'கண்ல காச காட்டப்பா'; ர.ர.,க்கள் பாட்டு!

Updated : ஜன 22, 2019 | Added : ஜன 22, 2019 | |
Advertisement
தைப்பூசம் என்பதால், சித்ராவும், மித்ராவும், காலேஜ் ரோட்டிலுள்ள கொங்கணகிரி கோவிலுக்கு சென்றனர். அளவுகடந்த கூட்டம் இருந்தாலும், அனைவரும் பொறுமையாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அதன்பின், புதிதாக அமைக்கப்பட்ட கிரிவலப்பாதையில் சென்ற இருவரும், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர். பிரசாதத்தை சாப்பிட்டவாறே மித்ரா, ''கலெக்டர் கூப்பிட்டு பேசியும்,
 'கண்ல காச காட்டப்பா'; ர.ர.,க்கள் பாட்டு!

தைப்பூசம் என்பதால், சித்ராவும், மித்ராவும், காலேஜ் ரோட்டிலுள்ள கொங்கணகிரி கோவிலுக்கு சென்றனர். அளவுகடந்த கூட்டம் இருந்தாலும், அனைவரும் பொறுமையாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின், புதிதாக அமைக்கப்பட்ட கிரிவலப்பாதையில் சென்ற இருவரும், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர். பிரசாதத்தை சாப்பிட்டவாறே மித்ரா, ''கலெக்டர் கூப்பிட்டு பேசியும், ப்ரமோஷன் வேண்டாம்னு போயிட்டாங்களாம்,'' என ஆரம்பித்தாள்.

''என்னடி, ஆரம்பத்திலேயே புதிர் போடுற?''

''இல்லக்கா. ஊரக வளர்ச்சித்துறையில, பதவி உயர்வு வேண்டாம்னு, பதவி இறக்கம் செய்யணும்னு, கடிதம் கொடுத்த, மூணு பி.டி.ஓ.,வை, துணை பி.டி.ஓ.,வா பணி இறக்கம் வாங்கிட்டாங்க. மூணு பேர்கிட்ட, கலெக்டர் பேசியும் கூட, தங்களோட முடிவுல இருந்து பின்வாங்கலையாம்,''

''இல்ல மித்து. எனக்கு தெரிஞ்சு, திருப்பூர் மாவட்டம் உருவான, 10 வருஷத்துல, ப்ரமோஷன் வேண்டாமுன்னு இவங்கதான் சொல்லியிருக்காங்க. ைஹயர் அபிஷியல்ஸ் சொல்லற மாதிரி, 'வசூல்' பண்ண முடியாதுன்னுதான் இப்படி முடிவு எடுத்திட்டாங்கனு, ஒரு 'டாக்' ஓடுதுப்பா,''

''இருந்தாலும், இருக்குங்க்கா, தேர்தல் வந்தாச்சுனு, 'லிஸ்ட்' தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்?'' என்றாள் மித்ரா.

''ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். லோக்சபா தேர்தல் வருவதால், ஒரே இடத்துல, மூணு வருஷத்துக்கு மேல இருந்த, அதிகாரிங்களை 'டிரான்ஸ்பர்' செய்யப்போறாங்க,''

''அதுக்காக, உதவியாளர் நிலையில துவங்கி, கலெக்டர் வரைக்கும், எல்லோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்னு, தேர்தல் கமிஷன் 'கறார்' அறிவிப்பு செஞ்சிருக்கு. வாக்காளர் இறுதி பட்டியல் வெளியானதும், அடுத்தகட்ட பணி துவங்கிவிடும் என்பதால், ஒரு வாரத்துக்குள்ள 'லிஸ்ட்' தயாரிக்கனும், 'கட் அண்ட் ரைட்டா' சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

அப்போது, கிரிவலம் வந்த பக்தர் ஒருவர், சாவகாசமாக உட்கார்ந்து, பிளாஸ்டிக் பேக்கில் கட்டப்பட்ட சாம்பாரை பிரித்து, சாப்பிட்டு, பையை வீசி சென்றார்.இதைப்பார்த்து வேதனைப்பட்ட சித்ரா, ''பிளாஸ்டிக் ஒழிப்புல, உணவு பாதுகாப்புத்துறை ரொம்ப 'ஸ்லோ'வா இருக்குதுன்னு சொல்றாங்க,'' என்றாள்.

