பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலை தேவசம்போர்டுக்கு நஷ்டம்
புலம்பித் தவிக்கிறார் தலைவர்

திருவனந்தபுரம், ''சபரிமலை தேவசம்போர்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என அதன் தலைவர் பத்மகுமார் கூறினார்.

சபரிமலை, தேவசம்போர்டு, நஷ்டம்



திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது: சபரிமலையில் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. குத்தகைதாரர்கள் பணம்

செலுத்தாவிட்டால் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும். தேவசம்போர்டுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சம்பளம், கட்டுமானம், சிறிய கோயில்களில் பூஜை போன்றவைகூட பாதிக்கும். தினசரி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும். இதனால் அடுத்த பட்ஜெட்டில் தேவசம்போர்டுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.



தேவசம்போர்டு திண்டாடும் போது, கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக வருமானம்ஈட்டியுள்ளது. மண்டலகாலம், மகர விளக்கு பூஜையின் போது மொத்த வருமானம் 45.20 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இது 15.20 கோடி ரூபாயாக இருந்தது. நிலக்கல்-- பம்பை பஸ் சேவையில் மட்டும் 31.20 கோடி ரூபாய்

Advertisement

கிடைத்துள்ளது.தொலைதுார பஸ்கள் மூலம் 14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதனால் அனைத்து பக்தர்களும் பம்பைக்கு அரசு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜன-201921:39:41 IST Report Abuse

Natarajan Ramanathanவடமாநிலத்தவர்கள் நம் அளவு சூதுவாது இல்லாதவர்கள் என்பது உண்மை.

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
23-ஜன-201919:14:11 IST Report Abuse

Rajhoo Venkateshநீங்க அரசாங்கத்திடம் கேட்பீர்கள். பாவம் அங்கு கடை எடுத்தவர்கள் எல்லாம் தலையில் துண்டு போட்டு கொண்டு அலைகிறார்கள் அவர்களுக்கு யார் நஷ்ட ஈடு கொடுப்பார்கள். நல்லா இருந்த கோயிலை நாசமாக்கிய பாவிகள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஜன-201919:12:11 IST Report Abuse

Pugazh Vவடமாநிலத்தவரின் திட்டம் நிறைவேறியது. தென்னிந்திய கோவில் மீதான அவர்களின் பொறாமையால், இந்த கோவிலின் அமைதி அருள் பக்தர்களின் வருகை எல்லாவற்றையும் தென்னிந்தியர்களைக் கொண்டே குலைத்து விட்டார்கள்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X