பொது செய்தி

தமிழ்நாடு

கேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார்

Updated : ஜன 23, 2019 | Added : ஜன 22, 2019 | கருத்துகள் (328)
Advertisement
 லயோலா, கல்லூரி, அட்டூழியம்,B.J.P,BJP,Bharatiya Janata Party,Chennai,சென்னை,பா.ஜ,

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடந்த கண்காட்சியில் கேலி சித்திரம் மூலம் 'ஹிந்து கடவுள்கள், பெண்கள், பிரதமரை இழிவுப்படுத்தியோர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், டி.ஜி.பி., மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாவட்ட பா.ஜ., தலைவர், டால்பின் ஸ்ரீதர்; விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வேதாந்தம்; தமிழ்நாடு சுதேசி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த, கலைச்செல்வி ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், அளித்துள்ள புகார் விபரம்:

சென்னை, நுங்கம்பாக்கத்தில், அரசு உதவி பெறும், லயோலா கல்லுாரி உள்ளது. கல்லூரியில் 'வீதி விருது விழா' என்ற நிகழ்ச்சியை சனி, ஞாயிறு (ஜன., 19 - 20ல் ) 2 நாட்கள், அக்கல்லுாரியின் கலை இலக்கிய பிரிவு, மாற்று ஊடக மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து கடவுள்கள், பாரத மாதா, தேசியக் கொடி மற்றும் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை, மிகவும் கேவலமாக இழிவுப்படுத்தி, ஓவியங்கள் வரைந்திருந்தனர்.இந்திய இறையாண்மைக்கு எதிராக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. வக்கிர எண்ணத்துடன், பெண்களை அசிங்கமாக வரைந்தும், காட்சிப்படுத்தி இருந்தனர்.
பல தரப்பட்ட மக்கள், குடும்பத்துடன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தியதுடன், தேச விரோத கருத்துகளும் பரப்பப்பட்டன. எனவே, ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தி, பெண்களின் மாண்பைசீர்குலைத்து, மத கலவரத்தை துாண்டும் விதமாக, நிகழ்ச்சி நடத்தியோர் மற்றும் அனுமதி அளித்த, கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.


கையெழுத்திடாத அறிக்கை


சென்னை, லயோலா கல்லுாரி வெளியிட்டு உள்ள அறிக்கை:எங்கள் கல்லுாரி வளாகத்தில், 'வீதி விருது விழா' என்ற நிகழ்ச்சியை நடத்தியோர், நாங்கள் அளித்த அனுமதியை, தவறாக பயன்படுத்தி விட்டனர்.
கல்லுாரி வளாகத்தில், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், தேச தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியை இழிவுப்படுத்தியும், ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்து, உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டோம். நடந்த தவறுக்கு, மிகவும் வருந்துகிறோம்.இவ்வாறு, கையெழுத்திடாத அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்கு பின்னர் கண்காட்சியில் இருந்த அவதூறு பரப்பும் காட்சிகள் அகற்றப்பட்டன.


ஹிந்து கலாசாரத்தை கேவலமாக சித்தரிப்பதா?


''சென்னை, லயோலா கல்லுாரியில், கண்காட்சி என்ற பெயரில், பெண்களையும், பிரதமரையும், ஹிந்து கலாசாரத்தையும் கேவலமாக சித்தரித்ததை, வன்மையாககண்டிக்கிறோம்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னை, லயோலா கல்லுாரியில், கிராமிய கலை நிகழ்ச்சி என்ற பெயரில், பெண்களையும், பிரதமரையும், ஹிந்து கலாசாரத்தையும், மிக மோசமாக சித்தரிக்கும் படங்களை வைத்து, கண்காட்சி நடத்தி உள்ளனர்.மத சார்பற்றவர்கள் என்ற போர்வையுடன், மத கலவரத்தை துாண்ட, இதுபோன்ற கண்காட்சிகள் நடக்கின்றன. இதை பார்த்து, சும்மா இருக்க மாட்டோம். தற்போது, கல்லுாரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. எனினும், இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.லயோலா கல்லுாரியில், வேறு மதத்தை, கேவலமாக சித்தரித்து ஓவியம் வைத்திருந்தால், அனைவரும் குதித்திருப்பர். ஹிந்து மதம் என்றதும், அமைதியாக உள்ளனர். இதை, வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு தமிழிசை கூறினார்.


பகையை வளர்க்கும் ராமதாஸ் கண்டனம்


இது தொடர்பாக பா.ம.க., தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது. கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர. யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது மாறாக பகையைத் தான் வளர்க்கும். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலை என்ற பெயரில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் எந்த நிகழ்வையும் இனி அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.
வீடு தோறும் தாமரை தீபம்'


தமிழிசை மேலும் கூறியதாவது:லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம். வீடு வீடாக சென்று, பிரதமரின் சாதனைகளை எடுத்து சொல்ல உள்ளோம். இதற்காக, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 'தாமரை தீபம்' என்ற பெயரில், அரசின் சாதனைகளை விளக்கி, ஒவ்வொரு வீட்டிலும், தாமரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கண்காட்சியில் இடம் பெற்ற கேலிசித்திரம்இங்குள்ள கண்காட்சியில் இடம் பெற்ற கேலிசித்திரம் விவரம் வருமாறு;

01. பாரதமாதா கண்ணீர் விடுவது போல் படமும் அருகில் மீ டூ பாதிப்பு என எழுத்தால் எழுதப்பட்டிருந்தது.

