பொது செய்தி

இந்தியா

அதிவேக ரயிலுக்கு பெயர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
அதிவேக ரயில், ரயில் 18 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

புதுடில்லி: சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரயில், டில்லி - வாரணாசி இடையே, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில், விரைவில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, ஒருங்கிணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், 100 கோடி ரூபாய் செலவில், 'ரயில் 18' என்ற, அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்த பெட்டிகள், கடந்த அக்., 28ல், வடக்கு மண்டல ரயில்வேக்காக, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்பட்டன. இந்த ரயில் பெட்டிகள் இன்ஜினுடன் இணைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டன. இந்த ரயிலை, டில்லி - வாரணாசி இடையே இயக்க திட்டமிட்டுள்ளது. கான்ப்பூர், பிரயாக்ராஜ் நகரில் நின்று செல்லும். இந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:
'ரயில் 18 ' க்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரயில், முற்றிலும், இந்தியாவிலேயே, இந்திய பொறியாளர்களால், 18 மாதங்களால் தயாரிக்கப்பட்டது. டில்லியில் இருந்து வாரணாசி இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே, உலக தரத்தில் ரயில் தயாரிக்க முடியும் என்பதற்கு இந்த ரயில் உதாரணம். இந்த ரயிலுக்கு, பல பெயர்களை பொது மக்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்ட முடிவு செய்தோம். இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டு கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஜன-201908:12:59 IST Report Abuse
Srinivasan Kannaiya வந்தே பாரத் ...இதன் தமிழாக்கத்தை அருகில் எழுதினால் நாங்களும் சந்தோஷப்படுவோம் இல்லை...
Rate this:
Cancel
Suresh Palanisamy - Coimbatore ,இந்தியா
27-ஜன-201921:16:46 IST Report Abuse
Suresh Palanisamy மிகச்சிறப்பு
Rate this:
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
27-ஜன-201920:25:45 IST Report Abuse
TamilReader The name is good Choice But the train service cities are not at all accep Since it is manufactured in Chennai, why he didn't provide this service from Chennai to any other City? Why only to Varanasi? Don't you guys see his personal interest? I can understand if the services are started to Metropolitan cities Mumbai, Ahmedahad, Hyderabad, Bangaluru, Chennai instead of Varanasi.
Rate this:
Murali Vk - TIRUVALLUR,இந்தியா
27-ஜன-201922:00:50 IST Report Abuse
Murali Vkசென்னை டு மதுரை நெஸ்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X