பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 28, 2019 | கருத்துகள் (1)
Advertisement
  இதே நாளில் அன்று

ஜனவரி 29, 1995

சி.எஸ்.ஜெயராமன்: கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 1917 ஜன.,6ல் பிறந்தார். இவர், தி.மு.க.,வின் முன்னாள் தலைவர், கருணாநிதியின் முதல் மனைவி, பத்மாவதியின் அண்ணன். திரைக்கதை எழுத்தாளராக, சினிமாவில்,கருணாநிதி அறிமுகமாவதற்கு, காரணமாக இருந்தவர்.திரைப்படத் துறையில், பின்னணி பாடகராக புகழ் பெற்றார். இசையின் திறமை காரணமாக, 'தமிழிசை சித்தர்' என, அழைக்கப்பட்டார். தமிழில் மட்டுமின்றி, சில கன்னட பாடல்களையும் பாடியுள்ளார்.கிருஷ்ண லீலா, நல்ல தங்காள் உள்ளிட்ட, சில படங்களில் நடித்துள்ளார். உதயனன், வாசவதத்தா,ரத்தக்கண்ணீர் போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார். விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம் உள்ளிட்ட, சில படங்களில், இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பராசக்தி படத்தில்,சி.எஸ்.ஜெயராமன் பாடிய, 'கா கா கா ஆகாரம்...' என்ற பாடல் பிரபலமானது. 1995 ஜன.,29ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-201901:40:56 IST Report Abuse
Bhaskaran இறுதிநாட்களில் மிகவும் சிரமப்பட்டார் அவரது சீடர் தீக்ஷிதர் என்பவர் இவரை பராமரித்துவந்ததாக செய்திகள் உண்டு உண்மையா என்று தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X