''எப்படிக்கா சொல்றீங்க?''

''கார்ப்ரேஷனில் மட்டும்தான், பிளாஸ்டிக் வியாபாரிகளிடம் அடிக்கடி 'ரெய்டு' நடத்தி, பிளாஸ்டிக் பறிமுதல் செஞ்சு கட்டுப்படுத்தி இருக்காங்க. பலருக்கும் 'பைன்' போட்டதால, மத்தவங்க ஓரளவு திருந்திட்டாங்க,''

''ஆனா, உள்ளாட்சி அமைப்புகளும் கண்டுக்கல; உணவு பாதுகாப்புத்துறையும், இந்த விஷயத்தில் 'கப்சிப்' ஆகிட்டாங்க. என்னன்னே தெரியலை,''

''ஆமாங்க்கா. நீங்க சொல்றது நுாற்றுக்குநுாறு சரிதான். சிட்டியிலும் சரி, கிராமத்திலும் சரி. பாலிதீன் பாக்கெட்டில்தான் சாம்பார், ரசம், டீ கொடுக்கறாங்க. ஊராட்சி பணியாளர் போய் சொன்னா, வியாபாரம் ஆகலைனா, வரி கட்ட மாட்டோம்னு, கடைக்காரங்க மிரட்றாங்களாம். இந்த விஷயத்தில், அதிகாரிங்க கொஞ்சம் கவனம் எடுத்தா பரவாயில்லை,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.

உடனே, சில்வர் பாத்திரத்தில், தான் தயாராக கொண்டு வந்திருந்த சாப்பாட்டை எடுத்து, மித்ராவுக்கு கொடுத்த சித்ராவும், சாப்பிட ஆரம்பித்தாள். அப்போது, குளிர்காற்று வீசியது.''அடடா.. ரொம்ப சூப்பரா இருக்குதில்ல மித்து..''

''ஆமாங்க்கா. தலை நடுங்கும் குளிரா இருந்தாலும், சமூக நலத்துறை ஆபீசர்களுக்கு வேர்த்து கொட்டுதாம்,'' என்றாள் மித்ரா.

''ஏன் அவங்களுக்கு என்ன அவ்வளவு பயம். ஒருவேளை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சுத்திட்டு இருக்காங்களா?'' என்றாள் சித்ரா.

''அதில்லைக்கா. திருப்பூரில் குழந்தை திருமணம் நடக்கறத தடுக்க முடியலையாம். பனியன் கம்பெனியில் வேலை பார்க்குற வெளி மாவட்டத்தை சேர்ந்தவங்க, சத்தமில்லாம, சின்ன வயசு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடறாங்களாம். இவங்க 'லேட்டா' போயி, பொண்ணு, மாப்பிள்ளையை பிரிச்சு வச்சுட்டு வர்றாங்க,''

''இந்த விஷயத்தை முன் கூட்டியே எப்படி தெரிஞ்சிக்கறதுன்னு, யோசனை மேல் யோசனை செய்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.சில்வர் பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை குடித்த மித்ரா, ''லஞ்சத்தில் சிக்கிய அதிகாரியால் சில அதிகாரிகள் கலக்கத்தில் இருக்காங்களாமே,'' என்றாள் மித்ரா.

''உண்மைதான். 'பேட்டை'யில் உடும்பு பிடியாக இருந்து கொண்டு, டிரான்ஸ்பர் வாங்காமல் பணியாற்றிய ஒரு அதிகாரி மனையிட அப்ரூவல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிவிட்டார். அவரால், பயன்களை அனுபவித்து வந்த சில உயர் அதிகாரிகள் இப்போது கையை பிசையறாங்களாம்,''

''அடடா.. அப்புறம் என்னாச்சுங்க?''

''அது மட்டுமில்ல. அதுல இன்னொரு விவகாரமும் இருக்கு. அவரு, அதே ஏரியாவில், ஒரு வருஷத்துல, 11 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் செய்து நல்லபேர் வாங்கியிருக்காராம். ஆனா, அந்த பணிகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்யணும். அதில், பல முறைகேடு நடந்திருக்குன்னு, ஒரு தரப்பு மேலிடத்துக்கு 'பெட்டிஷன்' போட்டுட்டாங்களாம். அதனால, ஆய்வு நடத்தினால் யாரெல்லாம் சிக்குவாங்கன்னு தெரியலை. இதனாலயும் சில ஆபீசர்கள் கலங்கிட்டு இருக்காங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.

