சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று, ஏழு மணிநேரம் விசாரணை நடந்தது.ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது.
இதுவரை, சென்னை,அப்பல்லோ மருத்துவர்கள்,அரசு மருத்துவர்கள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரி கள்,எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று காலை, 10:15 மணிக்கு, விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம், ஏழு மணி நேரம் விசாரணை நடந்தது. நீதிபதிகள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்தார். அதன்பின், அவரிடம், சசிகலா வழக்கறிஞர்,அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞர் ஆகியோர், குறுக்கு விசாரணை
நடத்தினர்.ஜெ.,க்கு அளிக்கப்பட்டசிகிச்சை; அவர் வெளிநாடு அழைத்து செல்லப்படாததுஏன் என்பது உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு, அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
விசாரணைக்கு பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''நீதிபதி ஆறுமுகசாமி கேட்டகேள்விகளுக்கு, பதில் அளித்தேன்.''குறுக்கு விசாரணையும் நடந்தது. வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விக்கும், பதில் கூறினேன். விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு அளித்தேன்,'' என்றார்.
ஆனால், நிருபர்களின் மற்ற கேள்விகளுக்கு, பதில் அளிக்காமல், அவர் கிளம்பினார்.குறுக்கு விசாரணை குறித்து, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது:கடந்த, 2016 அக்., 7ல், அப்பல்லோவில், ஜெ.,வை, 'டிரக்கியோஸ்டமி' சிகிச்சைக்காக, வேறு வார்டுக்கு அழைத்து சென்ற போது, மிக அருகில், அவரை பார்த்ததாக, விஜயபாஸ்கர் கூறினார்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கமிஷனில் ஏற்கனவே கூறியதில், எவ்வித வேறுபாடும் இல்லாமல், அமைச்சரும் தெரிவித்தார். டாக்டர் பாபு மனோகர் சாட்சியம் அளித்தபோது, 'பன்னீர்செல்வம், 2016 அக்., 7ல், ஜெ.,வை பார்த்தார்' என கூறியிருந்தார்.அது குறித்து கேட்டதற்கு, 'அவர் கூறியது சரியாக இருக்கும்' என, விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
'ஜெ., சிகிச்சை குறித்து விவாதிக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை' என்று, சட்ட அமைச்சர் சண்முகம் கூறியுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது என்பதை, அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார். அந்த கூட்டத்தில், வெளிநாட்டு சிகிச்சைக்கு, ஜெ.,வை அழைத்து செல்வது குறித்து, யாரும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், 'ஜெ.,வை சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்வது குறித்து, விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை. டில்லி, எய்ம்ஸ் மருத்துவர்களும், வெளிநாடு அழைத்து செல்லும்படி கூறவில்லை. 'மருத்துவர் என்ற முறையில், நானும் என் கருத்தை, அவர்களிடம் தெரிவித்தேன். துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அனைத்து விஷயங்களும் தெரியும்' என்றும், குறுக்கு விசாரணையில், விஜயபாஸ்கர் தெரிவித்தார். இவ்வாறு, ராஜா செந்துார்பாண்டியன் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply