ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

Updated : ஜன 29, 2019 | Added : ஜன 29, 2019 | கருத்துகள் (60)
Advertisement

புதுடில்லி: முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இன்று (29ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.







கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். விபி சிங் பிரதமராக இருந்த போது பெர்னாண்டஸ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்தது.






ஜனதாதளம் கட்சி மூலம் அரசியலுக்கு வந்தார். தொழிற்சங்க தலைவராக இருந்து நாடு முழுவதும் பலரை கவர்ந்தார். இந்திரா எமர்ஜென்ஸி அறிவித்த போது கடுமையாக எதிர்த்தார். சமீபகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது.





இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். எளிமையாக வாழ்ந்தவர் என்று பெயர் பெற்றுள்ளார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-201908:33:18 IST Report Abuse
kulandhai Kannan மிக நேர்மையான அரசியல்வாதி. ஆனால் ஒன்று, பெரும்பாலான கம்யூனிச, சோஷலிச, ஏழை பங்காள அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளைப் போல இவருடைய வாரிசும் முதலாளித்துவ அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
30-ஜன-201908:31:37 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் இங்கேதான் தொழிற்சங்கம் அது இதுன்னு போராடி நாட்டைக் கெடுப்பாங்க. இவரோட மகன் அமெரிக்காவிலிருந்து வந்துதான் இறுதிச் சடங்கு நடக்கணுமாம்.
Rate this:
Share this comment
Cancel
umari siva - tambaram,இந்தியா
30-ஜன-201908:18:03 IST Report Abuse
umari siva துணிச்சலான சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்ட எவரும் எப்போதும் சந்தித்து குறைகளை சொல்லி நிவர்த்தி பெற ஏற்ற மனிதர். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து வருத்தம் அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X