பதிவு செய்த நாள் :
சீன பொருளாதாரத்தில் தடுமாற்றம்:
கவலையில் வர்த்தக உலகம்

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின் சீன பொருளாதாரம் சரிவில் உள்ளது. இது சீனாவுக்கு மட்டுமின்றி வர்த்தக உலகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சீன பொருளாதாரத்தில்,தடுமாற்றம்,கவலையில்,வர்த்தக உலகம்


உலக அளவில் வர்த்தகதுறையில் சீனாவின் பங்களிப்பு மிக அதிகம். சீன தயாரிப்புகள் ஆக்கிரமிக்காத உலக நாடுகளே கிடையாது என்பதே இப்போதைய நிலை. இருப்பினும் சில ஆண்டுகளாக சீன பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது. 1990ம் ஆண்டுக்குப்பிறகு நடப்பு ஆண்டில் தான் அதன் வளர்ச்சி விகிதம்(ஜி.டி.பி) 6.6 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 6.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் 6.5 சதவீதமாக இருந்தது.

டாவோசில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், இந்த புள்ளி விபரம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா காரணமாசீன பொருளாதாரம் சிக்கலில் தவிக்க முக்கிய காரணமாக கூறப்படுவது டிரம்பின் நடவடிக்கைகள். பேடன்ட்' விதிமுறைகளை மீறி சீனா பொருட்களை தயாரிப்பதாக கூறி அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 25 பில்லியன் டாலர் அளவிற்கு அவர் விதித்த கூடுதல் வரிகள் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு எதிராக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தது.இருப்பினும் அதிகம் பாதிக்கப்பட்டது சீனா தான். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சீன நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.

அலைபேசி தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை நிறுவி விற்பனையும் செய்து வருகின்றன. அதனால் இந்தியாவிலும் சீனாவின் விற்பனை சந்தை பாதிக்கப்பட்டது.

பிரான்சில் பிரெக்சிட் பிரச்னை, அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் போன்றவற்றால் வர்த்தக உலகம் தடுமாற்றத்தில் உள்ளதால் இந்த பாதிப்பு இருப்பதாக சீன பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

'ஆப்பிளின்' கணிப்பு:


ஆனால் சீன பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதை முன்கூட்டியே கணித்தது 'ஆப்பிள்' ஐ போன் நிறுவனம். இதனால் தனது தயாரிப்புகளை குறைத்துக்கொண்டது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு முடிவு கட்டும் விதத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்க-சீன வர்த்தக பிரதிநிதிகள் பீஜிங்கில் சந்தித்து பேசினர். சீனா சில பொருட்களுக்கு வரி சலுகை வழங்கியது.

ஆனால் அமெரிக்கா தனது நிலையில் உறுதியாக இருந்தது. இதனால் 2 நாட்கள் நடந்த கூட்டம் எந்த தெளிவான முடிவும் இன்றி முடிந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக டிரம்ப் கூறும்போது, ''சீன பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. இதை மனதில் கொண்டு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,'' என கூறியிருந்தார். இதை திட்டவட்டமாக சீன வர்த்தக அமைச்சகம் மறுத்தது. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரம் டிரம்ப் கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது.

தடுக்க தீவிரம்:


கடந்த ஆண்டு துவக்கத்திலேயே பொருளாதார சரிவை உணர்ந்த சீன அரசு சில தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதன் விளைவாக சில பிரிவுகளில் வளர்ச்சி இருந்தது. தொழில்துறை 5.7 சதவீதம், சில்லறை விற்பனை 8.2 சதவீதம், அசையா சொத்து முதலீடு 5.9 சதவீதம் என இருந்தன. இம் மூன்று துறைகளும் இணைந்து சீன பொருளாதாரம் பெரிய அளவில் சரியாமல் தடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். பொருளாதார சரிவை தடுக்க அரசும், சீனாவின் மத்திய வங்கியான மக்கள்வங்கியும் தீவிர முயற்சிகளை துவங்கியுள்ளன.

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை சற்று நிறுத்திவிட்டு உள்நாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாகியுள்ளன.

