ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது| Dinamalar

ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது

Added : ஜன 23, 2019
Advertisement
 ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது

மும்பை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக, மஹாராஷ்டிராவில், 17 வயது சிறுவன் உட்பட, ஒன்பது பேரை கைது செய்து, பயங்கரவாத தடுப்பு படையினர், விசாரித்து வருகின்றனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியரசு தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்திய சோதனையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர், ஒரு குழுவாக, நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில், சிலரை கண்காணித்து வந்தனர். அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால், கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலரை, கண்காணித்து வந்தோம். மும்பை, தானே, அவுரங்காபாதைச் சேர்ந்த இவர்களது நடவடிக்கைகள், சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தன. இதையடுத்து, கைது செய்தோம்.குடியரசு தின விழா நடக்கவுள்ளதால், அதை சீர்குலைக்க, இவர்கள் நாசவேலையில் ஈடுபட இருந்ததாக, தகவல் கிடைத்தது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஒருவன், 17 வயது சிறுவன். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அவர்களிடமிருந்து, சில ரசாயனங்கள், வெடிமருந்துகள், மொபைல் போன்கள், ஆசிட் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X