பிரியங்கா வருகை: உருமாறுது பா.ஜ., உத்தி

Updated : ஜன 23, 2019 | Added : ஜன 23, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: உ.பி., கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக காங்., கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கபபட்டது, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. யோகியும் கிழக்கு உ.பி.,யை சேர்ந்தவர் தான்.யோகியின் தொகுதியோகியின் கோரக்பூர் தொகுதியும், மோடியின் வாரணாசி தொகுதியும் இப்பகுதியில் தான் அமைந்துள்ளன. யோகியும் அவ்வளவு எளிதாக விட்டுத்
பா.ஜ., பாஜ, யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், பிரியங்கா, ராமர் கோயில், சபரிமலை,  கேரளா, பிரதமர் மோடி,

புதுடில்லி: உ.பி., கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக காங்., கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கபபட்டது, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. யோகியும் கிழக்கு உ.பி.,யை சேர்ந்தவர் தான்.


யோகியின் தொகுதி


யோகியின் கோரக்பூர் தொகுதியும், மோடியின் வாரணாசி தொகுதியும் இப்பகுதியில் தான் அமைந்துள்ளன. யோகியும் அவ்வளவு எளிதாக விட்டுத் தரக்கூடிய ஆள் கிடையாது. தனது முழு ஆற்றலையில் இங்கு செலவழித்து, பா.ஜ.,வை சோனியா குடும்பம் வீழ்த்தாமல் பார்த்துக்கொள்வார்.
அடுத்த கும்பமேளாவுக்குள் அதாவது, 2025க்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட, ஆர்.எஸ்.எஸ்., கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதுவரை யோகி காத்திருக்க மாட்டார் என்கிறார்கள். பிரியங்காவை சமாளிக்க, ராமர் கோயில் பிரச்னையை யோகி மீண்டும் கையில் எடுப்பார் போல தோன்றுகிறது.


சபரிமலை சர்ச்சை


ராமர் கோயிலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சபரிமலை பிரச்னைக்கும் தர பா.ஜ., எண்ணி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் தான், 5 ஆயிரம் சாகாக்களை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. நாட்டிலேயே இது தான் அதிகம்.
கேரளா மட்டுமல்லாது, பல மாநிலங்களில் ஐயப்ப பக்தர்கள் இருக்கிறார்கள். சபரிமலையில் இந்துக்களின் நம்பிக்கையும், பாரம்பரியமும் சிதைக்கப்படுவது, பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இம்மக்கள் தேர்லில் தங்களை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது என பா.ஜ., நம்புகிறது.


பிரதமர் தாக்கு


இதன் வெளிப்பாடாகத் தான், ஜன.15ம் தேதி கேரளாவில் கொல்லம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‛‛கேரள அரசு இப்படியே செயல்பட்டுக்கொண்டு இருந்தால், திரிபுராவில் ஏற்பட்ட நிலைமை தான் இங்கும் ஏற்படும். சபரிமலை போன்ற பதட்டமான பிரச்னைகளை கேரள அரசு கையாளும் விதம் வெட்கக்கேடாக உளளது. கம்யூனிஸ்ட்கள் எப்போது வரலாறு, கலாசாரம், ஆன்மிகத்தை மதிப்பதில்லை என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர் '' என கடுமையாக தாக்கி பேசினார்.

மற்ற பிரபலமான மத தலைவர்களையும் சபரிமலை சர்ச்சையில் தலையிட்டு, பா.ஜ.,வுக்கு ஆதரவை பெருக்க ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு செய்து வருகிறது. இதனாலேயே மாதா அமிர்தானந்தமயி, சிவகிரி மடத்தின் சுவாமி பிரகாஷானந்தா, கோல்கட்டா ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி கோலோகானந்தா ஆகியோர் சபரிமலை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மீண்டும் மோடி வருகை


ஜன.27 ம் தேதி, மீண்டும் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் வருகிறார் மோடி. லோக்சபா தேர்தல் பிரசாரத்தையும் இதன் மூலம் துவக்குவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் தான் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ., எம்.பி., கேரளாவில் பா.ஜ., இன்னும் கணக்கை துவக்கவில்லை. தமிழகமும் கேரளாவும் சேர்ந்து 59 எம்.பி.,க்கை வைத்திருக்கின்றன. இதில் சில தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் திட்டம்

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201908:56:42 IST Report Abuse
Saleem என்ன செய்தாலும் ...... தோற்பது உறுதி ..... இமயமலைக்கு போய் செட்டில் ஆகவேண்டியதுதான் ....
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
23-ஜன-201920:16:43 IST Report Abuse
rishi அப்ப ராகுல் வேளைக்கு ஆகலையா, இன்னும் வீட்ல யாராவது பெரிய ஆளுங்க சின்ன பிள்ளைங்க இருந்த கட்சில சேது விடுங்க
Rate this:
Cancel
jothi.n - chennai,இந்தியா
23-ஜன-201919:55:26 IST Report Abuse
jothi.n காங்கிரஸை காப்பாற்ற கவர்ச்சி தோற்றம் கொண்ட பிரியங்காவை களத்தில் இறக்க முயற்சி. இதுவரையில் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து செல்லும் பறவை, மற்ற நேரங்களில் ஊழல் பணத்தை பாதுகாக்கவும், அதை மேலும் பன்மடங்கு ஆக்குவதும் முழு வேலை. மக்களுக்காக எந்த குரலும் கொடுத்தில்லை, நன்மை எதுவும் செய்ய வில்லை. மருமகன் சத்தமில்லாமல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்து குவிப்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X