வறுமை ஒழிப்பு மிகப்பெரிய சவால்: டாவோசில் சத்யா நாதெள்ளா பேச்சு

Added : ஜன 23, 2019 | கருத்துகள் (5)
Advertisement
வறுமை ஒழிப்பு , சவால், டாவோஸ்,  மைக்ரோசாப்ட், சத்யா நாதெள்ளா

டாவோஸ் : பொருளாதார வளர்ச்சி அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், வறுமை ஒழிப்பு மிகப்பெரிய சவால் என டாவோசில் நடந்த உலக பொருளாதார ஆய்வு மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா பேசினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார ஆய்வு மாநாடு நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளின் வர்த்தக, பொருளாதார அமைப்புகளில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நேற்று 'உலகமயமாக்கல் வடிவமைப்பு' என்ற தலைப்பில் வறுமை ஒழிப்பில் உள்ள பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியும், இந்தியருமான சத்யா நாதெள்ளா பேசியது: அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உணவுக்கு தட்டுப்பாடு இல்லாத, அகதிகளே இல்லாத உலகை உருவாக்குவதே பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பமும் தொழில்களும் இணைந்து செயல்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளையும் இணைந்து வளர்வதே உண்மையான பொருளாதார வளர்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் என்ற நிறுவனத்தின் தலைவர் டேவிட் அரிட்சபால் பேசும்போது, தற்போதைய இளைஞர்கள் மிகவும் திறமை மிக்கவர்களாக உள்ளனர். அதை வர்த்தக உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய கல்விமுறை அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதாக இல்லாததது வருந்தத்தக்கது. அதற்கேற்ப கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், என்றார்.

'பீடிங் அமெரிக்கா' தொண்டு நிறுவன தலைவர் ஜூலியா பேசும்போது, உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை கருதுகிறோம். ஆனால் இங்கும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. 40 லட்சம் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலையில் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்க வேண்டியது நமது கடமை. பசியால் மனிதன் மட்டுமின்றி எந்த உயிரினமும் உயிரிழக்க கூடாது. அதற்கேற்ப திட்டமிடப்பட வேண்டும், என்றார்.

கென்யாவில் உள்ள காகுமா அகதிகள் முகாமின் பிரதிநிதி முகம்மது உசேன் மஹ்மூது பேசியது: எங்கள் முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் அகதிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளனர். பிழைப்புக்காக அவர்கள் படும் பாடு காண சகிக்காதது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாள், என்றார். கூட்டத்தில் ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
23-ஜன-201912:24:14 IST Report Abuse
yila எங்கள் நாட்டில், உணவு சேமிப்பு கிடங்குகளில் எலிகளும், பூச்சிகளும் தின்று தீர்க்கும், மழை வெயிலில் அழுகும் தானியத்தை, வறுமையில் இருப்போருக்கு கொடுப்பதற்கு எல்லா டிஜிட்டல் வசதிகளும் உள்ளன. ஆனால், மனம் மட்டும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
23-ஜன-201909:49:57 IST Report Abuse
GMM வறுமை ஒழிப்பு கொள்கை உலகம் வகுக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு ஏழை மக்கள் வறுமையை கட்டுப்படுத்தும். நாட்டின் வருவாய் இழப்பு அதிக போலீஸ் நிலையம், நீதிமன்றம், மருத்துவமனை, சிறைச்சாலை, சூதாட்டம் மூலம் ஏற்படும். இட அபகரிப்பை ஊக்குவித்தல் கூடாது. கச்சதீவு இலங்கைக்கு இந்திரா அம்மையார் வழங்கியத்தில் நில உரிமை இந்தியாவிடம் இருந்து இருக்க வேண்டும். UN அமைப்புக்கு பின் போர் புரிந்து நாடுகளை அபகரிக்க அனுமதி கூடாது. உள்நாட்டு பிரிவினை வளங்களை அபகரிக்க இருக்கும். பாலைவனம் வேண்டி போராடுவது இல்லை. நாட்டின் கடனை ஏற்பது இல்லை. உலக நாடுகள் பிரிவினையை ஏற்க கூடாது. வறுமை குறையும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-201909:23:56 IST Report Abuse
blocked user MyCro$oft நிறுவனம் தனது பயனாளிகளிடம் தரக்குறைவான மென்பொருள்களை விற்று ஏறாளமாக சம்பாதித்துள்ளது. அதில் ஒரு பகுதியை ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொடுக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
23-ஜன-201913:04:34 IST Report Abuse
Pasupathi Subbianஇப்படி ஒரு எதிர்ப்புடன் இருப்பதால் தான் எந்த ஒரு விஷயத்தையும் நிறைவேற்ற முடியவில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X