திருச்சி: ''தமிழகத்தை பற்றி கவலைப்படாத நிலையில், ஆட்சியாளர்கள் உள்ளனர்,'' என்று, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.
திருச்சி, முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., பரணிகுமார் இல்ல திருமணம் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்திவைத்து, ஸ்டாலின் பேசியதாவது:
கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட, திட்ட அறிக்கையை தயாரித்து, மத்திய
அரசிடம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இது, தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல; தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியளிப் பதாக உள்ளது.மேகதாது அணை விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.அதுமட்டுமல்ல, 55 எம்.பி.,க்கள், கட்சி பாகுபாடுகளை கடந்து, நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து, 'மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது' என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, பார்லிமென்ட்டில் பேசிய, மத்திய அமைச்சர், நிதின்கட்காரி, 'மத்திய அரசின் அனுமதி இல்லாமல், மேகதாதுவில் அணை கட்ட முடியாது; தமிழகம் உட்பட அண்டை மாநில அரசுகளுடன் கலந்து பேசி தான், முடிவெடுப்போம்' என, கூறியுள்ளார்.
ஆனால், இன்று வந்துள்ள தகவல்படி, கர்நாடகா அரசு, தன்னிச்சையாக திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் அளித்திருப்பதும்,
அதை மத்திய அரசு மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு உள்ளதாக தெரிகிறது. இதன் பிறகும், முதல்வர் பழனி சாமி, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
ஆகவே ஆட்சியாளர்கள், தமிழகத்தைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில் உள்ளனர். இந்த ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (37)
Reply
Reply
Reply