விஷ வாயு வழக்கு: ஏப்ரலில் விசாரணை

Updated : ஜன 28, 2019 | Added : ஜன 28, 2019 | கருத்துகள் (7)
Advertisement
விஷ வாயு, வழக்கு, ஏப்ரல், விசாரணை

புதுடில்லி, 'போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், கூடுதலாக 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரும் மத்திய அரசின் மனு, ஏப்ரலில் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. உடல் உபாதைகள்இங்கு, அமெரிக்காவைச் சேர்ந்த, 'யூனியன் கார்பைடு' என்ற நிறுவனம் நடத்தி வந்த, பூச்சிக் கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984ல் விஷ வாயு கசிவு ஏற்பட்டது.இதில், 3,000 பேர் பலியாகினர்; ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாகினர்.உயிரிழந்தோர் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு, அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம், 715 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது.


கோரிக்கை

இந்நிலையில், உயிர் பிழைத்தோர், தங்களின்தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்காக,கூடுதல் இழப்பீடு வழங்கும்படி கோரிக்கைவைத்து வருகின்றனர். இதையடுத்து, 'யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி, தற்போது நடத்தி வரும், 'டவ் கெமிக்கல்ஸ்' என்ற அமெரிக்க நிறுவனம், கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'கூடுதல் இழப்பீடு கேட்டு, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு, வரும், ஏப்ரலில் விசாரிக்கப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-201919:09:23 IST Report Abuse
ஆப்பு 1984 ல் கசிந்த விஷவாயு. அந்த வழக்கை இன்னுமா விசாரிக்கறாங்க? நடுவுல பா.ஜ கூட ஒரு 7,8 வருஷம் ஆட்சி செஞ்சாங்களே? நீதித்துறையின் திறமையின்மைக்கு இது ஒரு சான்று.
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
29-ஜன-201910:05:22 IST Report Abuse
THENNAVAN ஜாலியன் வாலாபாக் கொலை செய்த டயர் என்ற மேஜரை 1988 இந்தியா ஜவான் பழிக்கு பலியாக லண்டனில் வைத்து சுட்டு கொன்றார் ,ஆனால் அன்று ராஜிவ் கான் மற்றும் அன்றைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இருவரும் 8000 இந்தியா அப்பாவி கிராமத்து மக்களை கொன்ற விஷவாயு முதலாளி ஆண்டர்சனை ,அரசுக்கு சொந்தமான கெலிகாப்ப்டரில் பாதுகாப்பாக போபாலிலிருந்து டெல்லிக்கு கூட்டி சென்று அமரிக்காவிற்கு தப்பி செல்ல வைத்தனர் ஆனால் பல லட்சம் மக்களை இன்றுவரை அந்த பாதிப்பிலிருந்து காக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இத்தாலி கும்மல் ஏமாற்றி வருகிறது ,அமெரிக்காவின் கம்பெனிக்கு சார்பாக ஆஜர் அனா இந்தியா வக்கீல்களின் பட்டியல் ,பி சி ,கபில்சிப,மனிஷ் திவாரி,இன்னும் பலர் இவர்களின் வாரிசுகள் சுகமாக வாழவேண்டும் ஆனால் உயிருக்கு போராடி போபால் மக்கள் சாகனும்
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
29-ஜன-201909:39:38 IST Report Abuse
suresh kumar 35 வருஷம் முடிஞ்சிருச்சு. இன்னுமா இழுத்தடிக்கிறாங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X