அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'கொலை வழக்கில் சிறை செல்வார் முதல்வர்'

கரூர்:“முதல்வர் பழனிசாமி, கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் காலம் வரும்,” என, கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

கொலை,வழக்கு,சிறை,முதல்வர் பழனிசாமி, திமுக, ஸ்டாலின்


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, ஈசநத்தத்தில், தி.மு.க., சார்பில், கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:இந்த கிராம சபை, கூட்டத்தைப் பார்த்து, ஆளுங்கட்சியினர் அதிர்ந்து போய் உள்ளனர். அதனால், இது குறித்து பல பொய்களை சொல்லி வருகின்றனர்.நான், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, 12 ஆயிரத்து, 617 கிராமங்களுக்கு நுாலகம் கொண்டு வந்தேன்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திற்கும், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்னை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்

பட்டது.அதில், 'இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தித் தேர்தல் நடத்த வேண்டும்' என, நீதிமன்றம் பல முறை கூறியும், தேர்தல் நடத்த வில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடக்காத தற்கு, தி.மு.க., தான் காரணம்என, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் வெளிப்படை யாக பேசுகிறார். ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதன்பின், சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார்.ஆனால், முதல்வர் பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டில் மட்டுமல்லாது, கொலை வழக்கிலும் சிறைக்கு செல்லும் காலம் வரும்.இவ்வாறு அவர் பேசினார்.


தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்


'கோடநாடு விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி பதவிவிலக வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முன், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர்,ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து, ஏற்கனவே நான், தமிழக கவர்னரை சந்தித்து, 'முதல்வர்

Advertisement

பழனிசாமி மீது, அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை மனு அளித்தேன்.அந்த மனு மீது, இன்று வரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே,முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமி, உடனே விலக வேண்டும்; அவர் மீது, அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நேர்மையான, ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புல னாய்வு குழுவை ஏற்படுத்தி, மேல் விசாரணை நடத்த, கவர்னர் உத்தரவிட வேண்டும்.இந்தக் கோரிக்கைகளை, வலி யுறுத்தி, கவர்னர் மாளிகை முன், தி.மு.க., சார்பில், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
24-ஜன-201914:50:50 IST Report Abuse

oceமுதல் மந்திரியாக வருபவர்களை ஜெயிலுக்கு அனுப்புவதே திமுகவினர் வேலை.

Rate this:
metturaan - TEMA ,கானா
23-ஜன-201920:02:48 IST Report Abuse

metturaanகட்சி நடத்தி காசு பாத்தது பத்தாதுன்னு குறிசொல்ல வேற தொடங்கிட்டாராய்யா ... ஆனாலும் ரொம்ப கொடும .. தாங்கமுடிலடா சாமி ...

Rate this:
rajan. - kerala,இந்தியா
23-ஜன-201918:56:03 IST Report Abuse

rajan.  உள்ளே இருக்க வேண்டிய டபுள் ஜீ கள் எல்லாம் வெளியே உலாத்தினா இப்படி தான் வுடாம வடை சுட்டுகிட்டே இருப்பானுங்க.

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X