பதிவு செய்த நாள் :
போவோமா?
மேகதாது செல்ல ஊடகங்களுக்கு அழைப்பு
சத்தமில்லாமல் காய் நகர்த்தும் கர்நாடகா

மேகதாது அணை கட்டும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, கர்நாடக அரசு, டில்லியிலிருந்து, சத்தமில்லாமல், சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது. ஊடகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மேகதாது அழைத்துச் சென்று, தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழகம் தரப்பிலோ, டில்லியில் இது குறித்து, 'லாபி' செய்வதற்கு, ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேகதாது,காய் நகர்த்தும்,கர்நாடகா


காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் சரி, அதை சரிபார்த்து விசாரித்து, உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பிலும் சரி, 'எந்தவொரு மாநிலமும், காவிரியின் குறுக்கே தன்னிச்சையாக கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், மேகதாது என்ற இடத்தில், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை, நீண்ட காலமாகவே, கர்நாடக அரசு, தன் பரிசீலனையில் வைத்து இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், கர்நாடக அரசு, அந்த முயற்சியை கைவிடவில்லை.

இந்நிலையில், டில்லியில், சாமர்த்தியமாக காய் நகர்த்திய கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டுவதற்குரிய, சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அறிக்கையை தயார் செய்வதற்கான அனுமதியை பெற்றது. மத்திய நீர்வள ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த அனுமதி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதுமே, தமிழக, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு, இந்த அனுமதியை ரத்து செய்யும்படி போராடினர்.

அனுமதி தரவில்லை


இருப்பினும், 'சுற்றுச்சூழல் அனுமதியைத் தான் தந்தோம்; அணையை கட்டுவதற்கெல்லாம் அனுமதி தரவில்லை' என, மத்திய அரசு சமாளித்தது.பார்லிமென்ட் நடக்கும் போது மட்டுமே, தமிழகத்தின் தரப்பில், 'மேகதாது' என்ற குரல் கேட்டு,அதற்கு பின் அமுங்கிப் போய்விட்ட நிலையில், தற்போது சத்தமில்லாமல், கர்நாடக அரசு, தன் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

அணை கட்டப்போவதாக கூறப்படும் பகுதிகளுக்கு, பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய ஊடகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இதற்காக டில்லியிலிருந்து அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.அடுத்த மாதம், 18 - 21 வரை, இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் முழுக்க முழுக்க, கர்நாடக மாநில நீர்ப்பாசன துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேகதாது விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களின் பெயர் மற்றும் விபரங்களை, வரும், 2ம் தேதிக்குள், பெங்களூருக்கு அனுப்பி வைக்கும்படியும், அம்மாநில அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.இதற்காக, டில்லி கர்நாடக பவன் அதிகாரிகள், தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.முக்கிய பத்திரிகையாளர்களுடன், இது தொடர்பாக பேசி வருகின்றனர்.

திட்டத்தின் நோக்கம்


மேகதாது பகுதியை நேரில் சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிட்டு, தேசிய ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிட்டு, ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே, இந்த திட்டத்தின் நோக்கம்.மேகாது விஷயத்தில், தமிழகத்துக்கு என, டில்லியில், 'லாபி' செய்ய, ஒரு எறும்புகூட இல்லை. இதை சரியாக கணித்து, தேசிய அளவில் மேகதாது விஷயத்தை எடுத்துச் சென்று, தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கு, மிகவும் கச்சிதமாக, கர்நாடக அரசு காய் நகர்த்தி வருகிறது.

Advertisement

டில்லி தமிழ்நாடு இல்லத்திலும், உயரதிகாரிகளும், நூற்றுக்கணக்கான அலுவலர்களும் உள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டாலும், இத்தகவல்களை உரிய முறையில், முன்கூட்டியே தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.கர்நாடகாவின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு, முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதே, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

'மக்களுக்கு தெரிவிக்கலாமே'


மேகதாது விவகாரம் குறித்து, தமிழக பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்க தலைவர், வீரப்பன் கூறியதாவது:மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதே நேரத்தில், இந்த பிரச்னையை, பத்திரிகைகள் வாயிலாக, வேறு வகையில் அணுகும் நடவடிக்கையை, கர்நாடக அரசு துவக்கியுள்ளது.

அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் தெரிந்தால் போதாது; தமிழக, கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மை நிலைமை தெரிய வேண்டும்.எனவே, மேகதாது அணை கட்டினால், என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை, தமிழக முதல்வர், பொதுப்பணித் துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஆகியோர், பத்திரிகைகள் வாயிலாக ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
31-ஜன-201914:25:27 IST Report Abuse

K.n. Dhasarathanசும்மா பொழுது போகாமல் தான் சுற்று சூழல் அனுமதி கேட்டு அறிக்கை அனுப்பினார்கள், அது ஓ.கே. ஆச்சு. அதேபோல்தான் அங்கு சுற்றுலா துறைக்கு வேலை இல்லை, இலவசமாக ஒரு பிகினிக் ஏற்பாடு செய்தால் போய்தான் பார்ப்பீர்களா? சும்மா எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கிட்டு? என்ன சரிதானே மோடிஜி? தமிழன் என்றால் காதில் பூ சுற்ற வேண்டாம், பூ தோட்டமே போடலாம். கரெக்ட்தானே?

Rate this:
n.palaniyappan - karaikal ,இந்தியா
29-ஜன-201919:11:02 IST Report Abuse

n.palaniyappanN.Palaniyappan Karaikal. Cauvery tribunal authority leader dont allow next step to cauvery megadathu issue. Dont provide three state non objection certificate. Cauvery river not own property to Karnataka. It is four state property. Karnataka take single decision this issue. Not accepted other state.

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
29-ஜன-201917:16:26 IST Report Abuse

Jaya Ramகருத்துக்கள் என்னவேண்டுமென்றாலும் போடலாம் ஆனால் உண்மை என்னவென்றால் இங்கு பணத்திற்காக எதையும் செய்யும் கட்சிகள் இருக்கும் வரை திமுக,வீசி ,திக, மதிமுக மற்றும் இன்னும் சில அமைப்புகள் தமிழர்களால் நிம்மதியாக வாழவே முடியாது ஏனென்றால் இவர்கள் பாம்புக்கு தலையினையும் மீனுக்கு வாலையும் காட்டும் கும்பல் தமிழ் என்று சொல்லி சொல்லியே தமிழர்களை ஏமாற்றும் வித்தையினை தெளிவாக கற்றவர்கள் இவர்கள் இவர்களை நம்பி சில கூட்டங்கள் உள்ளன அவைகளுக்கு தேவை குவாட்டர் , மற்றும் பிரியாணி கிடைத்தால் போதும் வடநாட்டர்களின் திட்டமிட்ட சதியாழும் இங்குள்ள குறிப்பிட்ட ஒரு ஜாதியினை ஒதுக்கியதாலும் ஏற்பட்ட விளைவே இன்று தமிழ்நாடு இந்தியாவில் இருந்து தனிமை படுத்தப்படுகிறது. வடநாட்டானுக்கு தேவை இங்குள்ள கனிமவளங்களும், நிதிகளும் மட்டுமே ஆனால் இங்குள்ள தமிழனோ குவாட்டர் , மற்றும் பிரியாணி , திரைப்படம் , செல்போன் , போன்றவற்றில் தன்னை இழந்து, தன்னுடைய பூமி , வேலை உரிமை அனைத்தும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமே அடிமையாகிறான் உதாரணம் சேலம் நகரம் விரைவில் ஒரு வடஇந்திய நகரமாக மாறப்போகிறது

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X