உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு திட்டம்

Updated : ஜன 28, 2019 | Added : ஜன 28, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
விஜயவாடா: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.'ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த
உண்ணாவிரதம்,சந்திரபாபு நாயுடு,திட்டம்

விஜயவாடா: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

'ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற தவறியதால், ஆளும், தே.ஜ., கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு, கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்திய அரசை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.


கடைசி நாளில்..

இது குறித்து, தெலுங்கு தேசம் கட்சியின் லோக்சபா, எம்.பி., அவந்தி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சி, எம்.பி.,க்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு, ஆந்திர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி உள்ளது என்பதை, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசும்படி, சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததை கண்டித்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான பிப்., 13ல், டில்லியில், அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN - murasori,இந்தியா
28-ஜன-201909:38:00 IST Report Abuse
RAJAN நாயுடு, சாகும் வரை உண்ணா விரதம்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜன-201909:35:14 IST Report Abuse
Indhuindian எப்பிடி. உங்க கூட்டாளியோட அப்பா உண்ணாவிரதம் இருந்தாரே அந்த மாதிரியா. காலையிலேயே ஒரு ஆறு ஏழு மணிக்கு இட்லி, தோசை, மெதுவடை, மசால் வடை, பூரி, பொங்கல்ன்னு ஒரு கட்டு கட்டிட்டு போயி படுத்துகோங்க தலைமாட்டில் ஒன்னு கால்மாட்டில் ஒண்ணுனு உட்கார வையுங்க. ஒரு பன்னிரண்டு மணிக்கா ஒரு அரை மணி நேரம் பேத்திட்டு நேரா வீட்டுக்கு போனால் அங்கே கோழி, காடை கவுதாரி இத்யாதி இத்யாதி ரெடியா இருக்கும். அதை ஒரு கட்டு கட்டிட்டு வெத்தலை பாக் போட்டு கிட்டு அங்கே வேகாத வெயிலே இருக்கற தொண்டர்களை பார்த்து உண்ணா விரதம் மிக பெரிய வெற்றின்னு ஒரு அறிக்கை விட்டுடுங்க. ஆனா மறந்து பொய்கூட உங்க வூர்லே பொட்டி ஸ்ரீராமுலு ஒன்னு ஒருத்தர் இருந்தாரே அவரைமட்டும் யாரையும் நினைவுபடுத்த சொல்லாதீங்க அது ரொம்ப டேஞ்சர்
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஜன-201908:22:21 IST Report Abuse
Srinivasan Kannaiya பிப்., 13ல், டில்லியில், அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார்..... மக்களின் சகஜ வாழ்க்கையை கெடுக்காத எதையும் செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X