கிரிவலப்பாதையில் வந்த கோவில் ஊழியர்கள், 'சிசிடிவி' பொருத்தும் இடங்களை 'மார்க்கிங்' செய்து கொண்டிருந்தனர். அதில், ஒருவர் தனது மொபைல் போனில், 'ஏம்பா.. ரமேஷ்குமார், நீ, திருந்தவே மாட்டீயா. எவ்ளோ தடவை சொல்றது. நல்ல கடையில பொருள் வாங்குன்னு. இப்பபாரு, இந்த ஒயர் சீக்கிரமா 'கட்'ஆகுது,' என்ற சலித்தவாறே பேசினார்.

அதைப்பார்த்த மித்ரா, ''கேமரா பதிவு கிடைத்தும் கூட சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்காமல் போலீசார் காட்டின மெத்தனம் தெரியுங்களா?''

''ம்..ஹூம்.. தெரியாது. நீயே சொல்லு,''

''மங்கலம் பக்கத்துல ஆட்டோ எரிச்சாங்க இல்லையா. பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க் 'சிசிடிவி' பதிவு கிடைச்சும், போலீசார், ரொம்ப 'ஸ்லோ'வா இருக்காங்களாம். அதேமாதிரி, செல்லப்பபுரம் மூணாவது வீதியில், மாற்றுத்திறனாளி ஒருவர், மொபைலில் பேசிட்டு நின்றிருக்கிறார்.அந்த வழியாக வந்த ஒருத்தன், அவரின் மொபைல் போனை பறிச்சுட்டு, ஓடிட்டான். அவரால், விரட்டிப் பிடிக்க முடியலை. அந்த வழியாக வந்த ஒருவரோட போயும் பிடிக்க முடியவில்லை. அந்த வழியில் கிடைச்ச 'சிசிடிவி' பதிவுகளை கொண்டு போலீசார் யாரையும் பிடிக்கலையாம். அப்பகுதிக்கு ரோந்து செல்லும் போலீசார் ரொம்ப நாளா வர்றதில்லைன்னும், ஏரியா மக்கள் 'கம்ப்ளைன்ட்' பண்றாங்க்கா,''

''ஏன்..மித்து. 'இ-பீட்' முறை இருந்தும் கூட, ரோந்து போறதுக்கு 'டிமிக்கி' கொடுக்கறவங்களை என்னன்னு சொல்றது?'' என்று சித்ரா சொன்னதும், ''சரி போலாங்க்கா.. தேர் இழுத்துடுவாங்க...'' என்று சொன்ன மித்ரா எழுந்தாள்.சித்ராவும் நடந்து கொண்டே, ''பகுத்தறிவு பேசுவது, ஆத்திகத்தை கிண்டலடிப்பது எல்லாம் சில திராவிட கட்சி தலைவர்கள் மேடையில் மட்டும்தான்,'' என்றாள்.

''இது வழக்கம்தானே. இதில் என்ன புதுசுங்க்கா?'

''அட.. போன வாரம் சிவன்மலையில், தேர்த்திருவிழா கொடியேற்ற பூஜையில், தி.மு.க., 'மாஜி' மினிஸ்டர் ஒருத்தர், பயபக்தியோடு சுவாமி தரிசனம் செய்து, பிரசாதம் வாங்கி கொண்டார். அப்புறம் கோவில் நிர்வாகம் தந்த மரியாதையையும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிட்டாராம்,''

''ஓேஹா.. யாருங்க அந்த பிரபலம்?''

''உனக்கு தெரியாமலா. நீதான், தகப்பன் 'சாமி'க்கே புத்தி சொல்லும் 'நாதன்' ஆயிற்றே,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.

''அக்கா... கேட்க மறந்துட்டேன். ஆளுங்கட்சி நிர்வாகியோட 'பினாமி' நடத்துற கிளப்பில், ரெய்டு நடந்துச்சாம். தெரியுங்களா?''

