காந்திநகர் : இந்திய ஆடைகளுக்கு பிரத்யேகமான ஆடை அளவுகள் உருவாக்கப்படும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது, ''அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள், தங்களுக்கென பிரத்யேக ஆடை அளவுகளை வைத்திருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு, இது போல பிரத்யேகமான ஆடை அளவு குறியீடுகள் இல்லை. 42, 44, எக்ஸ் எல் என, பலவிதங்களில் ஆடை அளவுகளை குறிப்பிடுகின்றனர். எனவே, இந்தியாவுக்கு என பிரத்யேகமான, 'சைஸ் இந்தியா' திட்டம் உருவாக்கப்பட்டு, விரைவில் அது நாடு முழுக்க அமல்படுத்தப்படும்'' என, தெரிவித்தார்.