சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மோடியை விதைக்கும் ஸ்டாலின்!

Updated : ஜன 24, 2019 | Added : ஜன 24, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 சிந்தனைக்களம், மோடி, ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், திமுக, பிரதமர், காங்கிரஸ்

'மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!'எங்கிருந்து... இந்திய அரசின் நிர்வாகத்தில் இருந்து; பிரதமர் அலுவலகத்தில் இருந்து!ஆக, மோடி எந்நேரமும் அலுவலகப் பணியில் இருக்கிறார் என்பது உண்மை. 'ஒரு நாளைக்கு நான், 18 - 20 மணி நேரம் உழைக்கிறேன்' என்று அவர் சொன்னது உண்மை. இந்த உண்மையைத் தான், 'மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என்று சொல்லி, கோல்கட்டா கூட்டத்தில் விதைத்து வந்திருக்கிறார் ஸ்டாலின்.


யாருக்கு பயம்?

'எதிர்க்கட்சிகள் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்பது, மோடியை பயம் காட்டியிருக்கிறது' - இது, வங்க மண்ணில் ஸ்டாலினின் கர்ஜனை. 'நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, மோடியை எதிர்க்க வேண்டும்' - இது, கர்ஜனைக்கு பின், மேடையில் வீற்றிருந்த, 22 கட்சி தலைவர்களிடமும் அவர் விடுத்த வேண்டுகோள்.ஸ்டாலின் இப்படி கர்ஜித்ததும், 'பத்து பேர் சேர்ந்து ஒத்தை ஆளை எதிர்க்கிறாங்கன்னா யார் பலசாலி?' என்று, ரஜினி அன்று கேட்டது, 'பளிச்'சென்று ஞாபகத்திற்கு வந்தது! பின்னே, இத்தனை பேர் சேர்ந்து, ஒற்றை ஆள் மோடியை எதிர்க்கின்றனர் எனில்... பயம் யாருக்கு?சரி... மோடியை எதிர்க்க வேண்டும் எனும் ஒற்றை குறிக்கோளுடன் எல்லாரும் ஒன்று கூடிய பின்னும், 'நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மோடியை எதிர்க்க வேண்டும்' என்ற வேண்டுகோளை, ஸ்டாலின் வைத்தது எதற்காக?ஆக, மேடையில் இருந்த யாரிடமும் ஒற்றுமை இல்லை என்பது, ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது.

'பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி பிரதமராக வேண்டும்' என்று ஆசைப்படும் சமாஜ் வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ் மேடையில் இருக்கிறார்; ஆனால், மாயாவதி இல்லை. 'காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமராக வேண்டும்' என்று ஆசைப்படும் தி.மு.க., தலைவர் மேடையில் இருக்கிறார்; ஆனால், ராகுலோ, சோனியாவோ மேடையில் இல்லை.ராகுலை, பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்த போது, சாட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்காரர்கள், 'பிரிகேடு பரேடு' மைதானத்திலேயே இல்லை.


ஸ்டாலின் அறியாததா?

கேரள முதல்வரும், புதுச்சேரி முதல்வரும், ஆந்திர முதல்வரும் இருந்த மேடையில், ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின், கோல்கட்டா விழாவில் அமைதியாகி விட்டார். இப்போது கேட்டால், 'அது, தி.மு.க., நடத்திய விழா என்பதால், என் விருப்பத்தை சொன்னேன்' என்கிறார். விருப்பத்தை சொல்வதும், முன்மொழிவதும், வேறு வேறு என்பது, ஸ்டாலின் அறியாததா?மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானித்து வந்த கட்சிகளுள் ஒன்றான, தி.மு.க.,வின் தலைவருக்கு, தன் கருத்தை பகிரங்கப்படுத்த, சொந்தமாக விழா எடுக்க வேண்டிய சூழல் வந்து விட்டதா.

சரி... ஸ்டாலின் இப்போது சொல்வது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், 'ராகுலின் கரத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும்' என்று, அன்றைய விழாவில், அவர் கேட்டுக் கொண்டது எதற்காக?ஆக, ஸ்டாலின் மனம் மாறி விட்டார். அன்று ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர், கோல்கட்டா மேடையில், 'மோடி - அமித் ஷாவை பயமுறுத்தும் இரும்பு பெண்மணி' என்று, மம்தாவை புகழ்கிறார்.'இரும்பு பெண்மணியான மம்தாவுக்கு, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் ரத யாத்திரைக்கு அனுமதி தர பயம்' எனும் செய்தி, ஸ்டாலினை இன்னும் சென்று சேரவில்லையா?


