பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ஜாக்டோ - ஜியோ,பணிக்கு திரும்பிய,ஆசிரியர்கள்

சென்னை : ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தை கைவிட்டு, நேற்று பள்ளிகளில் ஆஜராகினர். அதேநேரத்தில், தற்காலிக ஆசிரியர் நியமன நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு சார்பில், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இதில், அரசு துறை அலுவலக பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், அரசு ஊழியர்களை விட, ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தொடக்க பள்ளிகளை பூட்டிவிட்டு, போராட்டத்துக்கு சென்றதால், பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளியை பூட்டியதால், மாணவர்கள், ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே, அதிருப்தி அடைந்த மாணவர்களும், பெற்றோரும், பல இடங்களில், ஆசிரியர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். 'ஆண்டு இறுதி தேர்வு நடக்க உள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் கண்டிக்கத்தக்கது' என, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மனமாற்றம்


இதற்கிடையில், 'ஆசிரியர்கள், ஜன., 25க்குள் பணியில் சேர்ந்து விட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது' என, பள்ளி கல்வி துறை அறிவித்தது. அதையடுத்து, போராட்டத்தில் இருந்து, 25 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.
அதன்பின், 'ஜன., 28க்குள் பணிக்கு திரும்பினால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது. இல்லாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கையுடன், வேறு பணியிடத்துக்கு மாற்றப்படுவர்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர் எச்சரித்தனர். இந்த அறிவிப்பு, ஆசிரியர்களிடையே மேலும் பயத்தை ஏற்படுத்தியது.
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றத்தில் இருந்து

தப்பிக்க, பெரும்பாலான ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, நேற்று பணிக்கு திரும்பினர். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 70 சதவீதத்துக்கும் மேல், ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். சில பள்ளிகளில், 90 சதவீதம் பேர், பணிக்கு திரும்பி விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 லட்சம் பேர் தயார்


இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியுடன், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் முதுநிலை பட்ட படிப்பு முடித்தவர்கள் என, 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி பட்டியல், நேற்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்வு

செய்யப்பட்டோரின், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை, காலியாக அறிவித்து, அவற்றில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று இறுதி வாய்ப்பு


நேற்று மாலை, 5:00 மணிக்குள், பணியில் சேர முடியாத பலர், நேற்றிரவு, தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, பணிக்கு வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, இன்னொரு வாய்ப்பு வழங்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், முடிவு செய்துள்ளனர்.
அதையடுத்து, 'இன்று காலை, 9:00 மணிக்குள் பணிக்கு வந்து விட்டால், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் இடமாறுதலில் இருந்து தப்பிக்கலாம்' என, நேற்றிரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில், 'இன்று காலைக்குள், பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களை காலி என கருதி, அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
30-ஜன-201912:34:19 IST Report Abuse

G.Krishnanபோராட்டம் நடத்தும் ஆசிரியர்களை தனியார் பள்ளிகளுக்கு வேலைக்கு அனுப்பிவிடுங்கள். அங்கு சரியாக வேலைகளை செய்யவில்லையென்றால் பதவி நீக்கம் செய்து விடுங்கள். அப்பொழுதுதான் இவர்கள் அடங்குவார்கள்.. ஆசிரியரின் பணியென்பது மகத்தானது.. அதை கேலிக்கூத்தாக ஆக்கிவிடுகின்றனர் இன்றைய ஆசிரியர் என்ற போர்வையில் இருக்கும் இவர்கள், தகுதி தேர்வு வைக்க கூடாது. மண்ணாங்கட்டியாக இருப்பார்கள், இவர்கள் நடந்து பாடம் யாருக்குமே புரியாது, சம்பளம் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கவேண்டும், பென்ஷன் அதிகமாக வேண்டும். இந்த மாதிரியான ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் எப்படி நல்ல மாணவனாக வருவான், அடுத்த தலைமுறை எப்படி முன்னேறும்.. அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் எத்தனை மாணவர் எடுக்கிறார்களோ / தேர்ச்சி பெறுகிறார்களோ அதற்க்கு தகுந்த மாதிரி, சம்பள உயர்வு இன்ன பிற சலுகைகள் என்று சட்டம் போடவேண்டும்.

