அரசியல் செய்தி

தமிழ்நாடு

அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு

சென்னை, ''மற்ற நடிகர்களைப் போல, வருவேனா, வரமாட்டேனா என்று இல்லாமல், அஜித் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை, பாராட்டக் கூடியது. திருப்பூரில், அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த, 2,000 பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். அஜித்திற்கும், அந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.படிக்கும் மாணவர்களை தவிர, படித்த மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. அப்படித் தான், அந்த இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். மற்ற நடிகர்கள் மாதிரி, வருவேனா, வரமாட்டேனா என்று இல்லாமல், அஜித் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
23-ஜன-201911:28:49 IST Report Abuse
Divahar உங்கள் கட்சி நடிகர்களையே நம்பி இருக்கிறது. உங்களுக்கு நடிப்பவர்கள் தான் தேவை
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
23-ஜன-201909:46:43 IST Report Abuse
kadhiravan இவரது பேச்சில் ரஜினியை மறைமுகமாக ஏசுவது தெரிகிறது..,அப்புறம் கோவம் வராதா..,வருவாரு தாமரையை பூக்க உடுவாருன்னு பார்த்தா தாமரையை கருக உட்டுடுவாரு போல இருக்கு..,அஜித்தை பற்றி கூறியது..,இச்சி இந்த பழம் புளிக்கும் கதைதான் நினைவுக்கு வருகிறது..,ஒரு பயலும் நம்மளோட கூட்டணிக்கு வரமற்றங்களேன்னு ஏக்கமும் தெரிகிறது..,இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
23-ஜன-201909:32:51 IST Report Abuse
சுந்தரம் அப்போ மொத்தம் அறுபது லட்சத்து இரண்டாயிரத்து ஆறு ஆகிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தானே ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X