லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டியா?

Added : ஜன 26, 2019 | கருத்துகள் (19)
Advertisement
லோக்சபா தேர்தலில்  அத்வானி போட்டியா?

புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில், மூத்த தலைவர்களான, அத்வானி, 91, முரளி மனோகர் ஜோஷி, 84, தேர்தலில் போட்டியிடுவது, அவர்களது விருப்பத்தை பொறுத்தது' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்த லில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெற்றி பெற்றாலும், மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறவில்லை.'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதை கடந்தவர்களுக்கு, முக்கிய பதவிகள் தரப்படாது' என, பா.ஜ., மேலிடம் முடிவெடுத்த தாக, அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், 75 வயதைக் கடந்தவர்கள், தேர்த லில் போட்டியிடலாம் என்றும், வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கிடையாது என்றும், கட்சி மேலிடம், அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்களான, சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர்.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, அத்வானி மற்றும் ஜோஷியின் விருப்பம்' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அத்வானி மற்றும் ஜோஷி, தேர்தலில் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
26-ஜன-201918:39:00 IST Report Abuse
Pasupathi Subbian ஆதாரமில்லாத பதிவு, உடனே வரிந்துகட்டிக்கொண்டு தங்களின் கற்பனையை அவிழ்த்துவிட்டு , எதோ காணாததை கண்டதுபோல கருத்துப்பதிவு. வந்தாலும் வராவிட்டாலும், மோடியின் நடப்பு கொள்கைகள் தொறந்துகொண்டே இருக்கும். அதில் மாறுதல் செய்யவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
26-ஜன-201910:30:41 IST Report Abuse
சுந்தரம் சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர். ஆனால் அருண் ஜெயிட்லி மற்றும் மனோகர் பாரிக்கர் இன்னமும் அறிவிக்கவில்லையே. பாஜகவில் மிகவும் ஏ........ழ்மை நிலையில் உள்ள நிதின் கட்காரியும் இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அத்வானிக்கு என்ன அவசரம் அறிவிக்க ?
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
26-ஜன-201909:33:25 IST Report Abuse
tamil கௌரமாக ஒதுங்கிக்கொள்வது தான் இருவருக்கும் நல்லது, இந்த வயசுக்கு மேல் இனிமேல் இவர்கள் என்ன சாதித்துவிட போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X