அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆட்சிக்கு வந்தால் அடக்குமுறை
நடவடிக்கைகள் ரத்து: ஸ்டாலின்

சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீதான, அடக்குமுறை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அடக்குமுறை,நடவடிக்கைகள்,ஆட்சிக்கு வந்தால்,ரத்து,ஸ்டாலின்


அவரது அறிக்கை: அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், முறையான முன்னறிவிப்பு கொடுத்து, பல மாதங்களாக போராடி வருகின்றனர். அதுபற்றி கவலைப்படாமல், அவர்களின் கோரிக்கைகள் குறித்து, அரசு அக்கறை செலுத்தி, தீர்வு காண முயற்சிக்கவில்லை.

வெறும் அடக்குமுறைகளை மட்டும் கட்டவிழ்த்து விட்டு, பிரச்னைக்கு தீர்வு கண்டு விடலாம் என, முதல்வர் நினைப்பது, மனிதநேயமற்ற மனப்பான்மை.

பரஸ்பர பேச்சு வழியான தீர்வு தான், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதை புரிந்து கொள்ளாமல், போலீஸ் துறையை கட்ட விழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களை, உடனே அழைத்துப் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, அனைத்து நடவடிக்கைகளையும், முதல்வர் எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நியாயமான கோரிக்கைகள் அத்தனையும், முறையான பேச்சு வாயிலாக நிறைவேற்றப்படும்.தற்போது, எடுத்து வரும் சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகள், நிச்சயம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கமிஷன் ஆட்சி


வேலுார் மாவட்டம், சேவூரில், நேற்று நடந்த, கிராம சபைக் கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், எம்.எல்.ஏ., இல்லாமல், குடியாத்தம் தொகுதி அனாதையாகி விட்டது. விரைவில், லோக்சபா தேர்தலுடன், காலியாக உள்ள, 21 சட்டசபை

Advertisement

தொகுதிகளுக்கும் தேர்தல் வரவுள்ளது. ஒட்டுமொத்த சட்டசபைக்கும் சேர்த்து, தேர்தல் வருமா என்ற நிலை தற்போது உள்ளது.

தமிழகத்தில், 'கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்' ஆட்சி நடக்கிறது. உலக வங்கிகளில், இந்தியர்கள் வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவருக்கும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்வதாக, பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், 15 ரூபாய் கூட, டிபாசிட் செய்யவில்லை. 113 எம்.எல்.ஏ.,க்களுடன், மைனாரிட்டி ஆட்சியை, அ.தி.மு.க., நடத்தி வருகிறது. ஜெ., பெயரை பயன்படுத்தி, அவர் படத்தை பாக்கெட்டில் வைத்து, கொள்ளை அடிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
29-ஜன-201921:41:09 IST Report Abuse

ராஜேஷ்அடங்குங்கள் இல்லை எடப்பாடி உடம்பில் அம்மா போட்ட உப்பு இன்னும் சொரணையோடதான் இருக்கு . அப்புறம் அயோ கொயோனு கத்தாம

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
29-ஜன-201920:46:16 IST Report Abuse

Krish Samiஅரசு பணிகளில் இல்லாத பொதுமக்கள் இந்த செய்தியை கவனிக்காமல் விட்டு விடுவார்களா என்ன? இந்த அறிக்கை மற்றவர்களுக்கு பட்டை நாமம் என சொல்வது அவர்களுக்கு புரியாதா என்ன? தேர்தலில் கவனித்துக்கொள்வார்கள்.

Rate this:
Sanjay - Chennai,இந்தியா
29-ஜன-201920:26:21 IST Report Abuse

Sanjayபூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X