Advertisement

பண புழக்கத்தை அதிகரிக்கவும், பொருள் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. வட்டி குறைப்புக்கு பதிலாக கடன் வழங்குவதை எளிமையாக்குதல், வங்கி கையிருப்பு விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பெரு நிறுவனங்கள் தொழில் துவங்க, சில்லறை விற்பனை சந்தைகளில் உள்ள இடர்ப்பாடுகளை நீக்க முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர சீனஅதிபர் ஜீஜின்பிங்கின் பொருளாதார ஆலோசகரான லியூஹீ இந்த மாத இறுதியில் வாஷிங்டன் செல்ல உள்ளார். இது பலனளிக்கும் என இருதரப்பும் எதிர்பார்க்கின்றன. ஆனால் அமெரிக்க அரசுத்துறை முடக்கம் நீடித்தால் பேச்சுவார்த்தையில் மேலும் தள்ளிப்போகலாம்.சீனாவில் ஏற்படும் ஒவ்வொரு அசைவும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கக்கூடியது. எனவே சீனாவில் ஏற்படும் பாதிப்புகளை வர்த்தக உலகம் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

இது வரை இருந்த நிலையில் சீனா இல்லை. உடனடியாக தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை சீனா முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்க ஏற்கனவே செய்த அனைத்தும் பயனற்று போவதை சீனா உணர வேண்டும். மாற்று யோசனைகளுக்கு பெய்ஜிங் இடம் தர வேண்டும். இல்லையேல் சரிவது சீனா மட்டுமல்ல... உலக பொருளாதாரமும் தான்.
- கேத்ரினா எல், மூடி ஆய்வு நிறுவனம்


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Antony Raj - tirunelveli,இந்தியா
22-ஜன-201909:46:17 IST Report Abuse

Antony Rajஎப்பொழுதுமே ஒரு நாட்டை மற்றும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தால் எல்லோருக்கும் பாதிப்பு வரும். சீனாவின் இறுமாப்பு இதுவாகத்தான் இருந்தது. நான் சரிந்தால் எல்லோரும் சரிவார்கள் அதனால் என்னை எவரும் சரிய விடமாட்டார்கள் என்று. அமெரிக்கா அவர்களுக்கு சிறந்த பாடத்தை படித்து காண்பித்து விட்டது. இத்தருணத்தில் இந்தியா தனது பலஹீனத்தில் இருந்து மீண்டு சிறந்த உற்பத்தி சக்தியாக மாறினால் நாம் எப்பொழுதுமே உயர்ந்து நிற்கலாம்.

Rate this:
Svs yaadum oore - chennai,இந்தியா
22-ஜன-201908:01:38 IST Report Abuse

Svs yaadum ooreசீனாவின் பொருளாதாரம் எப்படி போனால் நமக்கென்ன??... ஜப்பானும் இது போலத்தான் ஓஹோ என்று வளர்ந்தது . பிறகு நின்று போனது . சீனா விற்கு இந்தியாவின் ஏற்றுமதி குறைவு . அவர்களிடமிருந்து நாம் வாங்கும் பொருட்கள்தான் அதிகம் . அது நின்று போனால் அந்த பொருளை நாமே இங்கே தயாரித்து கொள்ளலாம் . சீனா பட்டாசுகள் சிவகாசி பட்டாசை முடக்கியது போல்தான் . சீனா பட்டாசுகள் தரமும் மிக குறைவு என்கிறார்கள் . சீனா பேட்டண்ட் அதிகரித்துள்ளது உண்மைதான் . இந்தியா பேட்டண்ட் அதிகரிப்பதற்கு நல்ல கல்லூரிகள் , பல்கலை வேண்டும் .தமிழ் நாட்டில் துணை வேந்தர் கூட லஞ்சம் வாங்கி நியமிப்பதை நிறுத்த வேண்டும் . தமிழனுக்கு பகுத்தறிவு , பட்டறிவு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் .டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் இங்கு தயாரித்த பொருள் தான் . இங்குள்ள வெட்டி தனமான போராளிகளை முடக்கி , கல்வி , முன்னேற்றம் என்று கவனம் செலுத்தினாலே தமிழ் நாட்டில் பேடென்டின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் .

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜன-201907:07:29 IST Report Abuse

ஆரூர் ரங்கவலையே படவேண்டாம் சீனாவைக் காப்பாற்றத் தான் நம் ஊரில் ரோடு போடாதே ஆலைகளை மூடுன்னு என்றுமே சேராத கான்கிராஸ், கம்மிகள் அர்பன் நக்சல்கள்கூட இணைந்து போராடி உதவுகிறார்களே . என்னவொரு கடும் உழைப்பு?

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X