அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'2 கட்சிகள், 3 குடும்பத்திற்கு
சொந்தம் இல்லை திராவிடம்'

கடலுார்:''திராவிடம் என்பது, இரண்டு கட்சிகள், மூன்று குடும்பங்களுக்கு சொந்தமானது கிடையாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் கூறினார்.

2 கட்சிகள், 3 குடும்பத்திற்கு,சொந்தம்,இல்லை,திராவிடம்


கடலுார், சி.கே., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 40 ஆண்டுகளாக, அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து

கட்சிகளையும் ரவுடி என, கூறவில்லை. துாய்மை யான அரசியல் கொண்டு வர, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

திராவிடம் என்பது, இரண்டு கட்சிகள், மூன்று குடும் பங்களுக்கு சொந்தமானது கிடையாது.நாடு தழுவிய அளவில் திராவிடம் உள்ளது.கடலுார் மாவட்டத் தில்,2 நாட்களாக சுற்றுப் பயணம் மேற் கொண்ட போது, மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது.


விவசாயம்புறக்கணிக்கப்படுகிறது.மதுரைக்கு பிரதமர் வந்துள்ள நிலையில், 'மோடி கோ பேக்' என்ற வாசகம்,சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. இது, அரசியலுக்காக நடக்கிறது. அரசியல் தீண்டத்தகாதது இல்லை.

Advertisement

அரசியலில், இழந்த மாண்பை மீட்க வேண்டும். அனைவரும் சேர்ந்து தான் மதுவிலக்கை கொண்டு வர முடியும்.

அரசியல் காரணங்களுக்காக, ஏழைகள் ஏழையாகவே உள்ளனர். லோக்சபா தேர்தலில், கூட்டணி வைப்பதா அல்லது தனித்து போட்டி யிடுவதா என, நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
31-ஜன-201910:33:45 IST Report Abuse

Nisha Rathiஇவர் தான் முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் நினைத்து, மக்கள் முதல்வராகியது எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி ராமாராவ் அவர்களை மட்டுமே . அவர்களும் இருந்தவரை மக்களுக்காக வாழ்ந்து இறந்த பின்னும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட இந்த இரு முதல்வர்களும் ஆட்சி பீடம் ஏறியவுடன், அல்லக்கைகள், குடும்ப அரசியல், ஜாதி அரசியல், அமைச்சர்கள், மத்திய அரசு, அண்டை மாநில அரசு, அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், உளவு துறை அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து வந்த நெருக்கடிகளை சமாளித்து முதல்வராக வெற்றியும் கண்டனர். இன்றோ ..." சமுதாயத்தில் அயோக்கியன் " என்று பெயரெடுத்த பலர் முதல்வர் நாற்காலி மீது மறைமுக ஆசை கொண்டு "யோக்கிய தமிழன், நேர்மையான தமிழன், மதசார்பற்ற தமிழன், ஜாதி இல்லா தமிழன், நாத்திக தமிழன் என்று வெளியில் கூறிக்கொண்டு விளம்பரத்திற்காக உதவிகள் செய்து மேடை ஏறி நயவஞ்சக நாடகமாடுகின்றனர். இவர்கள் கையில் முதல்வர் நாற்காலி கிடைத்தால் தமிழகம் உருக்குலைந்து போவது நிச்சயமே ....மக்கள் ஆரம்பத்திலிருந்தே இவர்களை கிள்ளி எறிவது சாமர்த்திய செயலே

Rate this:
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-201911:51:15 IST Report Abuse

Bala Sreenivasan தமிழர்களுக்கு ஞாபக மறதி ரொம்பவே அதிகம். அதுனாலதான் இங்க மாத்தி மாத்தி சினிமாகாரங்க, திராவிடம் பேசற திருட்டு கட்சிங்க எல்லாம் நல்ல நம்ம முதுகுல மொளகா அரைச்சு கோடிக்கணக்குல சொத்து சேத்துட்டாய்ங்க. இப்போ உளறிட்டு திரியறாரே இந்த நடிகரை எடுத்துக்குங்களேன்..ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி வீட்டுல இருந்த ஒரு நல்ல கருப்பு சட்டையை தேடிப்பிடிச்சு உதறி போட்டுக்கிட்டு நேரா வேப்பேரில ஈ.வே.ரா திடலுக்கு போய், கரகரத்த அவரோட அடித்தொண்டை ஸ்பெஷல் குரல்ல, "என் வழி அய்யா வழிதான் நான் எப்பவுமே கருஞ்சட்டைக்காரன்தான்" அப்டீன்னு பேசினது நம்மள மாதிரி ஒரு சிலருக்கு ஞாபகம் இருக்கும்னு அவர் எதிர்பார்க்க மாட்டாரு, பாவம். இங்க இன்னொரு வாசகர் சொல்லி இருக்கறமாதிரி நல்ல நடிகர் என்கிறதோட நிக்காம அறிவுஜீவி, சகலகலா வல்லவர் அது இதுன்னு இவரை தூக்கி வெச்சு கொண்டாடினதுதான் பெரிய தப்பாயிரிச்சி

Rate this:
sri - mumbai,இந்தியா
28-ஜன-201920:54:48 IST Report Abuse

sriதமிழகத்தில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பெரியாரிசம், அண்ணாயிசம் என்று புது புது பொருள் தெரியாத வார்த்தைகளை வைத்து ஒரு கும்பல் மக்களை பயித்தியமாக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது , இந்த உளறுவாய் மன்னர் , திராவிடம் என்ற புதிய எண்ண ஓட்டத்தை ஆரம்பிக்கிறார். இதற்க்கு பொருள் சொல்லாமல் , சொந்தம் மட்டும் கொண்டாட ஆரம்பித்து விட்டார் அரசியலில் யாராவது வந்தேறி , ஆரியர் என்று அழைக்கப் போகிறார்களே என்று பயந்து , தான் நன்றாக மாமிசம் சாப்பிடுவதையும், திருமணம் போன்ற சடங்குளில் நம்பிக்கை கொள்ளாமல் கூடி வாழ்வது கோடி நன்மை என்று நடைமுறை படுத்தியும் , தொழில் கூடங்களை மூட போராட்டம் நடந்தால் அதை ஊக்குவித்து பேசியும் , தன்னை மண்ணின் மைந்தனாக காட்டிக்கொள்ள விழைகிறார் அந்த முயற்ச்சியில் இந்த 'திராவிடமும்' அடங்கும் ஆனால் இவர் அடங்கமாட்டார் '

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X