அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பதவி விலக ஜெயகுமார் விருப்பம்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, பல கட்சிகள் முன்வந்துள்ளன,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, வரவேற்கத்தக்க விஷயம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை, அரசியலில் பயன்படுத்த வேண்டிய அவசியம், அனைவருக்கும் வந்து
 ஸ்டாலின் பதவி விலக  ஜெயகுமார் விருப்பம்

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, பல கட்சிகள் முன்வந்துள்ளன,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, வரவேற்கத்தக்க விஷயம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை, அரசியலில் பயன்படுத்த வேண்டிய அவசியம், அனைவருக்கும் வந்து விட்டது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார். இப்போது, சென்னை, தலைமை செயலகத்தில், புகை வந்ததற்கும், சி.பி.ஐ., விசாரணை கேட்பார் என, தெரிகிறது.குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்கும் கட்சியாக, தி.மு.க., உள்ளது. அதற்காக, ஸ்டாலின், தி.மு.க., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டும்.லோக்சபா தேர்தலில், எங்களுடன் கூட்டணி அமைக்க, பல கட்சிகள் முன்வந்துள்ளன. அவற்றுடன் பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும், விரைவில் குழுக்கள் அமைக்கப்படும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஜன-201909:29:25 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜெயக்குமார் ஸ்டாலின் பதவிக்கு போக விருப்பமா
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
22-ஜன-201916:08:07 IST Report Abuse
பிரபு ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, பல கட்சிகள் முன்வந்துள்ளன,'' - ஆமாம் நீங்க தான் தைரியமான ஆளாச்சே. தனித்து நிற்க வேண்டியதுதானே?
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-ஜன-201911:55:22 IST Report Abuse
ganapati sb பிரதமர் மோடி சென்ற வருடம் இலங்கை மலையக தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி பேசிய பொழுது இங்கே இலங்கையில் பிறந்த MGR இந்தியாவின் சிறப்பான முன்னணி அரசியல் தலைவராக உயர்ந்தார் என பேசினார் மேலும் MGR பொருளாதார அடிப்படையில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க நினைத்ததை மோடி நிறைவேற்றி உள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X