அரசியல் செய்தி

தமிழ்நாடு

தம்பிதுரையிடம் மூன்று மணி நேரம் விசாரணை நிறைய கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே பதில்

Added : ஜன 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தம்பிதுரை, விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை, 10:30க்கு துவங்கிய விசாரணை, மூன்று மணி நேரம் நீடித்தது. அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர் ஜபருல்லாகான் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு, தம்பிதுரை பதில் அளித்தார்.அதன்பின், அவரிடம், சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணை நடத்தினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே, தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.விசாரணைக்கு பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''விசாரணை கமிஷனில், பல கேள்விகள் கேட்டனர். என்ன கேட்டனர் என்று, கூறுவது சரியல்ல. உரிய பதிலை தெரிவித்துள்ளேன். நீதிபதியிடம் கூறியதை, வெளியில் கூறுவதும் முறையல்ல,'' என்றார்.அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞர் மகிமுனா பாட்ஷா கூறுகையில், ''நாங்கள் குறுக்கு விசாரணை நடத்திய போது, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஜெ.,க்கு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிகிச்சை திருப்திகரமாக இருந்ததாகவும், தம்பிதுரை தெரிவித்தார்,'' என்றார்.சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது:'பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை, ஜெ., மரணம் குறித்து சந்தேகம் எதுவும் எழுப்பவில்லை என்பது சரிதானே' என, தம்பிதுரையிடம் கேட்டோம். அதற்கு, 'ஆமாம்' என்றும், 'சசிகலாவை, எப்போது வரை ஆதரித்தீர்கள்' என்ற கேள்விக்கு, 'கருத்து கூற விரும்பவில்லை' என்றும் தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு, 'சசிகலாவை, கடைசியாக சிறையில் பார்த்தேன். அது குறித்து, எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றார். கடந்த, 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா உடன் சென்றதாகவும், உடல் ரீதியாக, அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தம்பிதுரை கூறினார்.ஜெ., வெளிநாடு அழைத்து செல்வது குறித்தும், அமைச்சரவை கூட்டம் குறித்தும் கேட்கப்பட்டது. அது தொடர்பாக, தனக்கு எதுவும் தெரியாது என்றார். 'ஜெ., மரணத்தில், உங்களுக்கு சந்தேகம் உள்ளதா' என்று கேட்டதற்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றார்.இவ்வாறு, ராஜா செந்துார்பாண்டியன் கூறினார்.ஸ்டாலினை விசாரிக்கசசி தரப்பு கோரிக்கை!சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது:விசாரணை கமிஷன் வழக்கறிஞர், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் நடக்கவுள்ள விசாரணையுடன், கமிஷன் விசாரணையை முடித்து கொள்வதாக தெரிவித்தார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்தோம்; அவ்வாறு முடிக்க முடியாது. ஆடிட்டர் குருமூர்த்தி, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் எனக்கூறி உள்ளோம்.அமைச்சர்கள் சீனிவாசன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோருடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினையும் விசாரிக்க வேண்டும் என, கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பன்னீர்செல்வம் 29ல் ஆஜர்!துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று விசாரணை கமிஷனில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இன்று அரசு சார்பில், சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் பங்கேற்க உள்ளதால், இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலாது என்பதை, கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து, 29ல், ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
23-ஜன-201910:35:04 IST Report Abuse
R. Vidya Sagar கடைசி வரை கூடவே இருந்த சசியிடம் விசாரணை கிடையாதா? என்னப்பா விசாரணை?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
23-ஜன-201909:13:43 IST Report Abuse
Girija அவசரமே இல்லை தெரியும் என்கிற உண்மையான பதில் வரும் வரை உக்காரவச்சு விசாரிங்க ? உண்மை கண்டறியும் பரிசோதனையும் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜன-201906:38:48 IST Report Abuse
Bhaskaran ஜெ இறந்தவுடன் முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபட்டு பின் சரிபடாததால் ஜகா வாங்கியவர் தம்பிதுரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X