கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போராட்டத்தை வாபஸ் பெறுங்கள்
ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: தேர்வு நடக்க உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி, போராட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

போராட்டத்தை,வாபஸ் பெறுங்கள்,ஆசிரியர்களுக்கு,ஐகோர்ட்,அறிவுரை


ஜாக்டோ - ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற, திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் ஒருவர், ௨௦௧௭ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதை எதிர்த்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், சிறப்பு பிளீடர், முனுசாமி, ஆசிரியர்கள் சங்கம் தரப்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன் ஆஜராகினர்.அப்போது, நீதிபதி, கிருபாகரன் கூறியதாவது:தற்போது நடக்கும் ஆசிரியர்களின் போராட்டத்தால், ஏழை எளிய மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.அதுவும், தேர்வு நடக்கும் நேரத்தில், போராடுகின்றனர். ஆசிரியர்களை, தெய்வமாக மதிக்கிறோம். நான், நீதிபதியாக பதவியேற்கும்போது, என் முதல் வகுப்பு ஆசிரியர் பெயரை குறிப்பிட்டுஇருந்தேன்.

போலீசார் போராடினால், சட்டம் - ஒழுங்கு கெடும்; டாக்டர்கள் போராடினால், நோயாளிகளுக்கு பாதிப்பு வரும்; ஆசிரியர்கள் போராடினால், அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களிடம், எந்த அளவுக்கு வேலை வாங்கப்படுகிறது.நீதிமன்றத்தில், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு, ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வருகின்றன.

அதில், பட்டதாரிகள் நிறைய பேர் உள்ளனர். இன்ஜினியரிங் படித்தோர், 5,000 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றுகின்றனர். கூரியர், ஓட்டல்களில், பட்டதாரிகள் பணிபுரிகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டம்,

வேறு எந்த மாநிலத்திலாவது அமல்படுத்தப்பட்டுள்ளதா; பழைய ஓய்வூதியம் கிடையாது என தெரிந்து தானே, பணிக்கு வருகின்றனர்.

அது, மீண்டும் நடைமுறைக்கு வருவது எப்படி சாத்தியம்; தெருவுக்கு வந்து போராட, ஆசிரியர்கள் ஒன்றும் தொழிலாளர்கள் அல்ல.போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த நேரம் சரியல்ல. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், உயர் அதிகாரிகளை, சங்கதலைவர்கள் அவதுாறாக பேசுவது சரியல்ல.

தனியார் பள்ளிகளில் படிக்கும், உங்கள் குழந்தைகளுக்கு, போராட்டத்தை கைவிடும் வரை பாடம் நடத்தக் கூடாது என்றால், அதை ஏற்பீர்களா; தேர்வு நேரத்தை கருதி, இந்த கல்வியாண்டு முடியும் வரை, போராட்டத்தை கைவிட வேண்டும்.அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை, நாளை கூறுங்கள்.ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் முன், இந்தப் போராட்டம் குறித்த வழக்கு, நிலுவையில் உள்ளது என்பது தெரியும். மாணவர்களின் நலன் கருதி, பிரச்னைக்கு தீர்வு காண, இது ஒரு முயற்சி தான். 'டிவிஷன் பெஞ்ச்' அதிகாரத்தில், நான் தலையிடுவதாக, கருதக் கூடாது.இவ்வாறு, நீதிபதி கூறினார்.

ஆசிரியர்கள் தரப்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன், ''இது திடீரென நடந்த போராட்டம் அல்ல; நீண்ட காலமாக, இந்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசு தரப்பில், நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார். ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவது குறித்து, நாளை தெரிவிக்கும்படி, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

'ஜாக்டோ - ஜியோவுடன் பேச்சு இல்லை'


'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை' என,தமிழக அரசுத் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப் பட்டது.'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்துக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று, நீதிபதிகள், கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன் நடந்தது.

Advertisement

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பாதிக்கக் கூடாது என்பதால், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
நீதிபதிகள்: ஏற்கனவே, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, தற்காலிக பணி நியமனம் என்பது மேலும் பிரச்னை; குழப்பத்திற்கு வழிவகுக்கும். வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஜாக்டோ - ஜியோ மூத்த வழக்கறிஞர்: முதலில், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.
நீதிபதிகள், 'அரசிடம் கூடுதல் விபரம் பெற்று, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி, சிறிது நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.மீண்டும் விசாரணை துவங்கிய போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'பேச்சு நடத்த வாய்ப்பில்லை' என, நீதிபதிகளிடம் தெரிவித்தார்.நீதிபதிகள்: தங்கள் பிரச்னைக்கு நிவாரணம் கோரி, சட்டரீதியாக ஜாக்டோ - ஜியோ தரப்பில், நீதிமன்றத்தை நாடவில்லை. நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.போராட்டத்திற்கு தடை கோரி, இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின் தான், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறீர்கள்.
அரசும், தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. விசாரணை, பிப்., 18க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
01-பிப்-201909:01:55 IST Report Abuse

Rajarajanஅரசு ஊழியர் மற்றும் அரசு ஆசிரியரே தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் சேர்க்காதபோது, அதன் தரம் மற்றும் லட்சணம் தெரிந்த ஒன்று தான். ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி. உங்கள் ஹோட்டலின் சப்ளையர் எங்கே என்று வந்தவர் கேட்பார். அவர்கள் அனைவரும், பக்கத்து ஹோட்டலில் உணவு உண்ண சென்றிருக்கிறார்கள் என்று சப்ளையர் கூறுவார். அந்த அழகில் தான் உள்ளது இவர்கள் தரத்தின் லட்சணம்.

Rate this:
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜன-201914:10:04 IST Report Abuse

Brindha Sundarஅடுத்த தலைமுறை எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில் ஆசிரியர்களின் போராட்டம், அவர்கள் மீது வைத்துள்ள மரியாதையை குலைக்கும்.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
29-ஜன-201913:37:32 IST Report Abuse

C.Elumalaiபோராடும் ஆசிரியரிகளிடம், நீதியரசரின் அறிவுரை எடுபடுமா?.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X