எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குளறுபடி?
அண்ணா பல்கலை தேர்வு மதிப்பீட்டில் குளறுபடி?

சென்னை: 'அண்ணா பல்கலை நடத்திய, டிசம்பர் தேர்வு மதிப்பீட்டில், குளறுபடி நிகழ்ந்துள்ளதால், விடைத்தாள்களை மறு திருத்தம் செய்ய வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அண்ணா, பல்கலை, தேர்வு, மதிப்பீடு,குளறுபடி?


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2017ல், புதிய பாட திட்டம் மற்றும் தேர்வு முறை அமலுக்கு வந்தது.இந்த முறையில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த, 'செமஸ்டர்' எனப்படும், அடுத்த பருவ தேர்வில், அதை எழுத முடியாது. மாறாக, ஓராண்டு கழித்தே,தேர்ச்சி பெறாத பாடத்துக்கு, தேர்வு எழுத முடியும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், புதிய தேர்வு முறையை மாற்ற, பல்கலை துணை வேந்தர் சுரப்பா மறுத்து விட்டார்.

இந்த பிரச்னை குறித்து, சமூக ஆர்வலர்கார்த்திக், மாணவர்கள் ஆகாஷ் ராய், அன்பரசன், தமிழினியன் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, தனியார் கல்லுாரிகளில், போதிய பேராசிரியர்கள் இல்லை; கட்டமைப்பு வசதிகளும் இல்லை. அவற்றை, கண்டு கொள்ளாத பல்கலை, மாணவர்களை பாதிக்கும் தேர்வு முறையை மட்டும், அறிமுகம் செய்துள்ளது.

தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வை எழுது வதற்கு, புதிய தேர்வு முறையில், கூடுதல் காலம் தேவைப்படுகிறது. அதனால், மாணவர்கள், உரிய காலத்தில், படிப்பை முடிக்க முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில், நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

Advertisement

நன்றாக படிக்கும் மாணவர்களும், வேண்டும் என்றே, 'பெயில்' ஆக்கப்பட்டது போல தெரிகிறது. விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதன்வழியே, பல்கலைக்கு கோடி கணக்கில் வருவாய் கிடைக்கும்.விடைத்தாள் மதிப்பீட் டில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, விடைத்தாள்களை, எந்த கட்டணமும் இன்றி, மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல, 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட, தேர்வு முறையை ரத்து செய்து, 2013ம் ஆண்டு முறையை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
23-ஜன-201914:53:23 IST Report Abuse

Ravichandran Narayanaswamyஅண்ணா பல்கலைக்கழகம் திருந்தாது...இழுத்து மூடுங்கள்...அங்கிருக்கும் குறைந்தது இருபது ஆசிரியர்களை தூக்கினா தான் ஊழல் குறையும்.. இல்லாவிட்டால் இந்த குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.... உமா மாதிரி குறைந்தது 100 பேர் இருக்கிறார்கள்... கவனியுங்கள்..இட ஒதுக்கீட்டில் வேலை வாங்கி இருக்கலாம் - அதுகளுக்குத்தான் கல்வியின் அருமை தெரியாது...

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
23-ஜன-201914:21:55 IST Report Abuse

a natanasabapathy30 Mark yeduthavanellaam engineering college il serthaalum kaasu koduthu thervaaki lectorur aanaalum intha kathithaan 75 sathavikitham yeduthavanukku mattume engineering medical college admission kodukkavum

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
23-ஜன-201910:30:38 IST Report Abuse

kc.ravindranஎல்லாமே அண்ணா காட்டிய வழியில் தான் நடக்கிறது. அவர்களை அண்ணா வளர்த்த விதம் இது தானா? என்று பொது ஜனம் கருதவேண்டிய நிலைமைதான் கடந்த காலங்கள் நிரூபிக்கின்றன. கோடி கோடியாக திருடி சிறை வசம் விதிக்கப்பட்ட பிறகும் இவர்களை கோவில் கட்டி கும்பிடும் கலாச்சாரம் அண்ணா சொன்னாரா? நெஞ்சம் பொறுக்குதில்லையே. தம்பீ. நெஞ்சம் பொறுக்குதில்லையென்னா என்னென்னு புரியுதா? அது... ரீசண்டா ரிலீசான படம் போல தெரியுதே..

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X