அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (12)
 அஜித் அறிக்கை தமிழிசை பாராட்டு

சென்னை, ''மற்ற நடிகர்களைப் போல, வருவேனா, வரமாட்டேனா என்று இல்லாமல், அஜித் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை, பாராட்டக் கூடியது. திருப்பூரில், அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த, 2,000 பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். அஜித்திற்கும், அந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.படிக்கும் மாணவர்களை தவிர, படித்த மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. அப்படித் தான், அந்த இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். மற்ற நடிகர்கள் மாதிரி, வருவேனா, வரமாட்டேனா என்று இல்லாமல், அஜித் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X