Former HP CM Virbhadra Singh Diagonsed With Swine Flu | வீரபத்திரசிங்கிற்கு பன்றிக்காய்ச்சல்| Dinamalar

வீரபத்திரசிங்கிற்கு பன்றிக்காய்ச்சல்

Updated : ஜன 29, 2019 | Added : ஜன 29, 2019 | கருத்துகள் (9)
வீரபத்திரசிங், பன்றிக்காய்ச்சல்

ஷிம்லா: இமாச்சல் பிரதேச முன்னாள்முதல்வர் வீரபத்திர சிங் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





இமாச்சல்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங்,84 நேற்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
அவரை பரிசோதித்த டாக்டர்கள் எச்1 என் 1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதே மருத்துவமனையில் கடந்த சிலநாட்களுக்கு முன் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலியானதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X