பொது செய்தி

இந்தியா

கடனில் சிக்கி தவிக்கும் 'ஏர் இந்தியா'வுக்கு ரூ. 1,500 கோடி ரூபாய்

Added : ஜன 27, 2019 | கருத்துகள் (13)
Advertisement
கடனில் சிக்கி தவிக்கும்  'ஏர் இந்தியா'வுக்கு ரூ.  1,500 கோடி ரூபாய்

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'ஏர் இந்தியா' நிறுவனத்தை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா, 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கை வைத்துள்ளது. இதை விற்று, நிறுவனத்தை தனியார் மயமாக்க, மத்திய அரசு முயற்சித்தது.ஆனால், சில நிபந்தனைகளால், ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.இதையடுத்து, விற்பனை திட்டத்தை கைவிட்டு, ஏர் இந்தியாவிற்கு புத்துயிரூட்ட, மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி, 29 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, 'ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்' நிறுவனத்திற்கு மாற்றி, துணை நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துகளை விற்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இது தவிர, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, நடப்பு நிதியாண்டில், 2,345 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான, துணை மானிய கோரிக்கைக்கு, பார்லிமென்ட் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதையடுத்து, முதற்கட்டமாக, அடுத்த சில தினங்களில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ravi - kalpakkam,இந்தியா
27-ஜன-201913:50:49 IST Report Abuse
K.Ravi நிர்வாகத்தை மட்டும் தனியாரிடம் கொடுங்கள்...அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் நிர்வாகம் செய்ய அனுமதியுங்கள்...எல்லாம் சரியாகும்..
Rate this:
Share this comment
Cancel
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
27-ஜன-201910:54:18 IST Report Abuse
Guna Gkrv தேவை இல்லாத ஆட்களை வேலை நீக்கம் செய்து நல்ல இளமையான ஆட்களை போட்டு நடை முறை படுத்துங்கள் அநேகமா தேவை இல்லாமல் ரொம்ப பேர் அங்கு பணியில் உள்ளனர் பிறகு அரசியல் வாதிகளிடம் பணம் பெற்று பயண சீட்டு வழங்க வேண்டும் அவங்களால் தான் நஷ்டம் ஏற்படுகிறது நிர்வாக சீர் கேடு அதிகம் உள்ளது உலகிலேயே அதிக வழித்தடங்கள் உள்ள ஒரே நிறுவனம் ஏர் இந்தியா முறையாக நிர்வாகம் செய்தால் லாபத்தில் நடக்கும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜன-201913:51:25 IST Report Abuse
Nallavan Nallavanஊழல் மற்றும் நிர்வாகத்திறனின்மை இந்த இரண்டும்தான் அரசு (அது மத்திய அரசாகவோ, மாநில அரசாகவோ இருக்கலாம்) நடத்தும் எந்த நிறுவனமும் நஷ்டமடையக் காரணம் ..... சிபாரிசில் தனது கட்சி ஆட்களை அமர்த்துவது என்கிற காரணமெல்லாம் இவை இரண்டுக்கும் அடுத்ததுதான் ........
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜன-201910:27:42 IST Report Abuse
A.George Alphonse The central government is giving artificial life support (Ventilator life support) to this Air India by it's meagre financial support like "Yanaiikku Sola Pori " food which is not enough to live further and die one day suddenly without any further treatment.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X