மேகதாது அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மேகதாது அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும்'

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (3)

சென்னை, 'மேகதாது அணை கட்ட அனுமதி கோரி, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையை, மத்திய அரசு, திருப்பி அனுப்ப வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர், அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழக எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில், அறிக்கையை, கர்நாடக அரசு அளித்துள்ளது.கர்நாடகாவின் இந்தக் கோரிக்கையை ஏற்கலாமா எனக்கேட்டு, திட்ட அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என, மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு மற்றும், காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான, எந்த நடவடிக்கையையும், மத்திய அரசுஎடுக்கக் கூடாது.அணை கட்ட அனுமதி கோரி, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X