கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை

Updated : ஜன 24, 2019 | Added : ஜன 24, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: ரூ.16.75 கோடி வருமான வரி பாக்கிக்காக, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை கடந்த 2007 ம் ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது.நோட்டீஸ்ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை ஐகோர்ட், போயஸ் கார்டன்,  வருமான வரித்துறை

சென்னை: ரூ.16.75 கோடி வருமான வரி பாக்கிக்காக, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை கடந்த 2007 ம் ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது.


நோட்டீஸ்


ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.


ஆட்சேபனை இல்லை


இந்நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ரூ.16.74 கோடி வருமான வரி பாக்கிக்காக கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா சாலை, மேரிஸ் சாலை, ஐதராபாத்தில் உள்ள சொத்துகளும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. வரி பாக்கியை செலுத்தி விட்டால் ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை எனக்கூறப்பட்டு உள்ளது.


ஒத்திவைப்பு


இதனையடுத்து, நிலத்தை கையகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
25-ஜன-201910:50:25 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அதிமுகயும் எல்லா மந்திரிகளும் பல்கோடிலே சேர்த்துருக்காளே.
Rate this:
Cancel
24-ஜன-201921:11:34 IST Report Abuse
ஆப்பு 2007 லேருந்தே அம்மாவே வரி கட்டாம ஏமாத்தியிருக்காங்க. ஆட்சியில் இருந்ததா எல்லோரும் வாலைச் சுருட்டிக்கிட்டிருந்தாங்க.
Rate this:
Cancel
24-ஜன-201921:09:43 IST Report Abuse
ஆப்பு பொறுமையா இருங்க...வீட்டை 500 கோடியில் நினைவில்லமாக்குனதாக கணக்குக் காட்டி, உங்க பாக்கியை வட்டியும்.முதலுமா கட்டிருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X