எங்கு இருக்கிறார் ராகுல்?: தேடும் கட்சியினர்

Updated : ஜன 22, 2019 | Added : ஜன 22, 2019 | கருத்துகள் (76)
Advertisement
ராகுல் ,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல் காந்தி

புதுடில்லி: துபாய்க்கு, ஜன.11ம் தேதி சென்று இந்திய தொழிலாளர்களை சந்தித்த பிறகு, காங்., தலைவர் ராகுல் இந்தியா திரும்பவில்லை. இது அவரது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இத்தாலிக்கு...



அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு ஊகங்கள் கிளம்பி உள்ளன. சில மூத்த காங்., தலைவர் கூறும்போது, ‛‛ராகுலின் பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை. அவரைப் பார்க்க சென்றிருக்கிறார்'' என்கிறார்கள். இந்த வாரம் அவர் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மற்ற சில தலைவர்கள் கூறும்போது, ‛‛அடுத்து லோக்சபா தேர்தல் வந்தால், கடுமையான பிரசாரம் செய்ய வேண்டி இருக்கும். எனவே, அதற்கு முன்னதாக அவர் ஓய்வு எடுக்க சென்றுள்ளார்'' என்கிறார்கள்.


புதிது இல்லை


இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ராகுல் எங்காவது செல்வது புதிது இல்லை. முக்கியமான நேரங்களில் அவர் பலமுறை ரகசியமாக சென்றுள்ளார். பொதுவாக, தனது பிறந்த நாளான ஜூன் 19ம் தேதியை, அவர் எங்காவது சென்று கொண்டாடுவது வழக்கம்.சென்ற முறை அவர் வெளிநாடு சென்றபோது, ‛‛தாயார் சோனியாவின் மருத்துவ சோதனைக்கு செல்வதாக'' டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது, வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேரத்தில், கடந்த டிச.16ம் தேதி திடீரென எங்கோ மாயமானார். புத்தாண்டையும் கொண்டாடினார். அப்போது அவர் ஐரோப்பாவுக்கு சென்றிருந்ததாக கூறப்பட்டது.
2014 பொதுத்தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே பெறறு காங்., படுதோல்வி அடைந்தது. அப்போதும் ராகுல் மாயமாகி விட்டார்.


கட்சியினர் அதிருப்தி



இம்முறை ராகுல் வெளிநாடு சென்றது, பல தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‛‛ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி விட்டார். காங்., உடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், சீட் ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு ராகுல் வருகைக்காக காத்திருக்கின்றன.
கோல்கட்டாவில் மம்தா நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ராகுலும் சோனியாவும் கலந்துகொள்ளவில்லை. காங்., சார்பில் கலந்துகொள்ள மல்லிகார்ஜூன் கார்கே, அபிசேக் சிங்வி ஆகியோரை அனுப்பி வைத்தனர்.
அபிசேக் சிங்வி கூறும்போது, ‛‛தங்கள் குறைகளை மறைப்பதற்காக ராகுலின் பயணத்தை பா.ஜ., அரசியலாக்குகிறது. ராகுலின் தனிப்பட்ட பயணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நாங்கள் விரும்பவில்லை. அவர், ஜன.23, 24 தேதிகளில் அமேதிக்கும், ஜன.25ம் தேதி ஒடிசாவுக்கும், 26ம் தேதி டில்லி குடியரசு தின அணிவகுப்பிலும் கலந்து கொள்கிறார். 28, 29 தேதிகளில் கேரளாவில் கட்சி ஊழியர் கூட்டத்தில் அவர் பேசுகிறார்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜன-201910:02:51 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒருவேளை தாய்லேந்து லே இருக்கும் நெல்லுபத்தயலே ஒளிஞ்சுருக்குங்களோ
Rate this:
Share this comment
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
23-ஜன-201900:37:19 IST Report Abuse
Kandaswamy ஜி, அவர் தாய்லாந்து போயிருப்பார். கொஞ்சம் தீவிரமா தேடிப்பாருங்க. தேர்தல் வேற வருது சீக்கிரம் கண்டுபிடிச்சிருங்க அப்பரசென்ட்டிகளா
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-201900:05:31 IST Report Abuse
Arun, Chennai RG himself will not know where he is!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X