பொது செய்தி

இந்தியா

கடன் தள்ளுபடி : விவசாயிகளை ஏமாற்றிய ம.பி., அரசு

Updated : ஜன 24, 2019 | Added : ஜன 24, 2019 | கருத்துகள் (51)
Advertisement
ம.பி, விவசாய கடன் தள்ளுபடி, காங்., அரசு

போபால் : விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக கூறி ஓட்டு வாங்கி, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடித்த காங்., அரசு, விவசாயி ஒருவருக்கு ரூ.13 மட்டுமே தள்ளுபடி செய்தது. மேலும், பல குளறுபடிகளை செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,யில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது காங்., கூறி இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, விவசாயிகளின் ரூ.50,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறியது. லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வருவதற்கு முன், விவசாய கடன் தள்ளுபடி பணிகளை முடிக்க 3 நிறங்களில் விண்ணப்ப படிவங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயி ஒருவர் கூறுகையில், ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு உறுதி அளித்தது. இதற்காக விண்ணப்பம் செய்தேன். நான் வாங்கிய கடன் ரூ.23,815 முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், கடனில் ரூ.13 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர். கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாய கடனுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், பிப்ரவரி 5 ம் தேதி துவங்கி, பிப்ரவரி 22 ம் தேதிக்குள் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் எனவும், இதனால் சுமார் 55 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் ம.பி., அரசு கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
25-ஜன-201916:43:25 IST Report Abuse
Chowkidar NandaIndia மாப்பிளே, மாப்பு, பப்பு, வச்சிட்டாண்டா ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஜன-201917:49:11 IST Report Abuse
Srinivasan Kannaiya எங்கும் உண்மையான விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
24-ஜன-201917:05:00 IST Report Abuse
Sanjay முக்கண் மைந்தா:- To Err is human, Forgive and Forget? அப்படித்தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X