கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் பலாத்கார வழக்கு: எஸ்.பி., ஆஜராக உத்தரவு

Updated : ஜன 22, 2019 | Added : ஜன 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது குறித்து, அவரது தாய் எழுதிய கடிதம் அடிப்படையில், தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தஞ்சாவூர், எஸ்.பி., செந்தில்குமார் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி, கே.கே.சசிதரனுக்கு, தஞ்சை மாவட் டம், கும்பகோணத் தில் வசிக்கும் பெண் ஒருவரிடமிருந்து, சில நாட்களுக்கு முன், கடிதம்

மதுரை: பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது குறித்து, அவரது தாய் எழுதிய கடிதம் அடிப்படையில், தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தஞ்சாவூர், எஸ்.பி., செந்தில்குமார் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி, கே.கே.சசிதரனுக்கு, தஞ்சை மாவட் டம், கும்பகோணத் தில் வசிக்கும் பெண் ஒருவரிடமிருந்து, சில நாட்களுக்கு முன், கடிதம் வந்திருந்தது.கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:என் கணவர், உடல்நல பாதிப்பால் இறந்தார். எனக்கு ஒரு மகள், 21, மகன், 14, உண்டு. ஒரு ஜவுளிக் கடையில், மகள் வேலை செய்தார். கடை உரிமையாளரின் நண்பர், 2018, நவ.,7ல், எங்கள் வீட்டிற்கு வந்தார். தீபாவளி விருந்திற்கு அழைத்தார்; மறுத்தோம்.வற்புறுத்தி மகளை அழைத்துச் சென்றார்; தானே மீண்டும் அழைத்து வந்தார். மகள் குழப்பமாகவும், மயக்க நிலையிலும் இருந்தார்; உடலில் ரத்தப் போக்கு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையில், டாக்டர்கள், 'உங்கள் மகளை, பலர், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிஉள்ளனர்' என்றனர்.கும்பகோணம் மகளிர் போலீசாரிடம், புகார் செய்தேன்; ஒருவர் கைது செய்யப்பட்டார்.'கடை உரிமையாளர் உட்பட, அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, தஞ்சாவூர், எஸ்.பி., யிடம் புகார் அளித்தேன்.
போலீஸ் விசாரணையில், பாரபட்சம் உள்ளது; முறையாக விசாரிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுஇருந்தது.இதனடிப்படையில், 2018, டிசம்பரில், தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள், 'விசாரணை அறிக்கையை, போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன், விசாரணை அறிக்கை, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்து, அதிருப்தியடைந்த நீதிபதிகள், 'அறிக்கையில், திருப்தி இல்லை. தஞ்சாவூர், எஸ்.பி., நாளை ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
22-ஜன-201909:42:52 IST Report Abuse
Selvam Palanisamy இந்த செய்தியில் எஸ்.பி. எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடவில்லை. பின் ஏன் இந்த தலைப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X