எல்லோருக்கும் லோன்; ஓட்டு அள்ள மாஸ்டர் பிளான்!| Dinamalar

எல்லோருக்கும் 'லோன்'; ஓட்டு அள்ள 'மாஸ்டர் பிளான்!'

Updated : ஜன 22, 2019 | Added : ஜன 22, 2019
Share
தைப்பூசத்தையொட்டி, மருதமலையானை சந்திக்க சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.மருதமலை ரோட்டில் சென்ற போது, ''அக்கா... இந்த ஓட்டலை பார்த்துக்கோங்க. ஒரு தகவல் இருக்கு; பிறகு சொல்றேன்...'' என, பொடி வைத்தாள் மித்ரா.''ஏம்ப்பா... பிரபலமான ஓட்டல் ஆச்சே... இன்னமும் பிளாஸ்டிக் கவர் 'யூஸ்' பண்றாங்களா...'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.''அதெல்லாம்... சின்ன
 எல்லோருக்கும் 'லோன்'; ஓட்டு அள்ள 'மாஸ்டர் பிளான்!'

தைப்பூசத்தையொட்டி, மருதமலையானை சந்திக்க சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.மருதமலை ரோட்டில் சென்ற போது, ''அக்கா... இந்த ஓட்டலை பார்த்துக்கோங்க. ஒரு தகவல் இருக்கு; பிறகு சொல்றேன்...'' என, பொடி வைத்தாள் மித்ரா.''ஏம்ப்பா... பிரபலமான ஓட்டல் ஆச்சே... இன்னமும் பிளாஸ்டிக் கவர் 'யூஸ்' பண்றாங்களா...'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.''அதெல்லாம்... சின்ன பிரச்னைக்காக... தொழில் உரிமமே வாங்காம... ஓட்டல் நடத்திக்கிட்டு இருந்திருக்காங்க. பிளாஸ்டிக் ரெய்டுக்கு போன, கார்ப்பரேஷன் சானிட்டரி இன்ஸ்பெக்டர், 10 ஆயிரம் ரூபா, 'பைன்' போட்டிருக்காரு...''''அப்புறம் என்னாச்சு...?''''ஓட்டல் நிர்வாகி, கார்ப்பரேஷன் உயரதிகாரிக்கு நெருக்கமானவரு. மேற்கு மண்டலத்துல இருந்த சானிட்டரி இன்ஸ்பெக்டரை, கிழக்கு மண்டலத்துக்கு மாத்திட்டாங்க. அங்க போனா, பொறுப்பேற்க விடாம தவிக்க விட்டுருக்காங்க. நேர்மையா இருந்தா, எவ்வளவு சோதனைய அனுபவிக்க வேண்டியிருக்கு பாரு...''''அந்த உயரதிகாரிக்கும் நோட்டீஸ் வந்துருக்காமே...''''அதுவா, கார்ப்பரேஷன் லெவல்ல எந்த வேலை நடந்தாலும், தீர்மானமா நிறைவேத்தி, 'வெப்-சைட்'டுல பதிவேற்றம் செய்வாங்க. ஒன்றரை வருஷமா பதிவேற்றம் செய்றதில்ல. சென்னையில இருக்கற உள்ளாட்சி அமைப்புகள், முறைமன்ற நடுவத்தில் வழக்கு தொடுத்தாங்க.விசாரிச்ச அதிகாரி, உடனடியா 'அப்டேட்' செய்ய உத்தரவிட்டாரு. நாலு மாசம் ஓடிப்போயிருச்சு; கார்ப்பரேஷன் அதிகாரிங்க கண்டுக்காததால, மேல்முறையீடுக்கு போயிருக்காங்க. அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, உயரதிகாரிக்கு உத்தரவு போட்டுருக்காங்க...''''இதுக்கெல்லாம் பதில் சொல்றது... நம்மூரு அதிகாரிகளுக்கு சர்வ சாதாரணம். ஏதாவது ஒரு காரணம் சொல்லி... தப்பிச்சுருவாங்க...'' என்ற சித்ரா, ''தொண்டாமுத்துார் தொகுதியில வசிக்கிறவங்களுக்காக, 'லோன் மேளா' நடத்தப் போறாங்களாமே...'' என, இழுத்தாள்.''ஆமாக்கா... எம்.பி., எலக்ஷனுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சிட்டாங்க. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி சேர்ந்தா, கோவையை விட்டுக் கொடுத்துட்டு, பொள்ளாச்சியில களமிறங்க போறாங்க. வி.ஐ.பி., யோட 'பிரதர்' மோதுவாருன்னு சொல்றாங்க''''ஓகோ...''''அதுக்காக, இப்பவே தொகுதிய தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. 100 பேங்க் மேனேஜர்கள்ட்ட பேசியிருக்காங்க... ஏற்பாடு ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும், ஞாயித்துக்கிழமையும் 'லோன் ஆர்டர்' கொடுக்கப் போறாங்க. 'லோன்' வாங்குனவங்க, விசுவாசமா ஓட்டுப்போடுவாங்கன்னு, கணக்குப் போட்டிருக்காங்க...''''கூட்டணி அமையலைன்னா... கல்லுாரிய நிர்வகிக்கிற பெண் வி.ஐ.பி., கோயமுத்துார்ல போட்டி போடுவாங்கன்னு பேசிக்கிறாங்க. அந்த பெண் பிரமுகருக்கு அரசியல்வாதிங்க, போலீஸ் அதிகாரிங்க, தொழில்துறைய சேர்ந்தவங்கள்ட்ட நல்ல நெருக்கம் இருக்கறதால, ஈஸியா ஜெயிச்சிடலாம்ன்னு கூட்டிக் கழிச்சி பார்த்துருக்காங்க... கணக்கு சரியா இருந்தா... இனி, தெற்கு பக்கம்'டாப்' லெவலுக்கு போயிடும்...''