மம்தாவின் விருப்பம்

கடந்த, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன மோசடியில் மம்தாவுக்கு பங்கிருக்கிறது' என, மோடி சொல்ல, 'நான் மட்டும் பிரதமர் என்றால், மோடியை கயிற்றால் கட்டி சிறையில் தள்ளுவேன்' என்று கோபமானவர் மம்தா.இப்போது அவருக்கு தேவை, மோடியை கட்டிப் போடும் கயிறு; அந்த கயிறை திரிக்க, சில கட்சிகளின் தலைவர்கள். இதனால் தான், மேடையில் பேசும் போது, 'இங்கு பல தலைவர்கள் உள்ளனர். தேர்தலுக்குப் பின், யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம்' என்று, தன் பிரதமர் கனவை கோடிட்டும் காட்டினார். 'ராகுல் அடுத்த பிரதமர் இல்லை' என்பதை, இதை விட வேறு எப்படி ஸ்டாலினுக்கு புரிய வைக்க முடியும்!சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணை, நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இது தொடர்பாக, கூடுதல் குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கிய, முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தின் மனைவியான நளினி சிதம்பரம், முன் ஜாமின் பெறும் அளவிற்கு, சி.பி.ஐ., நெருக்குகிறது.இந்த சூழலில், மோடியை கட்டிப் போடும் கயிறு, மம்தாவுக்கு கட்டாயம் தேவை. மம்தாவின் இத்திட்டத்தை உணர்ந்து தான், மாயாவதியும், சோனியாவும் விழாவை தவிர்த்து விட்டனர். ஸ்டாலினோ, மோடியின் மீதுள்ள அச்சத்தை, மேடையேறி உணர்த்தி விட்டார்.


ஒப்புதல் வாக்குமூலம்

மோடி கில்லாடி தான். இல்லையென்றால், 'அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதைப் போல, மோடி ஆட்சியில் ஊழலும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது' என்று ஸ்டாலினை பேச வைத்திருப்பாரா! இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதா. என்ன இல்லை... 'கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அதிகாரத்தைப் போலவே ஊழலும், ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் தாறுமாறாய் பரவிக் கிடந்தது' என்று, ஸ்டாலின் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமல்லவா இது!


மோடி அலை

இந்த இடத்தில், நாம் ஒன்றை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இப்போது வரை, தி.மு.க., என்று உச்சரிக்கும் அளவிற்கு, ஸ்டாலின் பெயரை மோடி உச்சரிப்பதில்லை. ஆனால், எங்கு சென்றாலும், எந்த மேடையில் ஏறினாலும், 'சாடிஸ்ட் மோடி, மோடியின் பாசிச ஆட்சி' என்று, மோடியின் பெயரை உச்சரிப்பதிலேயே, கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் ஸ்டாலின். யாரை விட்டாலும், இன்னும் ஸ்டாலினை விட்டபாடில்லை, மோடி அலை!கோல்கட்டா மேடையில், 'மைக் கிடைத்தால் எதிர்க்கட்சிகளை மோடி சாடுகிறார்' என்று புலம்பித் தள்ளினார்.

அப்போது கூட, 'எதிர்க்கட்சிகளை மோடி சாடுகிறார்' என்று தான் சொல்ல முடிந்ததே தவிர, 'எதிர்க்கட்சி தலைவர்களை மோடி சாடுகிறார்' என்று குறிப்பிடவில்லை.மோடி சொல்ல மாட்டார். 'உடைவாளை வைத்து, உருளைக்கிழங்கு வெட்டக் கூடாது' எனும் சாணக்கிய சூத்திரம் அவருக்குத் தெரியும். இந்த சாமர்த்தியத்தால் தான், தன் பெயரை தான் சொல்வதை விட, மற்றவர்களை அதிகமாய் சொல்ல வைக்கிறார்; குறிப்பாக, ஸ்டாலினை!இவ்வளவு ஏன்... 'பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு வலுவான தலைமை, ஆற்றல், திறன் உண்டு. ஆனால், மோடிக்கு எதிராக கூடியிருக்கும் கூட்டணிக்கு, எதுவும் இல்லை' என்கிறார், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.இவரது கருத்தை அப்படியே வழிமொழியும் விதமாக, 'வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சியினர் நாம், அடுத்த ஐந்து மாதங்கள் வரை, ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்கிறார் ஸ்டாலின். அப்படியென்றால், அதற்குப் பின்...?


