கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லோக்சபா தேர்தலுடன் 18 தொகுதி இடை தேர்தல்
உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்

மதுரை: 'லோக்சபா தேர்தலுடன், தமிழகத்தில், காலியாகவுள்ள, 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தும் திட்டம் உள்ளது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை முடித்து வைத்தது.

லோக்சபா தேர்தல், 18 தொகுதி, இடை தேர்தல், உயர் நீதிமன்றம், தேர்தல் கமிஷன், பதில்


திருமங்கலம் அருகே, மதிப்பனுாரை சேர்ந்த, வேதா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, அ.தி.மு.க.,வின், 18 எம்.எல்.ஏ.,க்கள், 2017ல் கவர்னரிடம் மனு அளித்தனர். 18 பேரையும், சபாயநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி

செய்தது. இதை எதிர்த்து, 18 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

தொகுதியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல், காலி இடம் ஏற்பட்டால், ஆறுமாதங்களில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். 18 தொகுதிகள், 2017ல் இருந்து காலியாக உள்ளன. இதனால், அத்தொகுதி மக்களின் குறைகளுக்கு தீர்வு காண முடிய வில்லை. தேர்தல் கமிஷன் காலம் தாழ்த்துகிறது. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்தஅறிக்கையில் கூறியிருந்ததாவது: எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ததை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது. அந்த உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து, முடிவெடுக்க, தேர்தல் கமிஷனுக்கு, ஏப்., 24 வரை கால அவகாசம் உள்ளது.

Advertisement

மேலும்,18 பேரும்,உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது.

இந்நிலையில், 'தமிழகத்தில், 'கஜா' புயல் பாதிப்பு ஏற்பட்டது. நிவாரணப் பணிகள் மேற் கொள்ள வேண்டியுள்ளது' என, தமிழக அரசு தெரிவித்தது.லோக்சபா தேர்தலுடன்,18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Preabhu - Tiruppur,இந்தியா
23-ஜன-201918:19:24 IST Report Abuse

Preabhuஏப்ரல் 24 வரைக்கும் கெடு . இலையெனில் 2024 ஏப்ரல் 24 வரைக்கும் கெடு நீட்டிக்க்ப்படும். ......அது நடக்கவும் நடக்காது .....நடக்கவும் விட மாட்டேன்னு...... பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது

Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-201914:00:59 IST Report Abuse

M.COM.N.K.K.இதற்கு தேர்தல் கமிஷன் வேறுவகையில் அதாவது 18 தொகுதிக்கும் அந்த தொகுதிகளின் வாக்காளர்களை கருத்துக்கணிப்பு கேட்டு நீக்கியது செல்லுமா செல்லதா தெரிந்தால் போனதும்.நீக்கியது சரிதான் என்று தொகுதிமக்கள் சொன்னால் அதன்பிறகு அந்த தொகுதிகளுக்கு தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தலாம் .இதுதான் உண்மையான ஜனநாயகமாகஇருக்கமுடியும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஜன-201909:10:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaகுழப்பம் தீர்ந்தது... நிலுவையில் இருந்த ஒரு வழக்கும் எண்ணிக்கையில் குறைந்தது

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X