02. பிரதமர் மோடியை ஆஞ்சநேயர் போல் சித்தரித்தும் அவரை ஏகாதிபத்திய நாதன் என்றும் வர்ணிக்கப்பட்டிருந்தது.

03 . தூய்மை இந்தியா திட்டத்தின் அடையாளமான மூக்கு கண்ணாடியும், கீழே குப்பைத்தொட்டியில் அரிவாள் சுத்தியல் மற்றும் விவசாயிகள் தற்கொலை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் .

04. சூலாயுதம் கொண்டு ரத்தம் கசியும் விதமாகவும் அதில் ஆணுறையை தொடர்புபடுத்தியும் இருந்தது.

05. ஒரு பெண்ணின் அந்தரங்க பகுதியை சூலாயுதம் போல் வரையப்பட்டிருந்தது.

06. தஞ்சை, திருவாரூர், நாகையில் மீத்தேன் பருக கழுகு காத்திருப்பது போன்ற காட்சி உள்ளது.


07. சபரிமலைக்கு பெண்கள் செல்லுவதை இந்து அமைப்புகள் தடுப்பதாகவும் ஒரு காட்சி.
இது போன்ற பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

Advertisement
வாசகர் கருத்து (328)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
30-ஜன-201906:40:17 IST Report Abuse
kumarkv இந்த buildingai கொளுத்திவிடலாம்
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
27-ஜன-201912:43:43 IST Report Abuse
rishi அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், பொறுமையா இருப்பது கோழைகள்னு நினைக்கின்றன ....
Rate this:
Share this comment
Cancel
San - Madurai ,இந்தியா
25-ஜன-201921:07:58 IST Report Abuse
San Close this college & transfer the students to other colleges immediately
Rate this:
Share this comment
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-ஜன-201911:39:13 IST Report Abuse
K.   Shanmugasundararajஇந்த கல்லூரியை மூடுவது இருக்கட்டும் .வேறொரு கல்லூரியை ஆர் எஸ் எஸ் / பி ஜெ பி அமைப்புகள் துவக்கி , அந்த கல்லூரியில் லோயலா கல்லூரியில் படிக்கும் இந்து மற்றும் பிற மத மாணவர்களை , லோயலா கல்லூரி வசூலிக்கும் கட்டணத்தை வசூலித்து , அனுமதித்து ,கல்வி கற்று தரலாமே.எத்தனையோ கோடி ரூபாய்கள் , பி ஜெ பி கட்சிக்கு நிதியாக வந்துள்ளது . அதில் இருந்து ஒரு சிறிய தொகையை ஒதுக்கி , ஒரு கல்லூரி ஆர் எஸ் எஸ் / பி ஜெ பி அமைப்பின் மூலம் துவக்குக....
Rate this:
Share this comment
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
28-ஜன-201900:57:58 IST Report Abuse
Subramanian Sundararamanதிரு சுந்தர்ராஜ் , நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும். கலை நம்நாட்டின் பெருமைகளையும் ஒற்றுமையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். பாரத தாயையும் , பெண்மையையும் , மத உணர்வுகளையும் , நாட்டின் பிரதமரையும் இழிவு படுத்துவது ஒரு பெருமைமிகு கல்லூரிக்கு நாகரீகம் சார்ந்தது அல்ல , மற்றும் சட்ட ரீதியாகவும் சரியானது இல்லை. கல்லூரியை ஹிந்துஅமைப்புகள் நடத்துமா பிஜேபி நடத்துமா என்பது விதண்டா வாதம். கிருத்துவ மிஷனரிக்கு கிடைக்கும் பணத்தால் மட்டுமே நடத்தினாலும் , இந்து அறநிலையத்துறை கோவில்களில் வரும் வருமானத்தினால் மட்டுமே பல கல்லூரிகளை அரசிசின் உதவி இல்லாமல் நடத்தமுடியும் என்றாலும் ஒரு பன்முக தன்மை கொண்ட இந்திய துணைக்கண்டத்தில் மற்ற நம்பிக்கைகளை இழிவு படுத்த முடியாது , கூடாது. UGC ரூல்ஸ் ம் இதை அனுமதிக்கவில்லை. மக்களை எப்படி ஒற்றுமையாக வழி நடத்துவது என்பதில் கவனம் செலுத்தினால் கல்லாரியின் புகழ் மேலும் ஓங்கும். இல்லையேல் கஷ்டப்பட்டு வளர்த்த கல்லூரியின் மதிப்பீடுகள் தாழும் நிலை வரும். படித்த அனைத்து சமுதாய மக்களும் நாட்டை மற்றவேற்றுமைகளில் இருந்து திருப்பி கவனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X