மோடியின் நம்பிக்கை

மோடியின் திட்டமே இது தான்! பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படும் கட்சித் தலைவர்களை ஒன்றிணைந்து விட்டால், அவர்களின் குடுமிப்பிடி சண்டையில், நாற்காலி தானாய் தன் பக்கம் வந்துவிடும் என்று, ஆணித்தரமாய் நம்புகிறார். அவரது நம்பிக்கைக்கு, கர்நாடக அரசியல் களம் நாளும் பொழுதுமாய் வலுசேர்த்து வருகிறது.

இதோ... 'தேர்தல் சீர்திருத்தம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை வழங்க, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், அபிஷேக் மனு சிங்வி, ஆம் ஆத்மியின், அரவிந்த் கெஜ்ரிவால் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது' என்கிறார் மம்தா.அவர் அறிவிக்கும் போதே, 'ஆணவத்துடன் செயல்படும் காங்கிரசுடன், மக்களவைத் தேர்தலில் கூட்டு இல்லை' என்று அறிவிக்கிறது, ஆம் ஆத்மி.சூழல் இப்படியிருக்க, கர்நாடக காங்கிரஸ்காரரான மல்லிகார்ஜுன கார்கேவையும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரான குமாரசாமியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் மேடையில் வைத்து, 'மோடி தோற்பது நிச்சயம்' என்று ஸ்டாலின் சொல்லலாமா?


மூன்றாவது அணி

காங்கிரஸ் - பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்க, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். நாளையே இவரது பின்னால், ஒடிசா முதல்வரும் - பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக், அகிலேஷ், மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் அணி திரண்டால், அந்த மேடையிலும், ஸ்டாலினை பார்க்க வாய்ப்புண்டு.ஏனெனில், மோடிக்கு எதிராக தன்னால் மட்டுமே முன்னிறுத்தப்பட்ட ராகுல் பிம்பத்தையும் கரைத்து, 'மோடிக்கு சமமான போட்டியாளர் இல்லை' என்பதை, கோல்கட்டாவில், பிரமாண்டமாய் விதைத்து வந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஒரு வேளை இன்று கருணாநிதி இருந்திருந்தால், 'எதிர்வரும் மக்களவை தேர்தல் கூட்டணியில், பழைய நண்பர்களை இணைத்துக் கொள்ள தயார்' என்று மோடிக்கு முன்பே முந்தியிருப்பார். தன் பெயரை, மோடி உச்சரிக்குமாறு செய்திருப்பார். அப்படியே, காங்கிரசையும் அலற வைத்திருப்பார்.கோல்கட்டா கூட்டத்தை சென்னையில் கூட்டியிருப்பார். ஏனெனில்... அவர் கிங் மேக்கர்!
- வாஞ்சிநாதன்
vanjinath40@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangaraju - chennai,இந்தியா
14-பிப்-201916:30:52 IST Report Abuse
Thangaraju இந்த தினமலர் மோடியின் பிரச்சார பீரங்கி. என்னமோ மோடி உலகில் எவரும் பண்ணாத சாதனைகள் செய்துவிட்டதாக புளுகுவது. ஏனென்றால் பத்திரிக்கை நடத்தவேண்டுமே
Rate this:
Share this comment
Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
20-பிப்-201920:19:50 IST Report Abuse
Natarajan Arunachalamஇல்லை தங்கராஜ் நீங்கள் நினைப்பது தவறு திருட்டு தி மு க கொள்ளை யடித்தது தெரியாதா ??? மோடியின் சாதனை என்ன ? யோசியுங்கள் புரியும் படிக்காதவரா நீங்கள் மகத்தான ஆளுமை போதும்...
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
12-பிப்-201911:38:01 IST Report Abuse
Narasimhan . திமுக வந்தாலும் மேகதாது அணை கட்டத்தான் போகிறார்கள். அப்போதும் திமுக காங்கிரசுக்கு வாலை ஆட்டிக்கொண்டுதான் இருக்கும். ஆகையால் விஜயகாந்த் போன்ற மனித நேயம் உள்ள மனிதர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகம் முன்னேறும்
Rate this:
Share this comment
Cancel
Santhosh Kumar - male,மாலத்தீவு
07-பிப்-201908:49:30 IST Report Abuse
Santhosh Kumar ஸ்டாலின் எந்த அரைவேக்காடு அரசில்வாதி தமிழர்களை கொலை செய்த காங்கிரஸ்க்கு வெண்சாமரம் வீசுகிண்ட இவரைபோலுள்ள அரசியல்வாதியைத்தான் வீட்டுக்கு அனுப்பவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X