சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' துவங்கியுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால், அரசு பணிகள் முடங்கி உள்ளன.
கிராமப்புறங்களில், 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை பூட்டி விட்டு, ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல பள்ளிகளில் பாடம் நடக்காததால், பெற்றோர் கடும் கோபம் அடைந்துள்ளனர். அரசு அலுவலகங்களில், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பணிகள் பாதிக்கவில்லை.
அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் சங்கங்கள் சில இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற, கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டதால், போராட்டத்தை, சில மாதங்கள் தள்ளி வைத்திருந்தன.
இந்நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, சித்திக் கமிட்டியும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட, ஸ்ரீதர் கமிட்டியும், தங்களது அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளன.அதன்பிறகும், கோரிக்கைகள் குறித்து, அரசு மவுனமாக இருந்ததால், வேலைநிறுத்தம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை, ஜாக்டோ - ஜியோ திரும்ப பெற்றது.
நேற்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியது.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21 மாத
ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய
வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம்
நடக்கிறது.மாநிலம்
முழுவதும், அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசு அலுவலக
ஊழியர்கள், பணிக்கு வரவில்லை.
அதனால்,
வருவாய் துறை,கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும்
பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில், பணிகள் முடங்கின. சென்னை, தலைமை செயலக
சங்கத்தினர், போராட்டத்தில் பங்கேற்காததால், அரசின் தலைமை அலுவலக பணிகள்
பாதிக்கவில்லை. பெரும்பாலான துறைகளில், அரசு தரப்பில், மாற்று ஏற்பாடு
செய்யப்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல நடந்தன.
சில
அரசு கல்லுாரிகளில், பேராசிரியர்கள் பணிக்கு வராததால், வகுப்புகள்
நடக்கவில்லை. பள்ளி களை பொறுத்தவரை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மற்ற மாவட்டங்களில், 5ம் வகுப்பு வரையிலான
பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால், அவர்கள் பள்ளியை பூட்டி,
போராட்டத்துக்கு சென்று விட்டனர். அதனால், அடிப்படை கல்வி கற்கும்,
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பெரும்பாலான
ஆசிரியர்கள், கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான். அவர்களால்,
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டதால், பெற்றோர் ஆவேசம் அடைந்துள்ளனர்.
சில பள்ளிகளில், சத்துணவு அமைப்பாளர்கள் மட்டும்
வந்திருந்து,
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.சில இடங்களில், பகுதி நேர ஆசிரியர்கள்,
தற்காலிகமாக வகுப்பு நடத்த, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே,
ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு, தடை விதிக்க கோரிய மனு, சென்னை
உயர் நீதிமன்றத்தில், நேற்று வாபஸ் பெறப்பட்டது. பின், டிவிஷன் பெஞ்ச்
முன், வழக்கை விசாரிக்க முறையிடப்பட்டது.
65 சதவீதம் ஆஜர்!
பள்ளி
கல்வி துறையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 1.25 லட்சம்
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 65 சதவீதம் பேர், அதாவது, 81
ஆயிரம் பேர், நேற்று பணிக்கு வந்துள்ளனர்.அதேபோல், தொடக்க மற்றும் நடுநிலை
பள்ளிகளில், 1.12 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 50
சதவீதம் பேர், அதாவது, 56 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள், பணிக்கு வந்துள்ளதாக, கல்வி
துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற துறைகளில், 75 சதவீதம் பேர், பணிக்கு
வரவில்லை.
'டேக்டோ' எதிர்ப்பு!
தமிழ்நாடு
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'டேக்டோ' மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஆரோக்கியதாஸ் அறிக்கை:அரசு அலுவலர் கழக தலைவர் சவுந்தர ராஜன் தலைமையில்,
தலைமை செயலர், நிதித்துறை மற்றும் பணியாளர் நிர்வாக துறை
செயலர்கள் அடங்கிய
குழுவுடன், பேச்சு நடத்தப் பட்டுள்ளது. இதில், ஸ்ரீதர் கமிட்டி மற்றும்
சித்திக் கமிட்டி அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை, அதிகாரிகள்
ஏற்றுள்ளனர்.
தற்போது, 10ம்
வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு பணிகள் பாதிக்கப்படும் என்பதால், மாணவர் நலன்
கருதி, போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம். ஜாக்டோ - ஜியோவின்
போராட்டத்தில், டேக்டோ பங்கேற்காது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'போராட்டத்தை கைவிடுங்கள்!'
''ஆசிரியர்கள்,
மனிதநேயத்துடன் போராட்டத்தை கைவிட வேண்டும்,'' என, பள்ளி கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள், தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்று, பணிக்கு திரும்ப
வேண்டும். பொதுத்தேர்வு நடக்க உள்ள நேரத்தில், வேலைநிறுத்தம் என்பது,
மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, போராட்டத்தை, ஆசிரியர்கள்
வாபஸ் பெற வேண்டும்.
கோரிக்கைகள்
குறித்து, அரசு தரப்பில் உரிய முடிவுகள் எடுக்கப்படும். ஆசிரியர்கள், மனித
நேயத்துடன் செயல்பட்டு, போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு,
செங்கோட்டையன் கூறினார்.மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த
பேட்டி:அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது; நிதி நிலைமை சீராகும் போது,
கோரிக்கைகள் பரிசீலிக்கப் படும். நிதியை பொறுத்து தான், உறுதி தர முடியும்.
கோரிக்கைகளை
பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டிகள், அறிக்கை தந்துள்ளன. உரிய நேரத்தில்,
நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் நிலையை உணர்ந்து, அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (54+ 20)
Reply
Reply
Reply