பதிவு செய்த நாள் :
'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்'

புதுடில்லி: ''ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையின் போது, ஆள் அரவமற்ற வனப் பகுதியில், ஐந்து நாட்கள் தனியாக தங்கியது தான், எனக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ,5 நாள் ,வனவாசம்,பிரதமர்,நரேந்திர மோடி,மோடி


குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதும், தற்போது பிரதமரான பின்னும், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், பிரதமர் மோடி, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


இதற்கான காரணம் குறித்து, சமீபத்தில்,

'ஹியூமன்ஸ் ஆப்பாம்பே' என்ற பிரபல, 'பேஸ்புக்' பக்கத்துக்கு, பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:என், 17வது வயதில், இரண்டு ஆண்டுகள் இமய மலையில் தங்கியிருந்தேன். அங்கிருந்து வந்த பின், மக்களுக்கு சேவையாற்ற விரும்பினேன்.

முதல் முறையாக,ஆமதாபாத் நகருக்கு வந்த போது, என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அங்கு, என் உறவினரின் உணவகத்தில், அவருக்கு உதவியாக இருந்தேன்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முழு நேர தொண்டனாக சேர்ந்த பின், பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசவும்,பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் சுத்தம் செய்வது, தொண்டர்களுக்கு டீ மற்றும் உணவு தயாரிப்பது, பாத்திரங்களை கழுவுவது ஆகிய வேலைகளை செய்தேன்.ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டி கையின் போது, ஏதாவது ஒரு காட்டில்,

Advertisement

ஐந்து நாட்கள் தனியாக தங்குவேன். அங்கு, மக்கள் நடமாட்டம் இருக்காது. இவ்வாறு தங்குவதால், புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

ஒவ்வொருவரும், குறிப்பாக, இளைய தலை முறையினர், பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விலகி, தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டும். அப்போது தான், அவர் களுக்கு புத்துணர்ச்சியும், நிறைய மாற்றங் களும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-201916:06:27 IST Report Abuse

Endrum Indianஇதெல்லாம் சொல்றதுலே ஒரு புண்ணியம் இல்லே, இங்கு இருக்கும் முஸ்லிம்களுக்கு கிருத்துவர்களுக்கு இந்து எதிர்ப்ப்பாளர்களுக்கு அல்லா வாழ்க கிறிஸ்து வாழ்க என்று சொல்கிறார்களோ இல்லையோ மோடி ஒழிக, பி.ஜெ.பி. ஒழிக, ஆர்.எஸ்.எஸ். ஒழிக என்று சொல்லவேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும். உங்கள் 17 மணிநேர உழைப்பு, லீவு எடுக்காமல் பணி செய்தல், 5 நாள் வனவாசம் இதெல்லாம் மேலே சொன்ன யாருக்கும் புரியவே புரியாது. வெறும் ஆ ஊ என்று உளறுவார்கள்.

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
24-ஜன-201915:55:32 IST Report Abuse

Snake Babuஆண்டுக்கு 5 நாள் வனவாசம், நல்லதுதான் வாழ்த்துக்கள், நம்ம ஆயாகூட அடிக்கடி குடாநாட்டுக்கு போவாங்க, ஓய்வுக்கு போறாங்க சரி, இதனால் நாட்டுக்கு மக்களுக்கும் ஏதாவது ஒரு பயன் இருக்குமா என்று பார்த்தால் மாறாக நம்ம பிரதமர் மக்களை நடுத்தெருவுக்குத்தான் கொண்டாந்தார், கேட்டால் அவர்கள் எல்லாம் அரசை ஏமாற்றியவர்கள் என்று குற்றம் சாட்டுவார்கள், GST அதிக வரிபோட்டு மக்களை கொடுமைப்படுத்துனார்கள் அதை கேட்டால் சிறுவியாபாரிகள் அரசை ஏமாற்றினார்கள் என்று அவர்களையும் ஒழித்தாயிற்று, எப்படியோ பொருளாதாரத்தை நொறுக்கி எதோ சில பணக்காரர்களை மட்டும் மேலும் பணக்காரர்கள் ஆக்கிவிட்டு அதில் பெருமை, இதுக்கு பிஜேபி நண்பர்கள் வனவாசம் ஆஹா ஓஹோ என பசப்பு வார்த்தைகள், எவ்வளவு நாள் தான் இந்த ஆஹா ஓஹோ வேலை செய்யும் என்று தெரியாது ஒன்று டீ போட்டவர் என்று அனுதாபம் இல்லை என்றால் இப்படி அதுவும் இல்லை என்றால் இத்தாலி வாரிசு ஊழல் அப்படினு எதிர்க்கட்சியை குறைகூறுவது இப்படியே குறைக்காலத்தை ஒட்டிவிட்டு செல்லுங்கள். மக்களுக்குத்தான் ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு பப்பு கூட பிரியங்காவும் சேர்ந்தாயிற்று இந்த கொடுமையில்லாம் மக்கள் மேல் திணித்த பெருமை பிஜேபியை சாரும் நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
Seena - Salem,இந்தியா
24-ஜன-201914:58:10 IST Report Abuse

Seenaஅதை பற்றி கவலைப்படுபவர் அவர் இல்லை . அவருக்கு குடும்பமா இல்லை குட்டியா??? தேசப்பணி ஒன்றே அவரின் கொள்கை.....

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
26-ஜன-201913:02:56 IST Report Abuse

muruguஅப்படியா ? ...

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X