சையத் சுஜாவை நம்பாதீங்க: இத்தாலி பத்திரிகையாளர் சாடல்

Updated : ஜன 23, 2019 | Added : ஜன 23, 2019 | கருத்துகள் (93)
Share
Advertisement
புதுடில்லி: லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய சையத் சுஜா நம்பகத்தன்மை இல்லாதவர் என, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்தாலி பத்திரிகையாளர் கூறியுள்ளார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒரு அமைப்பான சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும், இந்த குற்றச்சாட்டில் இருந்து ஒதுங்கி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சையத் சுஜா,

புதுடில்லி: லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய சையத் சுஜா நம்பகத்தன்மை இல்லாதவர் என, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்தாலி பத்திரிகையாளர் கூறியுள்ளார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒரு அமைப்பான சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும், இந்த குற்றச்சாட்டில் இருந்து ஒதுங்கி கொண்டது.பல்வேறு தகவல்கள்


இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறேன்' என, கம்ப்யூட்டர் நிபுணர் எனக் கூறிக் கொள்ளும், சையது சுஜா என்பவர், அழைப்பு விடுத்து இருந்தார். இதற்காக , பத்திரிகையாளர் சந்திப்பு, பிரிட்டனின் லண்டன் நகரில்,நேற்று முன்தினம்(ஜன.,21) நடந்தது.

ஐரோப்பாவிற்கான இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் ஸ்கைப் மூலம் பேசிய சையத் சுஜா, 2014 லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முறைகேடு காரணமாக அந்த தேர்தலில் காங்கிரஸ் 201 தொகுதிகளை இழந்தது. பா.ஜ.,வை தவிர்த்து ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்வது பற்றி தெரிந்து கொள்ள தன்னை அணுகின. தனது குழுவை சேர்ந்த சிலர் இறந்ததால், தனது உயிருக்கும் ஆபத்து என அஞ்சி அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டுள்ளதாக கூறினார்.


கபில் சிபல் பங்கேற்பு


இது தொடர்பாக காங்கிரசின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில், இந்த நிகழ்ச்சியை ஐரோப்பாவிற்கான பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்தது. சர்வதேச பத்திரிகை சங்கம், ஒருங்கிணைத்தது. அமெரிக்காவில் வசிக்கும் கம்ப்யூட்டர் நிபுணர், சைபர் தாக்குதல் மூலம், எவ்வாறு தேர்தல்களை சீர்குலைக்க முடியும் என விளக்குவதாக கூறினார்.

அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டிருந்தது. இது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் ஒத்து போகிறது.இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன் உடனடியாக எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. சையத் சுஜா, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் இசிஐஎல் எனப்படும் எலெக்ட்ரானிக் கார்பரேசன் இந்தியா லிமிடெட் அமைப்பிலும் பணிபுரிந்ததாக கூறியிருந்தார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


மறுப்பு


இதனை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்படுகிறது. இயந்திரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியது. தொடர்ந்து, டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.ஒதுங்கல்


இதனையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வெளிநாட்டு பத்திரிகை சங்கம் வெளியிட்ட அறிக்கை: கம்ப்யூட்டர் நிபுணர் ஊழல் மற்றும் 2014 இந்திய தேர்தல் குறித்து மிகத்தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.கடந்த விழாழக்கிழமை நடந்த தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகவும், இதனால், பயணம் செய்ய முடியாது என்றார். இந்திய தேர்தல் குறித்து விமர்சனம் செய்ததால் தாக்கப்பட்டதாக கூறுகிறார்இந்த ஆண்டு 90 கோடி மக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். சையத் சுஜா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தற்போதும் தொடர்கின்றன.சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகளில் இருந்து வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம் ஒதுங்கி கொள்கிறது. சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நிருபணம் ஆகவில்லை.
ஆதாரம் இல்லைஇதனை தொடர்ந்து, லண்டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இத்தாலிய பத்திரிகையாளர் டேபோரா போனெட்டீ வெளியிட்ட அறிக்கை:
லண்டனில் நடந்த கூட்டத்தில் கம்ப்யூட்டர் நிபுணர் சையத் கூறிய பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லைஇந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் பேசிய அவர், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை காட்டவில்லை. அவர் உண்மையான நபர் அல்ல. அவருக்கு வாய்ப்பு அளித்திருக்க கூடாது.

.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
24-ஜன-201912:23:55 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி உலர்ன்னா நல்லா மார்கெட்டு கிடைக்குமமா. லிகிங்ஸ் நெறியா பெரு கொடுத்துவச்சிருவாங்கலமா.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
23-ஜன-201919:58:30 IST Report Abuse
Cheran Perumal சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ஹேக் செய்து தான் காங்கிரஸ் வெற்றிபெற்றதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். எந்த வித ஆதாரமும் இல்லாமல்தான் கடுமையான குற்றசாட்டுகளைக்கூறி காங்கிரஸ் மக்களை குழப்புகிறது.
Rate this:
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
23-ஜன-201919:14:08 IST Report Abuse
Devanatha Jagannathan காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தோற்ற தோற்கப்போகும் விஷயத்திற்கு ஒரு காரணம் சொல்ல வேண்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X