பள்ளிகளில் சமஸ்கிருத சுலோகம்: அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்

Updated : ஜன 29, 2019 | Added : ஜன 29, 2019 | கருத்துகள் (72)
Advertisement
பள்ளிகளில்,சமஸ்கிருத சுலோகம்,அரசியல் சாசன அமர்வு,விசாரிக்கும்

புதுடில்லி: 'பள்ளிகளில், காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், சமஸ்கிருத சுலோகம் சொல்வது, மதச் சடங்கை புகுத்துவதாகாது' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசால், நாடு முழுவதும் நடத்தப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சுலோகங்கள் சொல்வது, கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த வழக்கறிஞர், விநாயக் ஷா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி, ரோஹின்டன் எப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டதாவது: பள்ளிகளில், 'அஸதோ மா ஸத்கமய' என துவங்கும் சமஸ்கிருத சுலோகம் பாடப்படுவது, மதத்தை புகுத்துவதாகாது. எல்லா மதங்களும் கூறும் பொதுவான உண்மையை, இந்த சுலோகம் போதிக்கிறது. சமஸ்கிருத மொழியில் இருப்பதால், மதத்தை புகுத்துவதாக கூற முடியாது. கிறிஸ்தவ பள்ளிகளில், 'நேர்மை சிறந்த கொள்கை' என பொருள்படும், 'ஹானஸ்டி இஸ் தி பெஸ்ட் பாலிசி' என்ற ஆங்கில வாசகம் போதிக்கப்படுகிறது. அது, மதவாத கருத்தாகுமா... அப்படி நான் நினைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் சுலோகம் கூட, பகவத் கீதையின் வாசகமே. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, இதை, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும். இதற்கான குறிப்பு, தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும். அவர், இந்த வழக்கை விசாரிப்பதற்கென, அரசியல் சாசன அமர்வை அமைப்பார். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-201916:45:02 IST Report Abuse
நக்கல் இந்த ஜனநாயகம் வேலை செய்யவில்லை... காங்ரெஸ் கம்மீஸ்கள் எல்லாத்தையும் இத்தனை வருடங்களில் அன்னியன் கிட்ட வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கெடுத்து வைத்திருக்கிறார்கள.. இந்து கலாச்சாரம் பாரம்பரியத்தை காக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சிதான் தேவை... அதை BJP/RSS ஆல் மட்டும் தான் கொடுக்கமுடியும்... இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து BJP தனிப் பெரும்பான்மை கிடைக்க செய்யவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
29-ஜன-201914:04:12 IST Report Abuse
Snake Babu இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, இதை, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும். நீதிபதி அவர்களே இப்படி சொல்லி இருக்கிறார், நண்பர்கள் கருத்துக்களை பார்க்கும் போது எப்படி எப்படியோ தங்களுடைய வெறுப்புகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள், எல்லோரும் அவங்கவங்க மதத்திலேயே இருங்கப்பா.... தர்காவுல போய் யாரும் சமஸ்கிருதம் படிக்க சொல்லவில்லை அது யாரும் திணிக்க முடியாது, அதுபோல கேந்திரிய வித்தியாலயா அது ஒரு பொதுவான பள்ளி இதற்கு தான் இந்த ஆகப்போறு கருத்து சண்டைபோடுகிறேன் என்று சர்ச்சில் ஆமென் சொல்வதில்லையா என்கிறீர்கள் சர்ச்சில் ஆமென் என்று தான் சொல்லுவார்கள், முதலில் ஒன்றை தெளிவாகி கொள்வோம், நான் ஒரு ஹிந்து, கண்டிப்பாக அதில் நான் ஒரு பெருமை கொள்கிறேன். நன்றி தினமலர் கருத்தை அப்படியே போட்டால் நன்றாக இருக்கும் நன்றி. பள்ளி என்பது பொதுவான ஒன்றை ஒவ்வொரு மத காரரும் பள்ளிவைத்திருக்கிறார்கள், அதில் அவர்கள் நினைத்தை பாடுகிறார்கள் அதில் தவறு இல்லை கேந்திரிய வித்தியாலய அப்படி அல்ல அது பொதுவான பள்ளி அதனால் தான் இப்படி ஒரு வழக்கு இதுதான் சாக்கு என்று தமிழை பழிக்காதீர்கள், தமிழிலே பேசி தமிழே வாழ்ந்து நன்றாக தின்று கொண்டு தமிழை பழிக்கும் வேலைசெய்வது பெரும் பாவம் தமிழின் தொன்மை வலிமை பற்றி உங்களுக்கு தெரியும், ஆனால் சமஸ்கிருதத்தை முன்னிறுத்த வேண்டுமே என்ற திமிரில் தமிழை பின்னுக்கு தள்ளுகிறீர்கள். சரி அது அப்படியே இருக்கட்டும். ஒரு பொதுவான பள்ளியில் ஒரு புரியாத பாஷை தேவையா..... அந்தந்த மாநிலத்து மொழியில் கூறலாமே, அய்யா இதை நான் ராமகிருஷ்ண பள்ளிகளுக்கு சொல்லவில்லை. மத்திய அரசு பலியான கென்றாயா விதயலயாவுக்கு சொல்கிறேன் கண்டிப்பாக அது ஹிண்டுபள்ளி என கூறமுடியாது இந்திய நாடு ஹிந்து நாடு அல்ல அதேபோல அந்த பள்ளி ஹிந்து பள்ளி அல்ல அப்படி இருக்கும் சமஸ்கிருதத்தை ஏன் திணிக்க வேண்டும் ஸ்லோகம் மந்திரங்கள் உள் அர்த்தங்கள் நன்றாகவே தெரியும் உபநிஷத்து பிரம்மசூத்திரம் நன்றாகவே படிக்கவரும் நான் கூறவருவது அரசுப்பள்ளியில் பலபிறவினரும் படிக்கும் இடத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது தவறு என்று தான் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
29-ஜன-201915:45:16 IST Report Abuse
Darmavanஇந்துக்கள் என்று வரும்போது அது பொதுவான பள்ளி, மதர்ஸாவும் கிருஸ்துவமும் மதப்பள்ளிகள்... இதுவே பச்சோந்தித்தனம்...
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
29-ஜன-201915:48:58 IST Report Abuse
Darmavanஇது இந்து நாடாளு இல்லை என்பதே (முஸ்லிம்களுக்கு நாடு கொடுத்திவிட்டு இதிலும் பங்கு)கண்டி/ நேரு இந்துக்களுக்கு செய்த துரோகம்.இதை நியாயப்படுத்த முடியாது. இந்த பொது பணத்தில் மெஜாரிட்டி பங்கு இந்துக்களுடையது....
Rate this:
Share this comment
Cancel
VIJAIAN C -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201913:14:51 IST Report Abuse
VIJAIAN C Then why u Muslims are so backward in fact even below than SC/ST in economic condition????why are u expecting quota,
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
29-ஜன-201915:53:41 IST Report Abuse
DarmavanReason for Muslim backwardness (artificial) is polygamy and no birth control .fabricated reports hide these real facts...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X