பிரதமர் கனவு காணும் சந்திரபாபு ‛உளறல்': வைரலாகும் வீடியோ

Added : ஜன 23, 2019 | கருத்துகள் (59)
Advertisement
தெலுங்கு தேசம், சந்திரபாபு நாயுடு, உளறல், கோல்கட்டா, ரபேல், மம்தா

கோல்கட்டா: வருங்காலத்தில் பிரதமர் ஆக வேண்டும் என கனவு காணும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, சமீபத்தில் கோல்கேட்டா கூட்டத்தில் பேசிய பேச்சு, அவரது 'அறிவாற்றலை' அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


சமீபத்தில் கோல்கட்டாவில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை கூட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா ஒரு கூட்டம் நடத்தினார். ஏற்கனவே, மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, அவர்களின் ஆதரவுடன் நாட்டின் பிரதமர் ஆகி விட வேண்டும் என்று சந்திரபாபு கனவு கண்டு வருகிறார். அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டே பேசினார். அவர் பேசும்போது,

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் ஒருமித்த கருத்து இல்லை. காரணம்.. ராகுல், மம்தா, சரத் பவார், தேவகவுடா என 9 பேருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் பிரதமர் கனவு ஆட்டிப் படைக்கிறது. அந்த மயக்கத்தில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசும்போது உளறிக் கொட்டினார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக பேசத் துவங்கியவர் வாய்க்கு வந்தபடி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. ரபேல் என்று சொல்வதற்கு பதில் ஜெட் ஏர்வேஸ் என்றார். ரபேல் என்பது போர் விமானம்; ஜெட் ஏர்வேஸ் என்பது தனியார் விமான சேவை நிறுவனம். இந்த இரண்டுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் சந்திரபாபு பேசியது மேடையிலிருந்த மம்தா போன்ற தலைவர்களை நெளிய வைத்தது. ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை முதற்கொண்டு, விலை விவரம் வரையில் எல்லாவற்றையும் தப்புதப்பாக சொல்லி முடித்தார். (பைட்) சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர் இந்த லட்சணத்தில் மத்திய அரசை விட ஆந்திர அரசு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம் வேறு பட்டுக் கொள்கிறார். (பைட்) சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர் ரபேல் விமானங்கள் பற்றிய அடிப்படை அறிவு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தான் இல்லை என்று நினைத்தால் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் இருக்கும் யாருக்குமே இல்லை போல.. என நெட்டிசன்கள் சந்திரபாபுவை கிண்டலடித்து தள்ளுகின்றனர்.

'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 136 ஜெர் ஏர்லைன்ஸ்களை, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வாங்க முடிவு செய்தனர். ஆனால் இந்த அரசு (பா.ஜ.,) பெரிய அளவில் மோசடி செய்கிறது. 36 ஜெட் ஏர்வேஸ்களை அதே 1.4 பில்லியன் டாலர் செலவில் வாங்குகின்றனர்'' என்று பேசிக்கொண்டே போனார்.

அதாவது, ரபேல் என்பது போர் விமானம் என்பது கூட தெரியாமல், அதை ஜெட் ஏர்லைன்ஸ் என்றும் ஜெட் ஏர்வேஸ் என்றும் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு பேசியது, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏறபடுத்தியது. அவர் குறிப்பிட்ட தொகையும் தாறுமாறாக இருந்தது.
சந்திரபாபு பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த மம்தா உள்பட மற்ற தலைவர்கள் நெளிந்தனர்.

''ரபேல் விமானங்கள் பற்றிய அடிப்படை அறிவு காங்., தலைவர் ராகுலுக்கு தான் இல்லை என்று நினைத்தால், எதிர்கால பிரதமர் கனவில் இருக்கும் சந்திரபாபு, ராகுலை விட மோசமாக இருக்கிறாரே'' என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கிண்டல்களும் அனல் பறக்கின்றன. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
29-ஜன-201900:01:35 IST Report Abuse
K.   Shanmugasundararaj இவ்வளவு நெட்டு நெட்டு றிங்களே ,கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஜனசங் கட்சியை(பாரதீய ஜனதாவின்முன்னோடி ) நிறுவிய ஷியாம் பிரசாத் முஹீர்ஜியின் பிறந்த மாநிலம் மேற்கு வங்கத்துக்கு பதிலாக குஜராத் அப்படின்னு சொன்னாரே அப்ப எங்க போனீங்க.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
25-ஜன-201916:09:20 IST Report Abuse
Ramamoorthy P நாயுடுகாரு தேர்தலுக்கு பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க இப்படி உளறி கொட்டினாரோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
24-ஜன-201916:51:25 IST Report Abuse
TechT Instead of jet aircraft he mistakes as jet airways its understandable,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X