பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் போராட்டம்: மாணவர்கள் தவிப்பு

Updated : ஜன 28, 2019 | Added : ஜன 28, 2019 | கருத்துகள் (46)
Advertisement

சென்னை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.






9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள 47 அரசு பள்ளிகளில் 30 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


ஆசிரியர்களுக்கு ஆதரவாக உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கனித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்

ஆசிரியர்களுக்கு ஆதரவாக உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கனித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்




தஞ்சை, நெல்லை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை அம்பாசமுத்திரம் - வைராவிகுளம் பகுதியில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் திருப்பூர் அருகே கே.செட்டிபாளையம்  ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் திருப்பூர் அருகே கே.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



திருவண்ணாமலையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு பெருமாள் மலை பகுதியில் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 60 சதவீதம் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை.


ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக திருப்பூர் தேவாங்கபுரம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால், பள்ளி வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்த்து.

ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக திருப்பூர் தேவாங்கபுரம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால், பள்ளி வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்த்து.



Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
28-ஜன-201918:03:59 IST Report Abuse
SENTHIL NATHAN ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களே மக்கள் இவ்வளவு காரி துப்புகிறார்கள்.. உங்களுக்கு கொஞ்சமாவது குறிக்கிறதா ??
Rate this:
Share this comment
Cancel
D -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-201916:59:09 IST Report Abuse
D மனசாட்சியை ஓரங்கட்டிட்டு ஒரு ஸ்டிரைக்!😥  தன் புள்ளைங்கள சுயநலமா   தனியார் பள்ளில சேத்துட்டு, ஏழைப் பிள்ளை வேறவழியில்லாம படிக்கும் அரசு பள்ளியை மூடவெச்சுட்டீங்களே .அந்தப்பிள்ளைகள் எதிர்காலத்தை நாசமாகிட்டு😩 உங்க பிள்ளைகள்மட்டும் நல்லாயிருக்குமா?  ஆண்டவன் 👺 பாத்துக்கிட்டுதான் 😡😡இருக்கான்.இனிமே எவன் வாத்தியாருங்கள மதிப்பான்னு தெரியலை.
Rate this:
Share this comment
Cancel
D -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-201916:59:07 IST Report Abuse
D மனசாட்சியை ஓரங்கட்டிட்டு ஒரு ஸ்டிரைக்!😥  தன் புள்ளைங்கள சுயநலமா   தனியார் பள்ளில சேத்துட்டு, ஏழைப் பிள்ளை வேறவழியில்லாம படிக்கும் அரசு பள்ளியை மூடவெச்சுட்டீங்களே .அந்தப்பிள்ளைகள் எதிர்காலத்தை நாசமாகிட்டு😩 உங்க பிள்ளைகள்மட்டும் நல்லாயிருக்குமா?  ஆண்டவன் 👺 பாத்துக்கிட்டுதான் 😡😡இருக்கான்.இனிமே எவன் வாத்தியாருங்கள மதிப்பான்னு தெரியலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X