பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஜாக்பாட்'!
லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:
ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு

புதுடில்லி: மொபைல் போன், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வரும், லோக்சபா தேர்தலின்போது, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய, கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால், சமூக வலைதள நிறுவனங்களுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'ஜாக்பாட்:,லோக்சபா,தேர்தலில், சமூக வலைதளங்களுக்கு... :ரூ.12 ஆயிரம் கோடி, கிடைக்கும், என, எதிர்பார்ப்பு


லோக்சபாவுக்கு, வரும், ஏப்ரல் - மே மாதங் களில் தேர்தல் நடக்க உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நடவடிக்கையாக, இந்த தேர்தல் அமைய உள்ளது.தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் விஷயத்தில், அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதேபோல், அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

விளம்பரம்


கோடிக் கணக்கில் பணம் புரளும், இந்த ஜனநாயக திருவிழாவுக்காக,

'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' என, பல்வேறு சமூக வலைதளங்களும், இந்த தேர்தல் காலத்தில், அதிக விளம்பரங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கின்றன.

இது குறித்து, சமூக வலைதளங்களுக்கான, விளம்பரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தல், 'டிஜிட்டல்' முறையில் பிரசாரம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்தது. கட்சிகள் அனைத்தும், அதி நவீன பிரசார யுக்திகளை கையாண்டன. இடைப்பட்ட, ஐந்து ஆண்டுகளில், சமூக வலைதளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கணிப்பு


அதனால், வரும் லோக்சபா தேர்தலில், சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்வது அதிகரிக்கும். எங்கள் கணிப்பின்படி, கடந்த தேர்தலைவிட, வரும் தேர்தலில், சமூக வலை தளங்கள் மூலமான விளம்பரம், 150 மடங்கு அதிகரிக்கும். அதாவது, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, விளம்பரம் செய்யப்படும் என,

Advertisement

எதிர்பார்க்கிறோம்.இதில், பேஸ்புக்கில் மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு விளம்பரங்கள் செய்யப்படும் என, கணிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களை அதிகமானோர் பயன்படுத்துவதால், இவற்றில் விளம்பரம் செய்ய, அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, வரும் லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, விளம்பரங்களைக் கட்டுப்படுத்த வும், அதை கட்சியின் செலவு கணக்கில் சேர்க்கும் வகையிலும், விளம்பரம் தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும், கொள்கைகளை வகுத்து வருவதாக, இணைய தேடுபொறி நிறுவன மான, 'கூகுள்' தெரிவித்து உள்ளது. சமூகவலை தளங்களும், இதுபோன்ற கொள்கை முடிவுகள் எடுக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா
24-ஜன-201910:26:24 IST Report Abuse

COW காப்பாளன் SURESH சமூகவலைத்தளங்கள் பக்கம் பாஜக எட்டி பார்க்கவே முடியாது, பல முக்கிய சமூக வலைதங்களில், வார்த்தைகளுக்கு கட்டுப்பாட்டு கிடையாது, மோசமான வார்த்தைகளில் பாஜக வறுத்தெடுக்கப்படுகிறது, சொற்ப அளவிலேயே பாஜக ஆதரவு கருத்துக்கள் காணப்படுகிறது, படிப்பறிவு இல்லாத,பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஹிந்து என தன்னை வெறித்தனமாக அடையாளப்படுத்தி கொள்ளும் அப்பாவிகள், போன்றோர் உள்ள வட மாநிலங்கள் தான் பாஜவின் முக்கியக்குறி, இது போன்ற மாநிலங்களான உ பி, ம பி உள்ளிட்ட மாநிலங்கள் தான் சென்ற முறை பாஜவிற்கு 190 பாராளுமன்ற உறுப்பினர்களை அள்ளி தந்தது, காங்கிரஸ் பொறுத்த வரை பாஜகவை பேச விட்டு வேடிக்கை பார்த்தாலே போதுமானது, பாஜகவின் நாக்கே, எளிதாக காங்கிரசுக்கு வெற்றியை தேடி தரும்.

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
24-ஜன-201912:30:10 IST Report Abuse

சுந்தரம் பாஜக அனுதாபிகள் வெளியிடும் கருத்துக்களும் மரியாதையற்ற வசை சொற்களுமே பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்துவிடும். ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஜன-201908:40:03 IST Report Abuse

Srinivasan Kannaiyaவிளம்பரம் என்றாலே தரம் இல்லாத பொருள் என்று அர்த்தம்

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
24-ஜன-201907:37:36 IST Report Abuse

Samy Chinnathambiபாரு எவனும் கார்பொரேட் கொள்ளை லாபம் அடிக்கின்றன என்று கதறவில்லை... ஏன்னா சம்பாதிக்கிறது பூரா வெளிநாட்டு கம்பெனிகள்.....ஏன் மோடி ராகுலை எல்லாம் பணத்தை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்கின்றனர் என்று கதற போவதில்லை.......ஆனா நம்ப நாட்டு அம்பானி டாடா எல்லாம் சம்பாதிச்சா வயித்தெரிச்சல்ல அப்படியே விழுந்து கதறுவாங்க...................

Rate this:
தலைவா - chennai,இந்தியா
24-ஜன-201909:01:32 IST Report Abuse

தலைவா கனவு கலைய வில்லையா? ஜியோ போன்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் யாருடையது??? ...

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
24-ஜன-201909:42:24 IST Report Abuse

சுந்தரம் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மோடி படத்துடன் கூடிய ஜியோ விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டதே. உங்களுக்கு தெரியாதா? ...

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
24-ஜன-201913:36:05 IST Report Abuse

Samy Chinnathambiபார்த்தீங்களா நான் சொன்ன மாதிரியே இப்பவும் அம்பானி தான் சம்பாதிச்சார்னு குற்றம்/ வயித்தெரிச்சல் சொல்றீங்க? மற்ற கம்பெனிகளின் விளம்பரம் பற்றி சொல்லவே இல்லை...............அம்பானி சம்பாதிக்கலன்னு நான் சொல்லல.... நீங்க வயித்தெரிச்சல் படறீங்கன்னு தான் சொன்னேன்...நீங்களும் ஒத்துக்கிட்டீங்க........ ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X