''ஓ.. நல்லா தெரியுமே. கருவம்பாளையத்தில், பணம் வைச்சு சூதாட்டம் நடக்குறது தெரிஞ்சு, தெற்கு ஏ.சி., தலைமையில், போலீசார் ரெய்டு போய், 2 லட்சம் ரூபாயை பிடிச்சு, 47 பேர் மேல, கேஸ் போட்டாங்க. உடனே, நிர்வாகி, நேரா ஸ்டேஷனுக்கு போய், ரெண்டு பணி நேரம் உட்கார்ந்து, தன்னோட ஆட்களுக்கு ஜாமின் வாங்கி கொடுத்தாராம். அப்புறமா, எல்லோரையும், மினி பஸ்சில், தன்னோட கிளப்புக்கு கூட்டிட்டு போய், சாப்பாடு போட்டுத்தான் அனுப்பிச்சாராம்,''

''அடேங்கப்பா... ரொம்ப பாசக்காரரோ?''

''அட.. நீ, வேற. உள்ளாட்சி தேர்தல் வந்தால், இவங்கள வைச்சுதான், வேலை செய்யோணுமாம். அதுமில்லாமல், 'மாஜி'யோட ஆதரவாளர் என்பதால், விஷயம் வெளியே வரக்கூடாதுன்னு, ஸ்பீடா வேலை செஞ்சாராம். ஆனாலும், செய்தி காட்டுத்தீயாக பரவி, எல்லாத்துக்கு தெரிஞ்சு போச்சுங்கறது தனிக்கதை,''கோவில் ஒலிபெருக்கியில், 'தேர் சக்கரத்துக்கு ஜன்னை போடும், 'மணி' எங்கிருந்தாலும், உடனே வரவும்,' என்ற அறிவிப்பு கேட்டது.''ஏங்க்கா.. ஆளுங்கட்சி படுமந்தமாக இருக்கிற கதை உனக்கு தெரியுமா?'' மித்ரா கேட்டாள்.

''அட.. பக்கத்துல இருக்கும் கோவை லோக்சபா தொகுதியில், பூத் கமிட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும், அந்த மாவட்ட அமைச்சர் கொடுத்திட்டாராம். ஆனா, இங்க, அமைச்சரும் சரி, 'மாஜி'யும் சரி, எம்.எல்.ஏ.,க்களும் கண்டுக்காம இருக்கிறாங்கன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி தள்றாங்களாம்,''

''இப்படியே போனா, எப்படி ஜெயிக்கறதாம்னு, எல்லோரும் கோவத்தில் இருக்காங்களாம். அதை எலக்ஷன் டைமில் காட்டறதுக்கும் ரெடின்னு சொல்றாங்கப்பா,'' என்றாள் சித்ரா.

அப்போது தேர் அசைந்தாடி வரவே, சுவாமியை தரிசனம் செய்து புறப்பட்டனர். ''ஏன்... மித்து. லிங்கேஸ்வரர் ஊருக்கு வடக்கால உள்ள ஸ்டேஷனில், காதல் ஜோடியை பிரிப்பதற்கு பணம் விளையாடியதாம்,'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க... திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை தேடிப்பிடித்து, ஸ்டேஷனுக்கு வரவழைத்து, பிரிச்சாங்களாம். இதுக்காக பெண் வீட்டாரிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய், 'சன்மானம்' வாங்கிட்டாங்களாம். குறிப்பாக, அந்த இளம் அதிகாரிக்கு, இந்த மாதிரி பணம் வசூல் பண்றதுதான் டியூட்டியாம்,''

''இத்தனைக்கும், 24 மணி நேர 'சரக்கு' விற்பனை, சேவல் கட்டு.. இப்படி சட்டவிரோதமான செயல்நடந்தாலும், 'மாமூல்' வாங்கிட்டு, விட்டுடறாராம். அதனால, அவரைப்பத்தி, மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுக்க ஒரு குரூப் ரெடியாயிடுச்சாம்,''என்று கூறிய மித்ரா ெஹல்மெட் அணிந்து வண்டியில் உட்கார்ந்தாள். சித்ராவும், ெஹல்மெட் அணிந்து, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.ஆனா, வண்டி மக்கர் செய்யவே, அதைப்பார்த்த ஒருவர், 'இப்படியே போனீங்கன்னா, 'குமார்' ஒர்க்ஷாப் வரும். ரிப்பேர் பண்ணி கொடுப்பாரு,' என்றாள். அவர் சொன்ன வழியில், இருவரும் பேசியபடி வண்டியை தள்ளி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X