பொது செய்தி

இந்தியா

கவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா

Updated : ஜன 23, 2019 | Added : ஜன 23, 2019 | கருத்துகள் (29)
Advertisement
கவர்ச்சியான முதலீட்டு சந்தை,  பிரிட்டன், விஞ்சியது, இந்தியா

டாவோஸ் : உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு, நேற்று துவங்கியது.இதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா, இந்தாண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் நான்காவது கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தியா, வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீட்டு களம் குறித்து, சி.இ.ஓ.,க்களின் நம்பிக்கை, முறையே, 27 மற்றும் 24 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018ல், முறையே, 46 மற்றும் 33 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், ஜெர்மனி மீதான நம்பிக்கையும், 20 சதவீதத்தில் இருந்து, 13 சதவீதமாக குறைந்துள்ளது.பிரிட்டனில் முதலீடு செய்வது தொடர்பான ஆர்வம், 'பிரெக்ஸிட்' பிரச்னை காரணமாக குறைந்துள்ளது. இந்தியா, கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற மதிப்பீட்டில், 8 சதவீதத்துடன், பிரிட்டனை விஞ்சி, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, கடந்த ஆண்டு, 9 சதவீதமாக இருந்தது.

இந்தவகையில், இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.தாயகம்இதே காலத்தில், தாயகத்தை தவிர, கவர்ச்சிகரமான முதலீட்டுக்கு ஏற்ற பிற நாடுகள் குறித்து கருத்து தெரிவிக்காதோர் சதவீதம், 8லிருந்து, 15 ஆக அதிகரித்துள்ளது. எந்த நாடும், முதலீட்டிற்கு ஏற்றது இல்லை என்போர், 1 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.அடுத்த, 12 மாதங்களில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும் என, 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு, இது, 5 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை, 29 சதவீதத்தில் இருந்து, 57 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இது, இந்தாண்டு, 42 சதவீதமாக குறைந்துள்ளது.

வர்த்தகப் போர், சுய பாதுகாப்பு போன்றவற்றால், வட அமெரிக்காவைச் சேர்ந்த, சி.இ.ஓ.,க்களிடம், பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை பெருமளவு குறைந்து உள்ளது.செயற்கை நுண்ணறிவுஅடுத்த ஓராண்டில், தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நன்கு இருக்கும் என தெரிவித்தோரின் எண்ணிக்கையும், 35 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் வர்த்தகத்தை அடியோடு மாற்றும் என, 85 சதவீத, சி.இ.ஓ.,க்கள் தெரிவித்துள்ளனர். இத்தொழில்நுட்பம், இணையத்தை விட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என, ஆய்வில் பங்கேற்றோரில், மூன்றில் இரு பங்கினர் கூறியுள்ளனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருப்பமான நாடு


இந்தியா, மிக கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், வளரும் நட்சத்திரமாக மின்னுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பானையும், இந்தாண்டு, பிரிட்டனையும் இந்தியா விஞ்சி முன்னேறியுள்ளது. மேலும், வருவாய் வளர்ச்சி குறித்த நம்பிக்கையில், எப்போதும், தலைமை செயல் அதிகாரிகளின் விருப்பமான நாடாக விளங்குகிறது.

பி.டபிள்யு.சி., ஆய்வறிக்கை

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-ஜன-201917:34:16 IST Report Abuse
Darmavan திறமை இருப்பவன் ஏசி யில் வேலை செய்யமுடியும்.கையாலாகாதவன் மூளை இல்லாதவன் வெயிலில்தான் வேலை செய்ய வேண்டும்.இதுதான் நீதி.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-ஜன-201913:24:01 IST Report Abuse
pattikkaattaan உழைத்து வாழ்பவர்களைவிட அரசியலில் இருப்பவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள் ... எல்லா கட்சியிலும்தான் .. அதுதான் மனதுக்கு வலிக்கிறது .. என்னத்த படிச்சு , என்னத்த உழைத்து என்ன பிரயோசனம் ?
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
23-ஜன-201913:01:31 IST Report Abuse
MANI DELHI இங்கு பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சொந்தப்பெயரிலும் புனைபெயரிலும் இந்தியா மண்ணின் வளர்ச்சியை மகிழ்ச்சியாக கூட பார்க்க மனம் வரவில்லை. இயல்பு தானே. வெளிநாட்டில் எந்த வேலை செய்தாலும் மற்ற நாணயங்களில் சம்பளம் வாங்கி மகிழ்ந்த நிலை மாறி விடக்கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம். கருத்து சொல்லும்போது இந்தியா பாஸ்போர்ட்டில் வெளிநாட்டில் தங்கி தங்களை பாஸ்போர்ட் அளவில் மட்டுமே இந்தியராக தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும்விதத்தினை வெகுவாக காண முடிகிறது. வெளிநாடுகளின் சறுக்கலை கூட ஒத்துக்கொள்ளமுடியாத மனநிலையில் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் இன்று மிரண்டு இந்தியாவை நிமிர்ந்து பார்க்கும்போது நாம் நமது வளர்ச்சியை அடிமை எண்ணத்துடன் சுயலாபநோக்கோடு பார்ப்பது தான் இந்தியர்களான நமது சாபக்கேடு. பல காரணிகளால் நாடுகளின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. எந்த நாட்டு பிரஜையும் தங்கள் நாட்டை குறை கூறுவதுமில்லை மற்றவர்கள் கூற அனுமதிப்பதும் இல்லை. நாம் நம் நாட்டிலிருந்து இரண்டாம் குடியாக அங்கு சென்று வெறும் வேலை செய்து சம்பாதித்து நமது மேல் நாம் உமிழ்ந்து கொண்டு இருக்கும்போது நம் வளர்ச்சி உங்களுக்கு தெரியாது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் நம் அனைவருக்கும் தாழ்வே. இதை இங்கு கருத்தெழுதும் அணைத்து நண்பர்களும் படித்தவர்கள் தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X