பொது செய்தி

இந்தியா

கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க திட்டம்

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (64)
Advertisement
கோதாவரி,காவிரி,ஆறு,இணைக்க,திட்டம்

அமராவதி: தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது.


திட்டம்:

ஆந்திர மாநிலம், அமராவதியில் நேற்று, மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி கூறியதாவது: தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற, 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து, 1,100 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது.

கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதால், இந்த நீரை, நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும். இதற்காக, கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணார் - காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இந்த அறிக்கை விரைவில் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திரட்டப்படும்.


தமிழகம் வரை


இந்த திட்டம் நிறைவேறினால், நாட்டின் கடைக்கோடி மாநிலமான தமிழகம் வரை, கோதாவரி நீர் சென்றடையும். இதன் மூலம், தண்ணீர் தொடர்பாக, மாநிலங்கள் இடையில் நிலவும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும். கோதாவரி - காவிரி ஆறுகளை, கால்வாய்கள் மூலம் இணைக்க வேண்டாம் என, முடிவு செய்துள்ளோம். அவ்வாறு செய்வதால், நீர் ஆவியாகிறது.

மாறாக, சிறப்பு தொழில் நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட, குறைந்த அடர்த்தி உடைய இரும்பு குழாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், திட்ட செலவு கணிசமாக குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayana Moorthi - sytney,ஆஸ்திரேலியா
23-ஜன-201907:05:52 IST Report Abuse
Narayana Moorthi முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக 15 லட்சம் தருவோம் என்று சொன்னோம் என்பதை ஒப்புக்கொண்டவர் இவர். இவரை எப்படி நம்புவது
Rate this:
Share this comment
Cancel
Narayana Moorthi - sytney,ஆஸ்திரேலியா
23-ஜன-201906:42:46 IST Report Abuse
Narayana Moorthi நாங்கள் ஜெயித்தால் உங்களுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார்களே அது போலத்தான் இதுவும். தேர்தலுக்காக இப்போது சொல்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு அக்கறை இருந்தால் 4 வருடத்திற்கு முன்பே தொடங்கியிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-201906:06:54 IST Report Abuse
Ivan Ayyyao bjp ipdi solution sollita apparam thiruttu ka, teamuka lam epdi polapu nadathurathu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X