அடிவாரம் வந்ததும், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, கோவில் பஸ்சில் பயணித்தனர்.ரோட்டோர கடையில் அன்னாசி பழம் வாங்கிய சித்ரா, ''எனக்கு தெரிஞ்ச இன்ஸ்., ஒருத்தரு, 'கட்டிங்' கொடுக்கலைன்னா... புகார் கொடுக்க வர்றவங்கள, அலைய விட்டே நொந்து போக வைக்குறாரு... பாவம் ஜனங்க... ஸ்டேஷனுக்கு அலையா அலையுறாங்க...'' என, பரிதாபப்பட்டாள்.''அவரு எப்பவுமே அப்படித்தான். 'கம்ப்ளைன்ட்' எடுத்துட்டு யாரு வந்தாலும், ஒக்கார வச்சு விசாரிப்பாரு. எதிர்தரப்புல 'கட்டிங்' கொடுத்துட்டா... அவ்ளோதான். புகார்தாரர அலைய விடுவாரு. பணம் மோசடி சம்பந்தமா, எந்த நடவடிக்கையும் எடுக்காம அலைய விட்டதால, இன்ஸ்., மேலேயே கமிஷனருட்ட ரெண்டு பேரு புகார் கொடுத்திருக்காங்க...'' என மித்ரா சொல்வதற்கும், சன்னதிக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் நின்றிருந்தபோது, சற்று முன்னதாக, நண்பர் கனகராஜ், குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்து கையசைத்தனர்.அப்போது, அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ் வந்து நின்றிருந்தது. அதை பார்த்ததும், ''வட்டார போக்குவரத்து அலுவலகத்துல, ராத்திரி நேரத்திலும் வேலை ஜரூரா நடக்குதாமே...'' என, சித்ரா கொக்கியை போட்டாள்.''மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துல, ஆர்.டி.ஓ.,வை போல, அதிகாரத்தோடு, ரெண்டு புரோக்கர் உலா வர்றாங்க. இவுங்க இல்லேன்னா, எந்த வேலையும் நடக்குறதில்லையாம். அந்தளவுக்கு காரியம் சாதிக்கற அளவுக்கு செல்வோக்கோடு இருக்காங்க,'' என்ற மித்ரா, ''அக்ரி யுனிவர்சிட்டியில இருக்கற நீர் நுட்ப மையத்துக்கு, 99 கோடி ரூபாய் 'ஸ்டேட் கவர்மென்ட்' ஒதுக்கியிருக்கு. இதுல கையாடல் நடந்ததா, விசாரணை ஓடிக்கிட்டு இருக்காமே...''''நானும் கேள்விப்பட்டேன். விவசாயிகளுக்கு உபகரணம் வழங்குனதா, போலி கணக்கு எழுதி, லட்சக்கணக்கில் பணம் கையாடல் செஞ்சிருக்காங்க... தணிக்கை குழு அதிகாரிங்க ஆய்வு செஞ்சு, மூணு வாரத்துக்கு மேல ஆகிருச்சு; இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. புகாருக்குள்ளான அதிகாரி, வர்ற மே மாசம், 'ரிடையர்மென்ட்' ஆகுறாரு. அதனால, விசாரணைய ஜவ்வா... இழுக்குறாங்க... நடவடிக்கை இல்லாம தப்பிடுச்சுவாரு போலிருக்கு...'' என, விளக்கினாள் சித்ரா.''அதெல்லாம் சரி... சிட்டிக்குள்ள அரசுக்கு, சொந்தமா புறம்போக்கு இடமே இல்ல. பட்டா கொடுக்குறதா சொல்லி, பணம் வசூலிக்கிறாங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சவுரிபாளையம் பகுதியில அளவீடு செஞ்சிருக்காங்க. இன்னும் யாருக்கும் பட்டா தரல்ல... தாலுகா ஆபீசுக்கு விசாரிக்கப் போனா, தலைக்கு மூவாயிரம் கேக்குறாங்க. பொறுப்புள்ள ஆபீசருங்க, பொறுப்பில்லாம நடந்துக்கிறான்னு பேசிக்கிறாங்க...'' என்ற சித்ரா, ''நம்மூரு அரசாங்க ஆஸ்பத்திரிய சுத்திப்பார்த்து, பாராட்டு தெரிவிச்சாங்களாமே...'' என, நோண்டினாள்.''அதுவா, ஆந்திராவை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி பூணம் மாலாகொண்டையா வந்திருந்தாங்க. இங்க செயல்படுத்துற திட்டங்கள டாக்டர்ங்க அடுக்கியதும், மலைச்சுப் போயிட்டாங்க. புதுசு புதுசா கட்டியிருக்கிற கட்டடங்களை பார்த்தும், 'டிரீட்மென்ட்'டுக்கு நெறைய்ய ஜனங்க வர்றத பார்த்து வாயடைச்சுப் போயிட்டாங்க. ஷிப்ட் போட்டு டாக்டர்க சிகிச்சை கொடுக்கறதை பார்த்து, பாராட்டிட்டு போயிருக்காங்க...'' என, சர்ட்டிபிகேட் கொடுத்தாள் மித்ரா.''இதே மாதிரி தெனமும் ஒழுங்கா 'டிரீட்மென்ட்' கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். சடலத்தை பூனை கடிச்ச மாதிரி, எலி கடிச்சதாவும் புகார் வந்திறப்போகுது... '' என, சித்ரா கிண்டலடிப்பதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X