அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எதிர்மறை சக்திகள்; விழிப்போடு இருக்க பிரதமர் வேண்டுகோள்

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (110)
Advertisement

மதுரை: எதிர்மறை சக்திகளை புறந்தள்ள வேண்டும் என, தமிழக மக்கள், இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என பிரதமர் மோடி மதுரையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.


மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:


கிராம சுகாதாரம் அதிகரிப்பு

தமிழ் சங்கம் அமைந்துள்ள மதுரையின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 3 லோக்சபா தொகுதிகளுக்கு ஒன்று என மருத்துவ கல்லூரி துவக்குவது எங்களது நோக்கம். இதன் மூலம் மருத்துவ கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கும். தூய்மை இந்தியா திட்டம், மக்களின் திட்டமாக மாறியுள்ளது. 2014 ல் கிராமங்களில் சுகாதாரம் 34 சதவீதமாக இருந்தது. தற்போது, 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. இதில், 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.


மதுரை - சென்னை ரயில்

ரூ.21 ஆயிரம் கோடி செலவில் தனுஷ்கோடியை, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனுடன் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிவே ரயில் இயக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மதுரை - சென்னை இடையே தேஜஸ் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 10 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மதுரையில் நடந்த பா .ஜ .. பொது கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

மதுரையில் நடந்த பா .ஜ .. பொது கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படும்

நாட்டில் முன்னேறிய தொழில் மாநிலமாக தமிழகம் உள்ளது. மேக் இன் இந்தியாவில், மத்திய அரசின் முயற்சியில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்கள் உற்பத்தி செய்ய, முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் அமைய வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை மத்திய அரசு எடுத்துள்ளது. தென் இந்தியாவில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி மாற்றப்படும். கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி மேம்படுத்தப்படும். அதிவேக டி- 18 ரயில்கள் இயக்கப்பட்ட பெருமை தமிழகத்தை சேரும். இந்த ரயிலை, வெளிநாடுகள் ஆர்வத்துடன் பார்க்கின்றன. ரயில் உற்பத்தி செய்யப்படும் போது, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.


மதுரையில் நடந்த பா .ஜ .. பொது கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதி.

மதுரையில் நடந்த பா .ஜ .. பொது கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதி.

கவனமாக இருக்க வேண்டும்


சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் சமவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அரசியல் ரீதியாக, தமிழகத்தில் சில சுயநலசக்திகள் தங்களின் சுயநலம் காரணமாக, மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்மறை சக்திகளிடம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கான திட்டத்தை எதிர்ப்பது நன்மை பயக்காது. என்ன சந்தித்து தேவேந்திர சமுதாய மக்கள் தெரிவித்த பிரச்னைகளை எஸ்சி/எஸ்டி கமிஷனிடமும், மாநில அரசிடமும் தெரிவித்துள்ளேன். விரைவில் மாநில அரசு தீர்வு காணும்.


புறந்தள்ள வேண்டும்

நாட்டை கொள்ளையடித்தவர்கள், திருடியவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள், வெளிநாட்டில் இருந்தாலும் சரி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஊழலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, சென்னையில் இருந்து டில்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இவர்கள் ஒன்று சேர்ந்து, நாட்டின் சேவகனை நீக்கி விடுவோம் என கூறுகின்றனர். அவர்கள் எவ்வளவு பெரிய எதிர்மறை பிரசாரம் மற்றும் அச்சம் காரணமாக என்ன செய்தாலும், நான் ஏழை மக்கள் பின்னால் நிற்பேன். எதிர்மறை சக்திகளை புறந்தள்ள வேண்டும் என, தமிழக மக்கள், இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசைபொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர் பா.ஜ.,தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: தமிழகத்தில் காவி ரத்தம் பாய்கிறது. மனிதத்தை வைத்தே பார்க்கும் இந்த தலைவனை விமர்சிக்கிறார்கள். பட்டியலிட்டு சாதனை செய்யும் தலைவனை விமர்சிப்பதா ? எங்களின் பலத்தை காட்ட மதுரையில் கூடியிருக்கிறோம். தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை தந்து வருகிறது. வரும் காலத்தில் மோடி தலைமையில் ஆட்சியை அமர்த்த எந்தவொரு தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். உதயசூரியனால் தாமரை மலர்வதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
29-ஜன-201904:14:41 IST Report Abuse
Vetri Vel ஒரு கல்லை நாட்டுப்புட்டு இதனை வாய் கிழிய பேசுறியே நைனா... எத்தனை ரூவா மத்திய அரசு தமிழகத்துக்கு.. இந்த தமிழ் மண்ணுக்கு கொடுத்தது.. சொல்லு... இயற்கை பேரழிவுக்கு கூட கன்னி மூடிக்கிட்டு.. இப்போ ஏன் இந்த திருவிளையாடல்கள்... மோசடி நாடகங்கள்... ஒரு சாமானியனாய் கேக்க தோணுது..
Rate this:
Share this comment
Cancel
Baskar - Chennai,இந்தியா
28-ஜன-201907:41:36 IST Report Abuse
Baskar இங்க பாருங்க . மோடி ஆட்சி விட்டு போனா நமக்கு தான் நஷ்டம் . அவரு ஜாலியா காட்டுக்கு போய்டுவாரு . நல்லவங்க ரொம்ப சத்தம் போடமாட்டாங்க . அடுத்த வேலைய பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. நாம தான் அவரை PM ஆக்க வேண்டும். நல்லபடியா வோட்டை போட்டுவிட்டு வேலையை பாருங்க.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201921:48:09 IST Report Abuse
முக்கண் மைந்தன் தமிழ்நாட்டு சனங்க எப்பவுமே விழிப்போடவேதான் இருக்காங்க...👍👍👍 அதுனாலதான் TN ல இவுனுங்க/BJP இருக்கற எடெம் தெரில...👏👏👏
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
28-ஜன-201904:25:00 IST Report Abuse
sankarகாசு வாங்கிட்டா ஏமாதாம ஒட்டு போடும் விழிப்புணர்வாளர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X