்படியான நடவடிக்கை தான். அதை, தி.மு.க., வழக்கறிஞரே செய்திருந்தாலும், தவறு இல்லை. அவர்கள், நீதிமன்றத்தில் தான் உதவி செய்கின்றனரே தவிர, வேறு உதவி செய்யவில்லை என, முதல்வர் உணர வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்., கேள்வி


''தி.மு.க., வில் மற்றொருவரை முதல்வராக்கும் துணிவு, திராணி அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளதா,'' என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தலைமைச் செயலகத்தில் எனது அறையின் ஜன்னலில் ஏற்பட்ட கரையான் அரிப்பை நீக்கிவழக்கமான பூஜைதான் நடந்தது. ஸ்டாலின் கூறுவது போல் யாகம் நடத்தவில்லை. முதல்வரை மாற்ற அவரை எதிர்த்து யாகம் வளர்த்ததாக பொய்யான பித்தலாட்ட அரசியலை ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார்.

Advertisement

ஸ்டாலின் கூறியபடி முதல்வர் ஆவதற்கு யாகம் நடத்தலாம் என்றால் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் யாகம் நடத்த வழி இருக்கிறது. ஸ்டாலினுக்கு இந்த மூடநடம்பிக்கையில் நம்பிக்கை இருக்கிறதா? அவர் மூடப்பழக்கத்திற்கு புது அர்த்தம் கண்டுபிடிப்பது தேவையற்றது. எந்த பக்கம் தாவினால் லாபம் கிடைக்கும் என குழம்பிய நிலையில் அவர் உள்ளார்.

எங்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் ஜெ., வழங்கியுள்ள பயிற்சி, திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவோம். பா.ஜ., பற்றி கூறிய கருத்திற்கு கட்சி தலைமையிடம் துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் கொடுத்துள்ளார். அவர் மனதில் பட்டதைபேசி வருகிறார்.கட்சி தொண்டர்களை முதல்வராக்கிய பெருமை அ.தி.மு.க., விற்கு மட்டுமே உண்டு, என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-201900:06:35 IST Report Abuse

தமிழ்வேல் போபால் வாரன் ஆண்டர்சனை பாதுகாப்பாக காங்கிரஸ் MP அனுப்பிவைத்தது "தவறுதான்". அது, தவறு என்றால் அவருக்கு ஆதரவாக ஜெட்லி பேசியது தவறாகாதா ?

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
22-ஜன-201920:55:42 IST Report Abuse

Devanand Louisவர வர ஸ்டாலின் ஒரு காமெடியனாக காட்சியளிக்கிறார் ,தமிநாட்டின் மாண்பை தன் அப்பனைபோல கெடுத்துகொண்டுஇருக்கிறார் ,முட்டுக்கட்டயப்போட்டு தமிழகத்தி வளர்ச்சியைக்கெடுக்கப்பார்கிறார்

Rate this:
Changes - Pkt,இந்தியா
22-ஜன-201919:40:20 IST Report Abuse

Changesகுற்றவாளிகள் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டதே தவறில்லை என்று தான் இன்னமும் உங்களையெல்லாம் தலைவர் என்று தாய் தமிழ்நாடு கட்டி அழுகிறது, அப்படி இருக்கையில் குற்றவாளிக்காக உங்கள் கட்சிக்காரன் வாதாடுவதில் தவறு என்று எந்த மடையன் சொன்னது? உங்கள் கட்சிக்காரனிடமிருந்து வேறு என்ன நாங்கள் எதிர்பார்க்க முடியும்?

Rate this:
metturaan - TEMA ,கானா
22-ஜன-201920:40:47 IST Report Abuse

metturaanமிக சரியாக சொன்னீர்கள் ...

Rate this:
metturaan - TEMA ,கானா
22-ஜன-201920:44:57 IST Report Abuse

metturaanஎன்ன தான் பிரச்சினை ... ? தி மு கா விலும் கூட அறிவாளிகள் இருக்கிறார்கள் என்பதா இல்லை ... குற்றவாளியாகாமல் இருக்க குற்றம்சாட்டப்பட்டவருக்கு குற்றப்பின்னணி கொண்ட கழகத்திலிருந்து வாதாடினார்கள் என்பதா ?? தெளிவா சொல்லுங்க ஒரு முடிவுக்கு வரலாம் ...

Rate this:
metturaan - TEMA ,கானா
22-ஜன-201920:49:02 IST Report Abuse

metturaanகுற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்காக வாதாடுவது, வழக்கறிஞர்களின் தொழில். .. என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு .. சூப்பர் தல ...இத அப்படியே கல்வெட்டுல வெட்டி தஞ்சாவூர் கோவிலிலே கொண்டுபோய் வச்சிட்டு பக்கத்துலயே ஒக்காந்துகிட்டா.. வர போறவங்க கிட்ட விளக்கமா சொல்லி அப்படியே வருங்கால சந்ததியை மேல ஏத்தி விடலாம் .. நல்ல ஐடியா ...

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X