Rate this:
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
29-ஜன-201919:03:20 IST Report Abuse

chinnamanibalanஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் அளிக்கும் நடைமுறையை அரசு பின்பற்றி இருந்தால், ஆசிரியர்கள் அவர்கள் சொந்த ஊர்களில் இருந்து கொண்டு சுய தொழில் செய்யாமல், வெளி மாவட்டங்கள் சென்று சிறப்பாக கல்விப்பணி செய்து இருப்பார்கள். இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரமும் மிகவும் மேம்பட்டிருக்கும். அரசு இதனை முறையாக செய்திருந்தால், இன்றைய அவலம் நிச்சயம் ஏற்பட்டு இருக்காது.

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
29-ஜன-201921:11:15 IST Report Abuse

வல்வில் ஓரிமிகச் சரி ..மிக மிக சரி ...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-ஜன-201900:59:04 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஊழல் ஆசிரியர்களிடத்தில் இல்லை. கல்வித்துறை அமைச்சரிடம், கல்வித்துறை அதிகாரிகளிடம், வருடாவருடம் தனியார் பள்ளிகளை வரைமுறை படுத்துகிறோமென்று சொல்லி லட்சம் கோடிகளை கொள்ளையடிக்கும் துறையிடம் கேளுங்கள். தலை ஒழுங்காக இருந்தால் தவறு ஏன் நடக்கபோகுது. அரசின் திட்டமே தனியார் பள்ளிகளின் லஞ்சத்துக்காக அரசு பள்ளிகளை ஒழித்து கட்டுவது தான். கூக்குரல் போர்=டம் எந்த அடிமையோ, பண்டாரமோ அந்த 25,000 கோடி என்னவாயிற்று என்று மூச்சு விடக்காணோம்.. ரிட்டைய ஆன பிறகு என்ன செய்வோமென்ற பதட்டம் ஆசிரியர்களுக்கு வரக்கூடாதா? முட்டாள்களே. ...

Rate this:
G.Sivasubframanian - karur,இந்தியா
30-ஜன-201912:18:06 IST Report Abuse

G.Sivasubframanianவசைபாட வேண்டாம். புனைபெயரில் எழுதுவதால் இந்த வேகம். ...

Rate this:
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
01-பிப்-201910:32:27 IST Report Abuse

Mohan Sundarrajarao. அவர்கள் மேலும் மேலும் தவறு செய்துகொண்டே போகிறார்கள். ...

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
29-ஜன-201918:58:21 IST Report Abuse

Devanand Louisதமிழ்நாட்டில் போராட்டங்களை தூண்டிவிடும் ஸ்டாலின் + போராட்டக்காரர்களின் வேண்டுதலை தங்கள் 2- ஜீ இல் அடித்த கொள்ளை பணத்தை (1 .73 லட்சம் கோடியில் ) போராட்டக்காரர்களுக்கு( ஜாக்டோ ஜியோ,ஜாக் ஜியோ ,தொ,மு,ச மற்றும் பல அல்லக்கைகள் சங்கங்கள்) வழங்கவேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் ,ஆகையால் அந்த பணத்திலிருந்து இந்திய நாட்டிற்க்கே பணம் வழங்கலாம் ஸ்டாலின் ,இந்த யோசனையை நீங்கள் கட்டாயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்துள்ளது ஸ்டாலின் ,நீங்கள் எந்த அளவிற்கு போராட்டங்களை தூண்டிவிடுகிறீர்களோ அந்த அளவிற்கு அந்த கொள்ளை பணத்திலிருந்து வழங்கவும் ஸ்டாலின் .

Rate this:
மேலும் 121 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X