சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்தவ அமைப்பின் செயலால் சர்ச்சை

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (50)
Advertisement
 கிறிஸ்தவ அமைப்பின் செயலால் சர்ச்சை

காஞ்சிபுரம்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், பெண் குழந்தைகளுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது, உத்திரமேரூர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மருதம். இந்த கிராமத்தில், 10 ஏக்கரில், தனியாருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில், கிறிஸ்தவ அமைப்பைச் சார்ந்த, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, 5 வயதிற்கு உட்பட்ட, பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.அந்த கிராமம் மட்டுமின்றி, கன்னிக்குளம், புத்தளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.இது, மதமாற்ற நடவடிக்கையாக இருக்கலாம் என, அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அந்த பண்ணைத் தோட்ட, பெண் நிர்வாகி கூறியதாவது:கிறிஸ்தவ அமைப்புகள் ஒருங்கிணைந்து, இந்த உதவியை வழங்குகிறோம். மூன்று ஆண்டுகளாகவே, இது போல வழங்கிஉள்ளோம்.இந்த பண உதவி, குழந்தைகள் பராமரிப்பிற்கு தானே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
27-ஜன-201919:25:03 IST Report Abuse
Parthasarathy Ravindran . மதத்தை விற்க இப்பொழுது குழந்தைகளை பயன்படுத்துக்குறீகள். திருடன் எப்பொழுதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை. மதத்தை விர்க்குறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை. எல்லாவற்றையும் துடைத்து போட்டு விட்டு இந்த வேலையை செய்கிறீர்களா. அரசியல் வாதிகள் மாநாட்டிற்கு காசு கொடுத்து கூட்டத்தை சேர்ப்பது போல் செய்கிறீர்கள். வாட்டிகன் உங்களுக்கு கூலி நன்றாக தருகிறதோ? மக்களின் பண தேவையை உபயோகித்து இந்த வேலை செய்கிறீர்களே வெட்கம் இல்லையஆ உங்களுக்கு. கந்து வட்டி கூட்டத்தை விட கீழ்தரமானவர்கள்.
Rate this:
Share this comment
somari - NEW DELHI,இந்தியா
28-ஜன-201916:19:30 IST Report Abuse
somariசும்மா தெரியாமல் முட்டாள்தனமாக எழுதாதே. நீயும் உதவ மாட்டே அடுத்தவரையும் உதவ விட மாட்டே...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
27-ஜன-201913:31:41 IST Report Abuse
SENTHIL நடுநிலை நக்கிகளின் பதில் என்னவோ இந்த செயலுக்கு....... ஆடு நனைதுன்னு ஓநாய் அழுது, ஆட்டை தனது வீட்டுக்குள் வரச்சொல்லுறதும், கேட்டா உதவி பண்ணுறேன்னு ஓநாய் சொல்லுறதும் நம்ம நாட்டுல வருஷமா நடக்குறது தானப்பா..
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
27-ஜன-201912:45:55 IST Report Abuse
rishi அப்படித்தானே ஆரம்பிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் மதம் மாற்றிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X