சசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சசிகலாவுக்கு சொகுசு வசதி
கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

பெங்களூரு:''சிறையில், சசிகலாவுக்கு அளிக்கப் பட்ட சொகுசு வசதிகள் தொடர்பாக, தவறு செய்தவர்கள் மீது, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் கூறினார்.

 சசிகலா,சொகுசு வசதி, கர்நாடக அரசு,அதிரடி நடவடிக்கை


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான, சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'சிறையில், இவருக்கு சொகுசு வசதிகள் செய்து

கொடுக்கப்பட்டது உண்மை' என, இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்மட்ட கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து தருவதற்காக, சிறைத்துறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, ஏற்கனவே புகார் உள்ளது. இதுகுறித்து, கர்நாடக மாநில, ஊழல் ஒழிப்பு படை விசாரித்து வருகிறது.இது தொடர்பாக, சசிகலா ஆதரவாளரும், அ.ம.மு.க., செய்தி தொடர்பாளருமான, புகழேந்தி யிடம், ஊழல் ஒழிப்பு படை அதிகாரிகள், இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து, கர்நாடக உள்துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, எம்.பி.பாட்டீல், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது பற்றி,ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்.,

Advertisement

அதிகாரி, வினய்குமார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக, ஊடகங்களில் வெளியாகி யுள்ள தகவலையும் கவனித்துவருகிறேன். தவறு செய்தவர்கள் மீது, அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.சட்டத்தை விட மேலான வர்கள் யாரும் இல்லை.இவ்வாறு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (20+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
24-ஜன-201919:19:19 IST Report Abuse

S.Ganesan"தவறு செய்தவர்கள் மீது, அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.சட்டத்தை விட மேலான வர்கள் யாரும் இல்லை " என்று இவங்க கொடுக்கும் அறிக்கைகளை பார்த்தாலே தெரியுது எல்லாம் சும்மா" என்று

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-201915:48:47 IST Report Abuse

Endrum Indianஅதிரடி நடவடிக்கை என்றால் என்ன, அதில் ஈடுபட்டவர்களை டிரான்ஸ்பேர் செய்வீர்கள் இது அதிரடி?????? அதில் ஈடுபட்ட எல்லோரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும், பென்ஷன் கிடையாது. சித்தம் கலங்கியா ராமையாவை உடனே 50 வருட ஜெயில் தண்டனை அந்தமானில் செய்வீர்களா?? இல்லையல்லவா??

Rate this:
oce - chennai,இந்தியா
24-ஜன-201915:03:29 IST Report Abuse

oceஅடுத்த சட்டமன்ற தேர்தலில் சின்னம்மா முதல்வர் தினகரன் துணை முதல்வர்.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X